உங்கள் குடும்ப கஷ்டங்கள் நீங்க, லாபங்கள் பெருக இதை செய்யுங்கள்

surya

முற்காலங்களில் மன்னர்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் மக்களின் நலம் மற்றும் உடல் நலத்திற்காக ஹோமங்கள் மற்றும் யாகங்களை செய்தனர். இந்த யாகங்கள் மற்றும்ஹோம பூஜைகளில் பயன்படுத்தப்படும் மந்திரங்களின் அதிர்வுகள் மற்றும் சில ரகசிய தந்திர முறைகள் கையாளப்படுவதால் நிச்சயமாக பலன்களை அளிக்கின்றன என்பது பலரின் அனுபவம் ஆகும். ஹோமங்களில் பல வகைகள் இருக்கின்றன. அதில் மிக சக்தி வாய்ந்த ஹோமமாக பாக்ய சூக்த ஹோமம் இருக்கிறது. இந்த பாக்ய சூக்த ஹோமம் செய்வதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.

surya-viratham

பாக்ய எனப்படும் தேவர் மனிதர்களுக்கு சகல பாக்கியங்களையும், யோகங்களையும் தரும் ஆற்றல் மிக்கவராக இருக்கிறார். இந்த பாக்ய தேவர் சூரிய பகவானின் ஒரு அம்சமாக கருதப்படுபவர். அப்படியான அந்த பாக்ய தேவரின் அருளாசிகளைப் பெற செய்யப்படும் ஹோமம் தான் பாக்கிய சூக்த ஹோமம் ஆகும். அதிகம் பேர் விரும்பி செய்யக்கூடிய ஒரு ஹோம பூஜை வகையாக இது இருக்கிறது.

பாக்ய சூக்த ஹோமத்தை அனுபவம் வாய்ந்த வேதியர்கள் கொண்டு செய்வதே சாலச் சிறந்ததாகும். இந்த ஹோமத்தை வீட்டிலேயே செய்யலாம் அல்லது கோயிலில் உங்கள் பிறந்த ராசி, நட்சத்திரம் போன்றவற்றிற்கு உகந்த தினத்தில் செய்து கொள்ளலாம். ஹோமப்பூஜையில் உங்கள் குடும்பத்தினர் அனைவருமே கலந்து கொள்வது அனைவருக்கும் நன்மை பயப்பதாக அமையும்.

யஜுர் வேதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் மிகவும் சக்தி வாய்ந்த பாக்ய சூக்த மந்திரங்கள் இந்த ஹோம பூஜையின் பொழுது துதித்து வழிபாடு செய்யப்படுவதால், இந்த ஹோமம் பூஜை செய்பவர்களுக்கு நிச்சயமான பலன் அளிக்கம் என்பது பெரியோர்களின் கருத்தாகும்.

- Advertisement -

money bag

இந்த பாக்ய சூக்த ஹோமத்தை குறிப்பாக தொழில், வியாபாரங்களில் தொடர்ந்து நஷ்டங்களை சந்திப்பவர்கள் செய்வதால் கஷ்டங்கள் நீங்கி மிகக் குறுகிய காலத்திலேயே லாபங்கள் உண்டாகும். படித்த படிப்பிற்கேற்ற வேலை கிடைக்காமல் அவதிப்படுபவர்களுக்கு அவர்களின் தகுதிக்கேற்ற வேலை கிடைக்கும். குடும்பத்தில் இருந்து வந்த பொருளாதார கஷ்டங்கள் நீங்கி, செல்வம் சேர்க்கை ஏற்படும். படிப்படியாக சொந்த வீடு, வாகனம் போன்ற வசதிகளும் ஏற்படும்.

இதையும் படிக்கலாமே:
அதிக லாபங்கள் கிடைக்க பரிகாரம்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Bhagya sukta homam in Tamil. It is also called as Homangal in Tamil or Homam poojas in Tamil or Ethirigal thollai neenga in Tamil or Homam palangal in Tamil.