திருநீறு அணிவதால் ஏற்படும் மிகப்பெரிய நன்மை

thiruneeru

திருநீறு அணிவதால் பல நன்மைகள் உண்டு என்று அறிவியல் ரீதியாகவும் ஆன்மீக ரீதியாகவும் கூறப்படுகிறது. ஆன்மீக ரீதியாக பார்க்கையில் திருநீறு எவ்வளவு சிறந்தது என்பதை உணர புராண கால கதை ஒன்றை பார்ப்போம்.

துருவாச முனிவர் ஒரு நாள் பித்ரு லோகம் செல்ல முடிவெடுத்தார். அதனால் அன்று காலை அதிகாலை எழுந்து குளித்துவிட்டு சிவனை வழிபாட்டு தன் நெற்றியில் திருநீறை அணிந்துகொண்டு புறப்பட்டார். அப்போது வழியில் மிகப்பெரிய கிணறு ஒன்றை காண்டார். அதுவரை அவர் அவ்வளவு பெரிய கிணறை கண்டதே இல்லை.

உடனே அந்த கிணற்றருகே சென்று எட்டி பார்த்தார். அந்த கிணற்றில் பலர் தாங்கள் செய்த பாவத்திற்கான தண்டனைகளை அனுபவித்துக்கொண்டிருந்தனர். ஒருபக்கம் எண்ணெய் கொப்பரை காய்கிறது மறுபக்கம் பாம்பு, தேள் போன்ற கொடிய விஷமுள்ள ஜந்துக்கள் அங்கு உள்ளோரை பயமுறுத்திக்கொண்டிருந்தது. இது போல பலவிதமான தண்டனைகள் அங்கு அரங்கேறிக்கொண்டிருந்தது. அதை பார்த்தவுடன் அது தான் நரகம் என்பதை முனிவர் உணர்ந்தார்.

munivar

சற்று நேரம் கிணற்றை பார்த்த முனிவர் பின் அங்கிருந்து நகர்ந்து சென்றார். முனிவர் அங்கிருந்து சென்ற சில நொடிகளில் அந்த நரகத்தில் பல மாற்றங்கள் அருங்கேரியது. எண்ணெய் கொப்பரை மறைந்தது அழகிய பூந்தோட்டம் உருவானது, விஷஜந்துக்கள் மறைந்து மிதமான தென்றல் வீசியது. அங்கு இருந்தவர்கள் அனைவரின் துன்பமும் பறந்தோடியது.

- Advertisement -

hell

அங்கு நிகழும் மாற்றங்கள் அனைத்தையும் கண்ட காவலர்கள், இதை உடனே எமதர்ம ராஜனிடம் கூறவேண்டும் என்று எண்ணி, எமதர்ம ராஜனிடம் சென்று நடந்ததை தெரிவித்தனர். எமதர்ம ராஜன் வந்து பார்க்கையில் நரகம் சொர்கம் போல காட்சி அளித்தது. ஏன் இந்த மாற்றம் என்று அவரால் கண்டறிய முடியவில்லை. உடனே அவர் இந்திரனிடம் இதை பற்றி தெரிவித்தார்.

இந்திரன் வந்து பார்க்கிறார் அவராலும் மாற்றத்திற்கான காரணத்தை கண்டறிய முடியவில்லை. உடனே அனைவரும் சென்று சிவ பெருமானை சந்திக்கின்றனர். நடத்தை பற்றி சிவபெருமானிடம் கூற, அவரோ மென்மையாக சிரிக்கிறார். தன்னுடைய நெற்றியில் இருக்கும் திருநீறை காட்டி அந்த திருநீறை எப்படி அணியவேண்டும் என்பதை விளக்குகிறார்.

sivan

இந்த திருநீறை மோதிர விரல், நடுவிரல், ஆட்காட்டி விரல் ஆகிய மூன்று விரல்களை பயன்படுத்தி மூன்று கோடுகளாக நெற்றியில் இட்டுக்கொள்ளவேண்டும். இது தான் திருநீர் அணிவதற்கான முறை. மூன்று கோடுகளில் ஒரு கோடு பிரம்மனையும், மற்றொன்று விஷ்ணுவையும் மீதமுள்ள இன்னொன்று என்னையும் குறிக்கிறது.

சாஸ்திர முறைப்படி திருநீறு அணிந்தவர் துருவாச முனிவர். அவர் நரகத்தை எட்டி பார்க்கையில் அவர் நெற்றியில் இருந்து ஒரு துளி திருநீர் நரகத்தில் விழுந்தது அதனால் அங்கிருந்தவர்களின் பாவம் அனைத்தும் விலகியது. இதனாலேயே நரகம் சொர்க்கமாக மாறியது என்றார்.

sivan

இதையும் பார்க்கலாமே:
பூஜைக்கான பாலை பசு தானே சுரந்த அதிசயம் – வீடியோ

ஒரு துளி திருநீருக்கே இத்தனை மகிமை என்றால் நாம் தினம் தோறும் சாஸ்திர முறைப்படி திருநீறு அணிவதால் எவ்வளவு பயன்களை பெறலாம் என்பதை நீங்களே யூகித்து பாருங்கள்.

இது போன்ற மேலும் பல ஆன்மீக தகவல்கள், ஆன்மீக கதைகள் மற்றும் மந்திரங்களை உடனுக்குடன் பெற தெய்வீகம் மொபைல் APP-ஐ டவுன்லோட் செய்யுங்கள்.