உங்களின் குடும்பத்தில் ஏற்படும் எத்தகைய பிரச்சனைகளும் தீர இம்மந்திரம் துதியுங்கள்

bhavani

மனிதன் என்றுமே தனியாக வாழ படைக்கப்பட்டன் கிடையாது. தனிமை எனும் சாபத்தை போக்கும் ஒரு அற்புதமான அமைப்பு தான் குடும்பம். நம் அனைவருக்குமே நமது தொடக்கம் முதல் முடிவு வரை துணையாக வருவது நமது குடும்பம் ஆகும். இப்படி குடும்பம் என்கிற ஒன்று இருக்கும் போது பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்காது. இத்தகைய பிரச்சனைகள் அனைத்தையும் தீர்க்கும் ஒரு சக்தி வாய்ந்த “பவானி அம்மன் மந்திரம்” இதோ.

Mariamman

பவானி அம்மன் மந்திரம்

மஹாதேவீம் மஹாசக்திம் பவானீம்
பவ வல்ல பாம்பவார்தி பஞ்ஜநகரீம்
வந்தே த்வாம் லோகமாதரம்ஜகத்கர்த்ரீம்

ஜகத்தாத்ரீம் ஜகத்ஸம் ஹாரகாரிணீம் முனிபி
ஸமஸ்துதாம் பத்ராம் வந்தேத்வாம் மோக்ஷதாயினீம்

MathuraKaliamman

பவானியாகிய சக்தி தேவியை போற்றும் மந்திரம் இது. இந்தத் துதியை தினமும் துதிப்பது நன்மையை தரும். வாரத்தில் வரும் வெள்ளிக் கிழமைகளில் அம்பாள் படத்திற்கு பூக்கள் சாற்றி, தீபம் ஏற்றி இந்த மந்திரத்தை துதித்து வர உங்கள் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு ஏற்படும் எத்தகைய பிரச்சனைகளும் நீங்கும். குடும்பத்தினரிடையே இருக்கும் மன வேற்றுமைகள் தீர்ந்து குடும்ப ஒற்றுமை உண்டாகும்.

- Advertisement -

Amman

மகாதேவனுடைய மனைவியே, மிகுந்த சக்தி வாய்ந்தவளே, பவானி என்றழைக்கப்படுபவளே, பக்தர்களின் குடும்ப வாழ்க்கையில் ஏற்படும் மனக் கவலைகளைப் போக்குகிறவளே, அனைத்து உலகங்களுக்கும் தாயே, தங்களை நமஸ்கரிக்கிறேன். உலகைப் படைப்பவளே, படைத்ததைக் காப்பவளே, கடைசியில் அதை அழிக்கவும் செய்பவளே, முனிவர்களால் துதிக்கப்படுபவளே, பக்தர்களுக்கு எந்நாளும் மங்கலத்தை அளிப்பவளே, முக்தியை தரவல்லவளே, தங்களை நமஸ்கரிக்கிறேன் என்பதே இந்த மந்திரத்தின் பொதுவான பொருளாகும்.

இதையும் படிக்கலாமே:
துஷ்ட சக்திகள் பாதிப்பு நீங்க இதை துதியுங்கள்

இது போன்று மேலும் பல மந்திரம் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Bhavani amman mantra in Tamil. It is also called as Kudumba otrumai in Tamil or Shakti mantras in Tamil or Devi mantras in Tamil or Bhavani devi slokam in Tamil.