உங்களுக்கு ஏற்படும் எதிர்ப்புகள், துஷ்ட சக்தி பாதிப்புகள் நீங்க இதை துதியுங்கள்

murugan

நாம் அனைவருமே பல தரப்பட்ட மனிதர்கள் இருக்கும் உலகத்தில் வாழ வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இதில் நமக்கு நன்மை செய்பவர் யார், தீமை செய்பவர் யார் என்று நம்மால் அறிந்து கொள்ள முடிவதில்லை. ஆனால் நமது முகத்திற்கு எதிராக சிரித்து பேசும், மனிதர்கள் பலர் மறைவாக நாம் கஷ்டப்பட வேண்டும் என விரும்புகின்றனர். ஒரு சிலர் அதற்கான சதிசெயல்களிலும் ஈடுபடுகின்றனர். இத்தகைய பிரச்சனைகள் அனைத்தையும் தீர்க்கும் அற்புத “முருகப்பெருமான் மந்திரம்” இதோ.

kantha sasti kavasam lyrics

முருகப்பெருமான் மந்திரம்

ஓம் ரீங் வசரஹணப

சித்தர்களால் இயற்றப்பட்ட முருகனுக்குரிய சக்தி வாய்ந்த மந்திரம் இது. இந்த மந்திரத்தை தினமும் உங்களால் இயன்ற போதெல்லாம் துதிப்பது நல்லது. செவ்வாய்கிழமைகள், சஷ்டி தினங்களில் முருகப்பெருமானுக்கு செந்நிற பூக்களை சமர்ப்பித்து இந்த மந்திரத்தை குறைந்த பட்சம் 1008 முறை உரு ஜெபித்து வழிபட்டு வந்தால் உங்களின் பாப கர்மவினைகள் நீங்கும். நேரடி மற்றும் மறைமுக எதிரிகள் உங்களுக்கு எதிராக செய்யும் எத்தகைய சதிசெயல்களும் உங்களை பாதிக்காமல் காக்கும். துஷ்ட சக்திகள் உங்களை அணுகாமல் காக்கும்.

kantha sasti kavasam lyrics

வீரமிகுந்த தமிழ் மக்களின் ஆதர்ச தெய்வமாக இருப்பவர் முருகப்பெருமான். உலகில் இருக்கின்ற தீய சக்திகளை அழித்து, நல்லவர்களை காக்க சிவபெருமானால் தனது யோக சக்தி மூலம் தோற்றுவிக்கபட்டவர் சரவணன் எனும் முருகன். முருகனின் பெயரை கூறிய மாத்திரத்திலேயே நம்மை பீடித்த அனைத்து வல்வினைகளும் நீங்கும். சித்தர்கள் அருளிய இந்த அதி அற்புதமான மந்திரத்தை தினமும் துதிப்பவர்களுக்கு முருகனின் முழுமையான அருள் கிடைத்து அவர்களின் வாழ்வில் தீவினைகள் நீங்கி, நன்மைகள் உண்டாகும்.

இதையும் படிக்கலாமே:
பூமி மனை லாபம் கிடைக்க செய்யும் மந்திரம்

இது போன்று மேலும் பல மந்திரம் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Muruga peruman manthiram in Tamil. It is also called as Murugan manthiram in Tamil or Murugan thuthi in Tamil or Ethirigal thollai neenga in Tamil.