உங்களுக்கு அதிக தனலாபங்கள் கிடைக்க இந்த எளிய பரிகாரத்தை செய்யுங்கள்

lakshmi

செல்வத்தை விரும்பாத மனிதர்கள் எவரும் இருக்க முடியாது. அனைவருமே தங்களிடம் செல்வம் அதிகம் சேர வேண்டும் என விரும்புகின்றனர். அதேபோன்று தொழில், வியாபாரங்களில் ஈடுபடுபவர்களும் தங்களுக்கு நஷ்டம் அதிகம் ஏற்படாமல், லாபங்கள் பெருக வேண்டும் என மிகவும் விருப்பம் கொண்டவர்களாக இருக்கின்றனர். இவர்கள் அனைவரும் தங்கள் வாழ்வில் மிகுதியான செல்வச் செழிப்பை பெற நமது முன்னோர்கள் கூறிய ஒரு எளிய ஆன்மீக பரிகாரத்தை இங்கு தெரிந்துகொள்ளலாம்.

lakshmi

தங்கக் காசுகளையோ அல்லது நாம் அன்றாடம் பயன்படுத்தும் நாணயங்களையோ கொண்டு தெய்வங்களுக்கு அபிஷேகம் செய்வது தான் சொர்ணாபிஷேகம் எனப்படுகிறது. முற்காலத்தில் தங்கத்தினால் செய்யப்பட்ட நாணயங்கள் புழக்கத்தில் இருந்தன. எனவே அந்த தங்கத்தை கொண்டு அக்காலத்தில் தெய்வங்களுக்கு சொர்ணாபிஷேகம் செய்தனர். இந்த சொர்ணாபிஷேக வழிபாடு நமது இல்லத்திலும், கோயிலிலும் செய்துகொள்ளலாம்.

இல்லத்தில் இந்த சொர்ணாபிஷேகம் செய்ய விரும்பவர்கள் தினந்தோறும் அல்லது வெள்ளிக்கிழமைகளில் வீட்டில் இருக்கின்ற சிறிய அளவிலான லட்சுமி தேவியின் விக்கிரகத்திற்கு,11 காசுகள் அல்லது 108 காசுகளை கை நிறைய அள்ளி, மெதுவாக லட்சுமி தேவன் விக்கிரத்தின் மீது விட்டு அபிஷேகம் செய்ய வேண்டும். அபிஷேகத்தை முடித்ததும் அந்த நாணயங்கள் அனைத்தையும் எடுத்து, ஒரு தூய்மையான பாத்திரத்தில் தண்ணீர் அல்லது பன்னீர் ஊற்றி, அதில் போட்டு வைத்து மறுநாள் பூஜைக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

gold

கோயிலில் இந்த சொர்ணா அபிஷேகத்தை செய்ய விரும்புபவர்கள் கைநிறைய நாணயங்களை அர்ச்சகரிடம் கொடுத்து தெய்வத்திற்கு அபிஷேகம் செய்யலாம். அல்லது 11 காசுகள் மட்டும் எடுத்து, அவற்றை தெய்வ சிலையின் பாதத்தில் வைத்து பூஜித்து, மீண்டும் வாங்கிக் கொள்ளலாம். இவ்வாறு பூஜிக்கப்பட்ட நாணயங்களில் இருந்து தினமும் ஒரு நாணயத்தை எடுத்து, உங்கள் வீட்டில் இருக்கும் சுமங்கலிப் பெண்களிடம் கொடுத்து அவர்களின் கைகளால் வாங்கிக் கொண்டு, அதை உங்கள் பணப் பையிலோ அல்லது தொழில், வியாபாரம் நடக்கின்ற இடத்தில் இருக்கும் பணப் பெட்டியில் போட்டு வைக்க வேண்டும்.

- Advertisement -

money

இவ்வாறு பூஜை செய்யப்பட்ட நாணயங்களை உங்கள் பணப்பையில் வைப்பதாலும், வியாபார தளங்களில் பயன்படுத்துவதாலும் உங்களுக்கு மிகுந்த செல்வச்செழிப்பு உண்டாகும். வீண் பொருள் விரயங்கள் ஏற்படுவதை தடுக்கும். தேவையற்ற கடன்கள் போன்றவை ஏற்படாது. வீட்டில் லட்சுமி கடாட்சம் ஏற்பட்டு வாழ்வில் வசதிகள் பெருகும்.

இதையும் படிக்கலாமே:
நோய்கள் விரைவில் குணமாக இதை செய்யுங்கள்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Pooja for money profit in Tamil. It is also called as Swarna abhishekam in Tamil or Selvam peruga in Tamil or Veetil poojai seiyum muraigal in Tamil or Viyabarathil labam undaaga in Tamil.