கடல் பாறைக்கு மேல் கட்டப்பட்டுள்ள அதிசய சிவன் கோவில் – வீடியோ

Bhadkeshwar temple

கடல் அலைகள் தழும்பை, கடற் பாறையின் மேல் கட்டப்பட்டுள்ள ஒரு அருப்புதமான கோவில் தான் படகேஸ்வர் மஹாதேவ் மந்திர் கோவில். வருடத்தின் பெரும்பாலான நாட்களில் கடல் அலைகளால் சூழப்பட்டிருக்கும் இந்த சிவன் கோவின் மூலவராக சந்திரமௌலீஸ்வரர் வீற்றிருக்கிறார். இதோ அந்த கோவிலின் வீடியோ பதிவு.

தகவலை வாட்சாப்பில் பகிர கிளிக் செய்யவும்:

துவாரகையில் பல சிறப்பு மிக்க கோவில்கள் உள்ளன. அதில் ஒன்று தான் படகேஸ்வர் மஹாதேவ் மந்திர் கோவில். கடல் அலைகள் அதிகம் உள்ள நாட்களில் இந்த கோயிலிற்கு யாரும் செல்ல முடியாது. அலை குறைவாக இருக்கும் சமயங்களில் பக்தர்கள் சென்று சிவனை வழிபட்டு வருகின்றனர். காலை ஐந்து மணி முதல் பகல் பனிரெண்டு மணி வரையும் மாலை நான்கு மணி முதல் இரவு ஒன்பது மணி வரையும் பக்தர்கள் இங்கு அனுமதிக்க படுகின்றனர்.

துவாரகைக்கு செல்லும் பலர் இந்த கோயிலிற்கு சென்று மறக்காமல் சிவனை தரிசிப்பதுண்டு. அந்த அளவிற்கு இந்த கோவில் உலக புகழ்பெற்று விளங்குகிறது. அதோடு அறிவியலாளர்கள் அசரும் வண்ணம் இந்த கோவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சுமார் 5000 வருடங்களுக்கு முன்பு இங்கு சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டு அதன் பிறகு இங்கு கோவில் அமைந்ததாக கூறப்படுகிறது.