5000 ஆண்டுகளுக்கு முன்பாகவே கலியுகம் எப்படி இருக்கும் என்பதை சொன்ன ‘பாகவத புராணம்’.

viyasar2
- Advertisement -

கலியுகத்தில் நடக்கப்போவது என்ன? இந்த பூமியில் நமக்கு முன்பு வாழ்ந்து சென்ற ரிஷிகளும், முனிவர்களும், கலியுகத்தில் என்ன நடக்கப்போகிறது என்பதை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே கூறிவிட்டு  சென்றுள்ளார்கள் என்றால், அதை உங்களால் நம்ப முடியுமா? அவர்கள் எழுதி வைத்து சென்றுள்ள பல நூல்களில் இருக்கும் குறிப்புகள் இன்று அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது என்பதையும் நாம் நம்பித்தான் ஆகவேண்டும். இதனடிப்படையில் வியாசர் எழுதிய ஒரு நூல் குறிப்பை பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

viyasar

வேதங்களை நான்காகப் பிரித்த முனிவர் வியாசர். இதன் மூலம் இவருக்கு ‘வேதவியாசர்’ என்ற மற்றொரு பெயரும் உண்டு. வியாசர் எழுதிய சிறப்பு வாய்ந்த ஒரு நூல்தான் ‘பாகவத புராணம்’.  தற்போது உள்ள கலியுகம் எப்படி இருக்கும், என்பதை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே வியாசரால் எப்படி கணிக்க முடிந்தது? அவர் பாகவத புராணத்தில் எழுதி வைத்திருந்த குறிப்புகள் அனைத்தும் தற்போது உள்ள சூழ்நிலைக்கு பொருந்திப் போகிறது என்பதை நீங்களும் தெரிந்துகொண்டால், நிச்சயமாக ஆச்சரியத்தில் மூழ்கி விடுவீர்கள். அப்படி என்னதான் இந்த நூலில் எழுதி உள்ளது என்பதை பார்த்துவிடுவோமா?

- Advertisement -

இந்தக் கலியுகத்தில் உண்மை, தூய்மை, அறநெறி, பொறுமை, கருணை, ஆயுட்காலம், உடல் வலிமை, ஞாபகசக்தி இவை அனைத்தும் மனிதர்களுக்கு நாளுக்குநாள் குறைந்து கொண்டே செல்லும்.

viyasar1

ஒரு மனிதனுக்கு இருக்கக்கூடிய நல்ல பழக்கவழக்கங்கள், பண்புகள் இவற்றை வைத்து அவனை செல்வந்தர்கள் என்று சொல்லமாட்டார்கள். எந்த வழியில் சென்று, சம்பாதித்து வைத்து இருந்தாலும் சரி, அதிகப்படியான பொருட்செல்வம் எந்த இடத்தில் உள்ளதோ, அந்த மனிதனை தான் செல்வம் உடைய மனிதன் என்றும், மதிப்புமிக்க மனிதன் என்றும் சொல்லுவார்கள்.

- Advertisement -

வெற்றி என்பது நேர்மையாக இருக்காது. பலவகையான சூழ்ச்சமமும், குறுக்கு வழியும், வஞ்சகமும் சேர்ந்ததுதான் வெற்றியாக அமைந்திருக்கும்.

ஒருவருடைய வெளித்தோற்றத்தை வைத்து தான் அவரை மகான், ஞானி என்று சொல்லுவார்கள். அதாவது கண்களால் காணும் போலி வேஷத்திற்கும், வித்தைக்கும் மயங்கி போலியான குருமார்களை நம்பி வழிதவறி செல்வார்கள்.

- Advertisement -

munivar

பணமில்லாமல், ஏழ்மை நிலையில் இருக்கப்படும் ஒருவன் தீண்டத்தகாதவன் ஆக தள்ளிவைக்க படுவான். மனதில் பலவிதமான அழுக்கோடு வெளித்தோற்றத்தை அழகாக வைத்துக் கொள்பவன் தூய்மையானவன் என்று சொல்லப்படுவான்.

பகட்டான வாழ்க்கைக்கும், அலங்கார ஆடம்பரமான வாழ்க்கைக்கும் தான் ஏங்குவார்கள். வயிற்றை நிரப்புவது மட்டுமே ஒருவரது வாழ்க்கையின் குறிக்கோளாக அமையும். பலவகைப்பட்ட மதங்கள், ஆட்களை சேர்த்து கொள்வதை மட்டுமே லட்சியமாக வைத்திருக்கும்.

