இன்றைய தலைமுறையினர் பார்ப்பதற்கு அழகான தோற்றத்தில் இருந்தாலும், இவர்களின் ஆரோக்கியம் என்னவோ மிகவும் மோசமான நிலையில் தான் இருக்கிறது. மிகவும் சிறிய வயதிலேயே பெயர் தெரியாத வியாதிகளினால் பாதிக்கப் படுகின்றனர். சிலர் இளம் வயதிலேயே இறந்தும் விடுகின்றனர். அந்த அளவிற்கு உடலின் ஆரோக்கியத்தில் பலரின் கவனம் செலுத்துவதில்லை. அதுமட்டுமல்லாமல் இப்போது சாப்பிடுகின்ற உணவு வகைகளில் உடம்பிற்குத் தேவையான ஊட்டச் சத்துக்கள் கிடைப்பதில்லை. எனவே உடல்நிலையை சரியாக கவனித்துக் கொள்வதற்கு தனி கவனம் எடுத்து தான் ஆக வேண்டும். அதற்காக உடலிற்க்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் முழுமையாக கிடைக்க இந்த பயோட்டின் லட்டுவை தினமும் ஒவ்வொன்றாக சாப்பிட்டு வந்தால் உங்கள் முடி முதல் தலை வரை அனைத்துப் பகுதியும் ஆரோக்கியமாக இருக்கும். வாருங்கள் இதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்:
வால்நட் – ஒரு கப், பாதாம் – ஒரு கப், நிலக்கடலை – ஒரு கப், சூரியகாந்தி விதை – கால் கப், பூசணி விதை – கால் கப், மெலன் விதை – கால் கப், ஆலிவ் விதை – ஒரு ஸ்பூன், வெல்லம் – அரை கப், பரிட்சை பழம் – 5, நெய் – 2 ஸ்பூன்.
செய்முறை:
முதலில் மேற்கூறிய பொருட்கள் அனைத்தையும் சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் ஒரு கடாயை அடுப்பில் வைத்து, கடாய் சூடானதும் முதலில் வால்நட், பாதாம், வேர்க்கடலை சேர்த்து 2 நிமிடம் வறுக்க வேண்டும். பிறகு ஒவ்வொரு பொருளாக சேர்க்க வேண்டும்.
இந்த மூன்று பொருட்களையும் 2 நிமிடம் வறுத்த பின்னர், பூசணி விதை, மெலன் விதை, சூரியகாந்தி விதை மற்றும் ஆலிவ் விதை சேர்த்து லேசாக சிவந்து வரும் வரை வறுத்து எடுக்க வேண்டும். பின்னர் இவற்றை ஒரு தட்டில் கொட்டி ஆற வைக்க வேண்டும். இவை நன்றாக ஆறிய பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் மாற்றிக்கொள்ள வேண்டும்.
பிறகு இவற்றுடன் அரை கப் வெல்லம் மற்றும் ஐந்து பேரிச்சம் பழங்களை கொட்டை நீக்கி சேர்க்க வேண்டும். பிறகு அனைத்தையும் பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இவற்றை ஒரு தட்டிற்க்கு மாற்றி நன்றாக ஆற விட வேண்டும்.
பிறகு இவற்றுடன் இரண்டு ஸ்பூன் நெய் சேர்த்து, நன்றாக கலந்து விட்டு, கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து உருண்டையாக பிடித்துக் கொள்ள வேண்டும். பின்னர் இந்த லட்டுகளை ஒரு காற்றுப்புகாத டப்பாவில் சேர்த்து மூடி போட்டு இறுக்கமாக மூடி வைக்க வேண்டும்.
இந்த லட்டுகளில் ஒவ்வொன்றாக எடுத்து தினமும் ஒன்று சாப்பிட்டு வந்தால் முடி கொட்டும் பிரச்சனை, சருமப் பிரச்சனை போன்றவை நாளடைவில் சரியாகிவிடும். அதுமட்டுமல்லாமல் முடியின் வளர்ச்சி அதிகமாக இருக்கும். தோலின் நிறம் பளபளப்பாக மாறிவிடும். இடுப்பு வலி, மூட்டு வலி, கை, கால் வலி போன்ற அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வாக இந்த பயோட்டின் லட்டுவை சாப்பிட்டால் மட்டும் போதும்.