கருகருன்னு கத்தை கத்தையாக முடி வளர கரிசலாங்கண்ணி ஹேர் பேக்கை இப்படி போடுங்க. ரொம்ப நாளைக்கு உங்க முடி அடர் கருப்பு நிறத்திலேயே இருக்கும்.

hair14
- Advertisement -

கரிசலாங்கண்ணி இலைகள் என்றால் நம்மில் நிறைய பேருக்கு தெரியாது. பிரிங்கராஜ் ஆயில் என்று கடையில் நமக்கு விற்பனையாகிறது அல்லவா. அந்த பிரிங்கராஜ் தான் இந்த கரிசலாங்கண்ணி. கிராமப்புறங்களில் ரோட்டோரங்களில் நிறைய முளைத்து கிடைக்கும். இதில் வெள்ளை கரிசலாங்கண்ணி இலைக்கு முடி வளர்ச்சியை தூண்டக்கூடிய சக்தி அதிகமாக உள்ளது. அதேசமயம் முடியை கருப்பாகவே வைத்திருக்கும். வெள்ளை கரிசலாங்கண்ணி இலையில் வெள்ளை பூக்கள் பூத்திருக்கும். இலைகள் ஊசி ஊசியாக இருக்கும். உங்களுக்கு தெரியவில்லை என்றால் பெரியவர்களை கேட்டால் வெள்ளை கரிசலாங்கண்ணி செடியை சுலபமாக கிடைத்துவிடும்.

அந்த இலைகளை பறித்துக் கொள்ளுங்கள். ஒரு கைப்பிடி அளவு வெள்ளை கரிசலாங்கண்ணி இலை, ஒரு கைப்பிடி அளவு கருவேப்பிலை, 15 செம்பருத்தி இலைகள், அலோவேரா ஜெல், இந்த பொருட்கள் எல்லாம் நமக்கு தேவை. ஒரு மிக்ஸி ஜாரில் எல்லா இலைகளையும் கழுவி மொத்தமாக போட்டு, விழுது போல அரைத்துக் கொள்ளுங்கள். இதில் ஆலோவேரா ஜெல் இரண்டு அல்லது மூன்று ஸ்பூன் சேர்க்க வேண்டும்.

- Advertisement -

கற்றாழை கிடைத்தால் அதன் உள்ளே இருக்கும் ஜெல்லை தனியாக எடுத்து போட்டுக் கொள்ளுங்கள். அல்லது கடையில் வாங்கிய ஜெல்லாக இருந்தால் கலர் இல்லாத ஜெல்லாக வாங்கி இதில் சேர்த்து ஒரு ஓட்டு ஒட்டி கொண்டால் அடர் பச்சை நிறத்தில் நமக்கு ஒரு பேக் கிடைக்கும். இந்த பேக்கோடு ஒரு டேபிள்ஸ்பூன் ஏதாவது ஒரு எண்ணெயை கலக்க வேண்டும். தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய், நல்லெண்ணெய், கடுகு எண்ணெய், உங்கள் வீட்டில் எது இருக்கிறதோ, அதை கலந்து கொள்ளுங்கள்.

இந்த பேக்கை தலை முழுவதும் அப்ளை செய்ய வேண்டும். பேக்கை அப்ளை செய்வதற்கு முன்பு தலையில் கொஞ்சம் தேங்காய் எண்ணெய் வைத்துக் கொள்ள வேண்டும். பேக்கை வேர்க்கால்களில் படும் படி போட்டுவிட்டு மீதம் இருக்கும் பேக்கை நுனி முடி வரை தடவி அப்படியே கொண்டை கட்டி 20 லிருந்து 25 நிமிடங்கள் வரை வைக்கலாம். உங்களுக்கு தலைபாரம் வரும் சளி பிடிக்கும் என்றால் 10 லிருந்து 15 நிமிடங்கள் இந்த பேக்கை வைத்து விட்டு சுத்தமாக ஷாம்பு அல்லது சீயக்காய் போட்டு தலையை அலசி விடுங்கள்.

- Advertisement -

இதனுடைய இலைகள் எல்லாம் லேசாக திப்பி திப்பியாக தலையில் ஒட்டி இருக்கும். காய வைக்கும் போது அதை சீப்பு வைத்து உதறி வாரிவிட்டால், எல்லாம் கீழே கொட்டிவிடும். உங்களுக்கு அதில் சிரமம் இருந்தால் இந்த பேக்கை போடும்போது ஒரு காட்டன் துணியில் வடிகட்டி விட்டு போட்டீர்கள் என்றால் அந்த பிரச்சனையும் இருக்காது.

வாரத்தில் ஒரு நாள் இந்த பேக்கை பயன்படுத்தி வர முடி உதிர்வு குறைந்து கருகருவென முடி வளரத் தொடங்கும். கரிசலாங்கண்ணி இலைக்கு கருப்பு நிறத்தை முடித்துக் கொடுக்கக்கூடிய சக்தி உள்ளது. வெறும் கரிசலாங்கண்ணி இலையை எடுத்து கையில் கசக்கி பார்த்தாலே கருப்பு நிறம் ஓட்டும் என்றால் பாருங்கள். செலவே இல்லாத சுலபமான இந்த பேக் உங்களுக்கு பிடிச்சிருந்தா முயற்சி செய்து பார்க்கலாம்.

- Advertisement -