தன்னுடைய சமூகத்தில் யார் தன்னை பலமானவர் என்று காட்டிக் கொள்கிறாரோ, அவர் அரசாளும் அதிகாரத்தை பெறுவார்கள்.

weather change

மக்களின் தலையில் அதிகப்படியான வரிகள் விதிக்கப்படும். மக்கள் உண்ண உணவின்றி, இலை, வேர், விதை இவைகளை உண்ண தொடங்கிவிடுவார்கள். மக்களின் அலட்சியப் போக்கால் கடுமையான பருவநிலை மாற்றத்திற்கு ஆளாகி விடுவார்கள். கால சீதோசன நிலை மாறிவிடும். அதிகப்படியான துன்பம் நிறைந்த வாழ்க்கையில் சிக்கிக் கொள்வார்கள்.

கடுமையான குளிர், வெப்பம், புயல், கனமழை அதிகப்படியான பணி, வெள்ளம் போன்ற இயற்கை சம்பந்தப்பட்ட பேரழிவில் மக்கள் சிக்கி தவிப்பார்கள். இதன் மூலம் பசி, பஞ்சம், தாக்கும், நோய், தேவையற்ற பயம் நிம்மதியற்ற தன்மையில் மக்கள் சிக்கி தவிப்பார்கள். கண்ணுக்குத் தெரியாத நோய்நொடிகளால் மரணத்தில் சிக்கிக் கொள்வார்கள்.

கலியுகத்தின் கொடுமையினால் மனிதனின் சராசரி ஆயுட்காலம் 50 ஆண்டுகளாக குறைந்துவிடும்.

weather-change1

தங்களுடைய பெற்றோர்களை இறுதிகாலத்தில் கவனித்துக் கொள்ள வேண்டிய கடமையை மகன் மறந்து விடுவான்.

பணத்திற்காக உறவுகளுக்கிடையே, நட்புக்கிடையே பிரச்சனைகள் வந்து, அவர்களுக்குள்ளேயே அடித்துக்கொண்டு, கொள்ளுமளவிற்கு கூட செல்வார்கள்.

வெறும் பெயர், புகழுக்காகவே தான தர்ம காரியங்களில் ஈடுபடுவார்கள். தற்பெருமைக்காக தங்களுடைய வாழ்க்கையை ஆடம்பரமாக வாழ்வார்கள்.

olai-chuvadi

பல நாட்கள் உழைத்த தொழிலாளியை, ஒரே நாளில் முதலாளியாகப்பட்டவன் தூக்கி எறிந்து விடுவான். காரணம் அவனால் இனி உபயோகம் இல்லை, என்ற சூழ்நிலை. சுயநலத்தோடு நடந்துகொள்ளும் முதலாளித்துவம் நிலவும்.

கொலை கொள்ளை அதிகமாக நடக்கும். வேத நூல்கள் திருடர்களால் திருடப்பட்டு, தவறான முறையில் மொழிபெயர்க்கப்படும். தவறான சாஸ்திர முறைகளை மக்களுக்கிடையே பரப்பி விடுவார்கள்.

sivan

இன்றைக்கு நம் உலகம் இருக்கும் சூழ்நிலையை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக வியாசரால் எப்படி சொல்ல முடிந்தது? என்று சிந்திப்பவர்களுக்கு கேள்வி மட்டும் தான் மிஞ்சும்.

இவ்வளவு பிரச்சனைகள் நம்மை சூழ்ந்திருக்க இதில் இருந்து நம்மை நாமே எப்படி காத்துக் கொள்ள முடியும்? தர்ம வழியில் நின்று இறைவனின் பாதங்களை சரணடைவது மட்டும் தான் ஒரே வழி.

இதையும் படிக்கலாமே
எதிர்பாராத இன்றைய சூழ்நிலையில், நஷ்டத்தை சந்தித்த தொழில்கள் அனைத்தும், விரைவாக லாபத்தை அடைய என்ன செய்வது? சில முறையான பரிகாரங்கள்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Kali yuga predictions Bhagavatam. Bhagavata puranam Tamil. Srimad bhagavata purana Tamil. Srimad bhagavata puranam Tamil.

- Advertisement -