முறைதவறிய பந்துவீச்சு. 13 நாட்களுக்குள் பந்துவீச்சு பரிசோதனையில் கலந்து கொள்ள வேண்டும். இந்திய வீரருக்கு அழைப்பு – ஐ.சி.சி

rayudu

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஒருநாள் கிரிக்கெட் தொடர் தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. அதில் முதல் போட்டியில் 34 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை ஆஸ்ட்ரேலிய அணி வீழ்த்தி தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. இந்நிலையில் தொடரின் அடுத்த போட்டி நாளை மெல்போர்ன் நகரில் துவங்கவுள்ளது.

lose-1

இந்நிலையில், முதல் போட்டியில் இந்திய அணி முதலில் பந்துவீசியது. அப்போது இந்திய அணியை சேர்ந்த அம்பத்தி ராயுடு பகுதி நேர பந்துவீச்சாளராக பந்துவீசினார். அவர் இரண்டு ஓவர்களை மட்டும் வீசி 13 ரன்களை விட்டுக்கொடுத்தார். விக்கெட் எதுவும் வீழ்த்தவில்லை.

இந்நிலையில் அவரது பந்துவீச்சு முறை ஐ.சி .சி பந்துவீச்சு முறைகளை பின்பற்றாமல் முறைகேடாக உள்ளது என்று அம்பயர் முறையிட்டார். இதனால் கிரிக்கெட் கவுன்சில் ராயுடு-வினை 13 நாட்களுக்குள் அவரது பந்துவீச்சு முறையினை சோதிக்க அழைத்துள்ளது. விதிகளுக்கு மீறி அவரது பந்துவீச்சு கோணம் இருந்தால் அவர் அதனை மாற்றும் வரை பந்துவீச தடையும் விதிக்கப்படும்.

rayudu-1

இவ்விரு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது போட்டி நாளை துவங்குகிறது. நாளைய போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் மட்டுமே இந்திய அணி தொடரை இழக்காமல் இருக்கும். எனவே நாளைய போட்டி ரசிகர்களுக்கு சிறந்த விருந்தாக அமையும்.

இதையும் படிக்கலாமே :

நான் 2011ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரின் போது புற்றுநோயால் பாதிக்கப்பட்டது இவருக்குத்தான் முதலில் தெரியும் – யுவராஜ்

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்