கொடி மர வழிபாடு

kodimara valipadu
- Advertisement -

ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்ற பழமொழியை பலரும் கேட்டிருப்போம். கோவிலுக்கு சென்று வழிபடும் பொழுது இருக்கக்கூடிய பலன்கள் வீட்டில் இருந்து வழிபடும் பொழுது கிடைப்பதில்லை என்றும் பலர் கூறி இருப்பார்கள். இதற்கு காரணம் கோவிலில் இருக்கக்கூடிய நேர்மறை ஆற்றல்கள் தான் ஒரு கோவிலுக்கு செல்லும் பொழுது அந்த கோவிலில் எந்த முறையில் வழிபட வேண்டும் என்ற விதிமுறைகள் இருக்கின்றன. எந்தெந்த இடத்தில் வழிபட வேண்டும் எப்படி வழிபட வேண்டும் என்று பல குறிப்புகள் இருக்கின்றன. ஆனால் பணம் ரீதியான பிரச்சினைகள் சரியாக வேண்டும் என்றால் எந்த இடத்தில் வழிபட வேண்டும் என்று குறிப்பாக கூறுவது கிடையாது. இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பணரீதியான வேண்டுதல்கள் நிறைவேறுவதற்கு கொடி மரத்தை எந்த முறையில் வழிபட வேண்டும் என்றுதான் பார்க்கப் போகிறோம்.

கோவிலில் நாம் வழிபடும் பொழுது கோவிலை விட்டு வெளியே வருவதற்கு முன் கொடிமரத்திற்கு முன்பாக விழுந்து கும்பிட்டு விட்டு சிறிது நேரம் அமர்ந்துவிட்டு வருவோம். இதே பெருமாள் ஆலயமாக இருந்தால் அமராமல் அப்படியே வந்து விடுவோம். கொடி மரத்தின் முன்புதான் விழுந்து வணங்க வேண்டும் என்ற ஒரு நீதி இருக்கிறது. அதேபோல் கோவிலை வலம் வர வேண்டும் என்றாலும் நாம் கொடி மரத்தில் இருந்து தான் வலம் வர ஆரம்பிப்போம். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த கொடிமரத்தை நாம் எந்த முறையில் வழிபட வேண்டும் என்று பார்ப்போம்.

- Advertisement -

திருஞானசம்பந்தரிடம் பணம் இல்லாத சூழ்நிலையில் உதவிக்காக வந்தவருக்கு பணத்தை தருவதற்கு வழியில்லாமல் வருத்தப்பட்டு அருகில் இருக்கும் சிவாலயத்திற்கு சென்று கொடி மரத்தின் முன்பாக நின்று பதிகம் பாடினார். அப்படி பாடிய பொழுது சிவலோகத்தில் இருந்து சிவ கணம் வந்து கொடிமரத்தின் முன்பாக பொற்காசு மூட்டையை வைத்து விட்டு சென்றதாக புராணம் கூறுகிறது. அந்த பதிகத்தை நாம் தினமும் பாடினோம் என்றால் நம்முடைய வறுமை நிலை மாறி செல்வ செழிப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது.

நல்ல தேங்காயாக ஒரு தேங்காயை வாங்கிக் கொள்ளுங்கள். அந்த தேங்காயை கையில் வைத்துக் கொண்டு ஆலயத்திற்குள் சென்று அனைத்து தெய்வங்களையும் வழிபாடு செய்து விட வேண்டும். பிறகு கடைசியாக கொடி மரத்தில் வந்து தேங்காயை கொடி மரத்திற்கு முன்பாக வைத்துவிட்டு கோவிலை வலம் வரும்போது தேங்காயை உருட்டிக்கொண்டு வலம் வரவேண்டும். ஒருமுறை வலம் வந்த பிறகு இந்த தேங்காயை கொடி மரத்திற்கு முன்பாக சிதற தேங்காயாக உடைத்து விட்டு நம்முடைய மோதிர விரலை வைத்து கொடி மரத்தை தொட்டு வணங்க வேண்டும்.

- Advertisement -

இந்த வழிபாட்டை வாரத்தில் எந்த கிழமை வேண்டுமானாலும் செய்யலாம். ஆரம்பிக்கும் நாள் என்பது பௌர்ணமியாக இருந்தால் மிகவும் சிறப்பு. எந்த கிழமையில் நாம் இந்த வழிபாட்டை ஆரம்பிக்கிறோமோ அதே கிழமையில் தான் தொடர்ந்து ஏழு வாரங்கள் இந்த வழிபாட்டை செய்ய வேண்டும். இரண்டாவது வாரம் தேங்காய்க்கு பதிலாக ஒரு மாதுளம் பழத்தை வைத்து இதே முறையில் உருட்டிவிட்டு வலம் வர வேண்டும்.

பிறகு இந்த மாதுளம் பழத்தை உடைத்து அதில் இருக்கக்கூடிய மாதுளம் பழம் முத்துக்களை அங்கு இருக்கும் பக்தர்களுக்கு பகிர்ந்து கொடுக்க வேண்டும். இப்படி 1, 3, 5, 7 போன்ற வாரங்களில் தேங்காயையும், 2, 4, 6 போன்ற வாரங்களில் மாதுளம் பழத்தையும் வைத்து இந்த வழிபாட்டை செய்யும்பொழுது நம்முடைய பணம் தொடர்பான வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறும்.

இதையும் படிக்கலாமே: தீய சக்தி விலக கடல் தண்ணீர் பரிகாரம்

மிகவும் எளிமையான இந்த வழிபாட்டை முழு நம்பிக்கையுடன் செய்பவர்களுக்கு எப்படி திருஞானசம்பந்தருக்கு பொற்காசு மூட்டைகள் கிடைத்ததோ அதேபோல் நம் உழைப்பிற்கு ஏற்ற வருமானம் கிடைத்து வாழ்க்கையில் நல்ல முன்னேற்ற நிலையை அடைவோம்.

- Advertisement -