- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்பயோட்டின் சத்து நிறைந்த இந்த பொடியை 1 ஸ்பூன் சாப்பிட்டால் போதும். இதுவரை தலையில் முடியே...

பயோட்டின் சத்து நிறைந்த இந்த பொடியை 1 ஸ்பூன் சாப்பிட்டால் போதும். இதுவரை தலையில் முடியே வளராதவர்களுக்கு கூட 7 நாட்களில் முடி வளர்ச்சியை பார்க்கலாம்.

- Advertisement -

நம்முடைய தலைமுடி வளர்ச்சிக்கு இந்தப் பயோட்டின் சத்து மிக மிக அவசியம். நாம் சாப்பிடக்கூடிய ஒரு சில பொருட்களில் பயோட்டின் சத்து அதிகமாக இருக்கிறது. விலைமலிவாக கிடைக்கக்கூடிய பயோட்டின் சத்து நிறைந்த அந்த பொருட்களை எல்லாம் வாங்கி வீட்டிலேயே பயோட்டின் பவுடர் தயாரிப்பது எப்படி என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். பொதுவாக இப்படிப்பட்ட பயோட்டின் சத்து நிறைந்த ஹெல்த் பவுடரை கடையில் வாங்கினால் அதற்கு விலையும் கூடுதலாக இருக்கும். எல்லோராலும் சுலபமாக செய்யக்கூடிய பயோட்டின் பவுடரை குறைந்த செலவில் எப்படி செய்வது. நேரத்தைக் கடத்தாமல் இப்போதே தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

முதலில் 100 கிராம் அளவு கோதுமையை எடுத்துக் கொள்ளுங்கள். முளைகட்டிய கோதுமை நமக்கு தேவை. கோதுமையை 8 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். ஊறிய கோதுமையை தண்ணீரை வடிகட்டிவிட்டு ஈரமான கோதுமையை, ஈரமான காட்டன் துணியில் வைத்துக் கட்டி, 24 மணி நேரம் அப்படியே விட்டுவிட வேண்டும். துண்டில் ஈரம் காய்ந்து விட்டால் மட்டும் 6 மணி நேரத்திற்கு ஒருமுறை துண்டின் மேல் தண்ணீரை தெளித்து விடுங்கள். 24 மணி நேரம் கழித்து கோதுமை நன்றாக முளைகட்டி வந்திருக்கும்.

- Advertisement -

முளைக்கட்டிய இந்த கோதுமையை ஒரு நாள் முழுக்க நல்ல வெயிலில் காய வைத்து எடுத்தால் போதும். காய்ந்த முளைகட்டிய இந்த கோதுமையை மிக்ஸியில் போட்டு பொடி செய்து ஒரு பௌலில் மாற்றிக் கொள்ளுங்கள்.

அதே மிக்ஸி ஜாரில் வேர்க்கடலை – 100 கிராம், பூசணி விதை – 20 கிராம், இந்த இரண்டு பொருட்களையும் போட்டு அரைத்து இதையும், அரைத்து வைத்திருக்கும் கோதுமையோடு சேர்த்து விடுங்கள். இப்போது இந்தப் பொடியுடன் பீட் ரூட் பவுடர் – 2 ஸ்பூன், நெல்லிக்காய்பொடி – 1 ஸ்பூன் சேர்த்து நன்றாக கலந்து ஒரு கண்ணாடி பாட்டிலில் ஸ்டோர் செய்து வைத்துக்கொண்டால் 4 மாதங்கள் வரை கெட்டுப் போகாது. இந்த பவுடரை எப்படி சாப்பிடுவது.

- Advertisement -

அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் 1 டம்ளர் அளவு தண்ணீரை வைத்து கொதிக்க வையுங்கள். அதில் ஒரு டேபிள்ஸ்பூன் அளவு இந்த பொடியை போட்டு நன்றாக கலந்து விட்டு 3 லிருந்து 4 நிமிடம் கொதிக்க விட்டு அப்படியே குடித்து விடலாம். அப்படி இல்லை என்றால் சப்பாத்தி மாவு பிசையும்போது 2 ஸ்பூன் இந்த பொடியையும் சேர்த்து பிசைந்து சப்பாத்தி சுடலாம்.

தோசை மாவில் இந்த பொடியை சேர்த்து கலந்து கூட தோசை சுட்டு குழந்தைகளுக்கு கொடுக்கலாம். அப்படி இல்லை என்றால் இதில் கொஞ்சம் வெல்லம் சேர்த்து பிசைந்து லட்டு பிடித்து கூட சாப்பிடலாம். இப்படி உங்கள் இஷ்டம் போல இந்த பொடியை நீங்கள் எப்படி வேண்டுமென்றாலும் சாப்பிட்டு கொள்ளலாம். உங்களுக்கு இந்த ரெசிபி பிடிச்சிருந்தா உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க. முடி வளர்ச்சிக்கு உடல் ஆரோக்கியத்துக்கும் சரும அழகுக்கு இது ரொம்ப ரொம்ப நல்லது.

சற்று முன்