ஆஸி அணியை தோற்கடிப்பது உறுதி. குறிவைத்து ஸ்டம்பை பெயர்க்க பயிற்சி இந்திய அணி பந்துவீச்சாளர் – வீடியோ

lose-1

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஒருநாள் கிரிக்கெட் தொடர் தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. அதில் முதல் போட்டியில் 34 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய போட்டியில் ஆஸ்ட்ரேலிய அணி வீழ்த்தி தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. இந்நிலையில் தொடரின் அடுத்த போட்டி நாளை மெல்போர்ன் நகரில் துவங்கவுள்ளது.

rayudu

இந்நிலையில் இருஅணி வீரர்களும் கடுமையாக பயிற்சி செய்து வருகின்றனர். இந்திய அணி தீவிர வலை பயிற்சியினை மேற்கொண்டு வருகிறது. பயிற்சியினை முடித்த பிறகு செய்தியாளர்களிடையே பேசினார். இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார்.

புவனேஷ்வர் குமார் கூறியதாவது : நான் பயிற்சியின் போது ஷூ ஒன்றினை வைத்து ஸ்டம்ப்க்கு நேராக பந்துவீசி பயிற்சி எடுத்தேன். நான் ஏன் அப்படி பயிற்சி செய்தேன் என்றால் யார்க்கர் சரியாக வீசினால் எதிரணி வீரர்கள் சிரமப்படுவார்கள் அதனாலே இப்படி பயிற்சி செய்கிறேன். அந்த வீடியோ இணைப்பு :

டெஸ்ட் தொடரில் நான் இடம்பெறவில்லை அதனால் போட்டிகளில் பங்கேற்று ரொம்ப இடைவேளை விழுந்து விட்டது. இதனால் மீண்டும் தீவிர பயிற்சி எடுக்கிறேன். அடுத்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை தோற்கடித்து வெற்றிபெறவே அனைவரும் கடுமையாக பயிற்சி செய்து வருவதாக அவர் தெரிவித்தார்.

இதையும் படிக்கலாமே :

முறைதவறிய பந்துவீச்சு. 13 நாட்களுக்குள் பந்துவீச்சு பரிசோதனையில் கலந்து கொள்ள வேண்டும். இந்திய வீரருக்கு அழைப்பு – ஐ.சி.சி

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்