இன்ஸ்டன்ட் ஹேர் டை

instant hair dye
- Advertisement -

இன்றைய காலத்தில் பலருக்கும் நரைமுடி பிரச்சனை என்பது இருக்கத்தான் செய்கிறது. இந்த நரை முடியை மறைப்பதற்காக பலரும் பல வழிகளில் முயற்சி செய்கிறார்கள். இதில் சிலர் இயற்கையான வழிகளை பின்பற்றுவார்கள். ஆனால் பலரும் கெமிக்கல் நிறைந்த செயற்கை வழியை பின்பற்றுகிறார்கள். காரணம் அது உடனடியான பலனை தருகிறது என்பதால் மட்டும் தான். இயற்கையான முறையில் உடனடியான பலனை பெறுவதற்கு வழிகள் இருக்கிறது. அது என்ன என்றும் அதை எப்படி தயார் செய்வது என்றும் தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.

நரைமுடி பிரச்சனை வருவதற்கு பல காரணங்கள் இருக்கின்றது. இளம் வயதிலேயே வரக்கூடிய நரைமுடியாக இருந்தாலும் முதிர் வயதான பிறகு ஏற்படக்கூடிய முதிர் நரையாக இருந்தாலும் இந்த ஒரு பவுடரை நாம் தயார் செய்து வைத்துக் கொண்டோம் என்றால் நாம் நினைக்கும் பொழுதெல்லாம் நம்முடைய தலைமுடியை கருமையாக நம்மால் மாற்ற முடியும். இதில் சேர்க்கக்கூடிய பொருட்கள் அனைத்துமே நம்முடைய வீட்டில் நமக்கு எளிதில் கிடைக்கக்கூடிய பொருட்கள் தான். சரி இப்பொழுது இந்த பவுடரை எப்படி செய்வது என்று பார்ப்போமா?

- Advertisement -

இந்த பவுடரை நாம் தயார் செய்வதற்கு நமக்கு முக்கியமான மூன்று பொருட்கள் தேவைப்படும். அவை வெந்தயம், கருவேப்பிலை, பூண்டு தோல். இரண்டு ஸ்பூன் அளவிற்கு வெந்தயத்தை எடுத்து மிக்ஸி ஜாரில் போட்டுக் கொள்ளுங்கள். பிறகு ஒரு கைப்பிடி அளவு பூண்டு தோலையும் அதனுடன் போட்டுக் கொள்ள வேண்டும். அடுத்ததாக ஒரு கைப்பிடி அளவு கருவேப்பிலையை சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் அரைத்துக் கொள்ளுங்கள். இந்த பொடி நைசாக அரைபடாது சற்று கொரகொரப்பாக தான் அரைப்படும்.

இப்படி அரைத்த பிறகு ஒரு இரும்பு கடாயை அடுப்பில் வைத்து அடுப்பை குறைந்த தீயில் வைத்துவிட்டு நாம் அரைத்து வைத்திருக்கும் இந்த பொடியை இரும்பு கடாயில் சேர்த்து நன்றாக கருகும் வரை வறுக்க வேண்டும். சட்டியில் இருந்து புகை வரும் அளவிற்கு நன்றாக வறுத்துவிட்டு அதை ஒரு தட்டில் கொட்டி ஆற வைத்துக் கொள்ளுங்கள். இது ஆரிய பிறகு மறுபடியும் இதை மிக்ஸி ஜாரில் போட்டு நைசாக அரைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

பிறகு ஒரு சல்லடையை வைத்து இதை சலித்து எடுத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது மிகவும் நைசான பவுடர் தயாராகிவிட்டது. நாம் எப்பொழுது வெளியே செல்கிறோமோ அப்பொழுதெல்லாம் நம்முடைய தலைமுடிக்கு தேவையான அளவு இந்த பவுடரை எடுத்து ஒரு கிண்ணத்தில் சேர்த்து அரை ஸ்பூன் தேங்காய் எண்ணெய் அரை ஸ்பூன் விளக்கெண்ணெய் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். கலந்து இந்த கலவையை நம்முடைய நரைமுடி இருக்கும் இடத்தில் நன்றாக எண்ணெய் தேய்ப்பது போல் தேய்க்க வேண்டும்.

பிறகு சீப்பை வைத்து சீவி விட வேண்டும். அவ்வளவுதான் ஒரு வெள்ளை முடி கூட இல்லாத அளவிற்கு கருமையான தோற்றத்தை பெற முடியும். இதை நாம் தலையில் தேய்த்து ஊற வைத்து குளிக்க வேண்டும் என்ற எந்தவித தேவையும் இல்லை. எண்ணெய் தேய்ப்பது போல தேய்த்து விட்டு தலையை சீவி விட்டு வெளியில் கிளம்பலாம். மற்ற இடங்களில் ஒட்டி விடும் என்ற பயமும் இல்லை. யாராலும் டை அடித்திருக்கிறோம் என்பதை கண்டுபிடிக்கவே முடியாது.

இதையும் படிக்கலாமே: பளிங்கு போன்ற சருமம் கிடைக்க

கெமிக்கல் நிறைந்த ஹேர் டை பயன்படுத்துவதற்கு பதிலாக இந்த முறையில் வீட்டிலேயே இயற்கையான பொருட்களை வைத்து ஹேர்டை பவுடரை தயார் செய்து வைத்துக் கொண்டு நமக்கு தேவைப்படும் பொழுதெல்லாம் உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.

- Advertisement -