துன்பங்களிலிருந்து காக்கும் பைரவர் கவச மந்திரம்

bairavar

மனித சக்திக்கு அப்பாற்பட்டது தெய்வீக சக்தி என்பது அனைவரும் அறிந்ததே. தெய்வீக சக்தி நிறைந்திருக்கும் இதே உலகில் துஷ்ட சக்திகளும் இருக்கின்றன. இந்த துஷ்ட சக்திகளை தீய மாந்த்ரீக கலை மூலம் ஒரு சிலர் தங்களுக்கு ஆகாதவர்களுக்கு செய்வினை போன்றவற்றை செய்கின்றனர். ஒரு சிலருக்கு எதிர்பாராத விதமான விபத்துகளும் ஏற்படுகிறது. இவையனைத்திலிருந்தும் காக்கும் மிகுந்த ஆற்றல் வாய்ந்த ஒரு “பைரவர் கவச மந்திரம்” தான் இது.

kaala bairavar

பைரவர் கவச மந்திரம்

ஓம் நம கால்ரூபாய பதுக்
பைரவாய நம ருத்ராய நம சிவாய
ஓம் தம் தம் ஹம் ஹம் தம் தம் ஸ்வாஹ

காக்கும் கடவுளான பைரவரை வழிபடுவதற்கான மிகவும் சக்தி வாய்ந்த மந்திரம் இது. இந்த மந்திரத்தை உபாசித்து பைரவரின் அருளை பெற நினைப்பவர்கள் தினமும் அதிகாலையில் எழுந்து குளித்து முடித்து விட்டு, தியானத்தில் அமர்ந்து இந்த மந்திரத்தை 108 அல்லது 1008 முறை மந்திர உரு போடுவது சிறந்ததாகும். பைரவருக்குரிய தேய்பிறை அஷ்டமி தினத்தில், பைரவர் சந்நிதியில் பைரவருக்கு செவ்வரளி பூக்கள் சமர்ப்பித்து நெய் விளக்கேற்றி இம்மந்திரத்தை 108 துதித்தால் செய்வினை மாந்திரீகம், துஷ்ட சக்திகள் பாதிப்புகள் உங்களுக்கு ஏற்பட்டிருந்தால் அது நீங்கும். வாகனங்களில் பயணிக்கும் போது எதிர்பாரா விதத்தில் விபத்து ஏற்படும் ஆபத்து நீங்கும்.

kaala bairavar

தேவர்கள் அசுரர்களால் துன்புறுத்த பட்ட போது அவர்கள் அனைவரும் உலகை காக்கும் சிவபெருமானிடம் சென்று முறையிட்டனர். அசுரர்களை அழித்து தேவர்களின் துன்பம் நீங்க தனது அம்சமான பைரவரை தோன்ற செய்து அனுப்பினார் சிவபெருமான். பைரவர் திசைக்கு 8 வீதம் 64 வகையான பைரவர்களாக தோன்றி அசுரர்கள் அனைவரையும் அழித்தனர். எப்படிப்பட்ட துன்பங்களையும் போக்கும் சக்தி வாய்ந்த தெய்வமாக பைரவர் விளங்குகிறார் அவரை இம்மந்திரம் கொண்டு துதிப்பதால் பல நன்மைகள் உண்டாகும்.

தெய்வீகம் வீடியோ : Kovil
இதையும் படிக்கலாமே:
நோய்களை போக்கும் சக்தி வாய்ந்த சிவ ஸ்லோகம்

இது போன்று மேலும் பல மந்திரங்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Bhairavar kavasam in Tamil. It is also called as Kala Bhairavar kavasam Tamil lyrics or Bhairavar slogam or Bhairavar manthiram in Tamil.