‘பறவைகள்’ இது போன்று உங்கள் கனவில் வந்தால், நல்லது நடக்குமா? கெட்டது நடக்குமா?

birds-kanavu

‘பறவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம்…’ பறவைகள்னு சொன்னதும் இந்த பாடல் தான் அனைவருக்கும் ஞாபகம் வரும். உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பறவையினம் வாழ்ந்து கொண்டிருக்கிறது. மனிதர்களாகிய நாம் அதில் பலவற்றிற்கு பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறோம் என்பது வேதனைக்குரிய விஷயம் தான். சிட்டுக்குருவியின் சத்தம் கேட்டு கண் விழித்தது ஒரு அழகிய காலம். இன்று குப்பை வண்டியின் விசில் சத்தம் கேட்டு எழுந்து கொண்டிருக்கிறோம். கனவுகளில் பல வகை உள்ளன. பறவைகள் நம் கனவில் வந்தால் என்ன மாதிரியான பலன்களை தரும்? எந்த பறவைக்கு எந்த பலன் கிட்டும்? இதைப் பற்றிய சுவாரசியமான தகவல்கள் இப்பதிவில் காணலாம்.

bird-flying

எந்த பறவை இனமாக இருந்தாலும் உங்கள் கனவில் பறவை பறப்பது போல வந்தால் உங்கள் வீட்டில் செல்வச்செழிப்பு உண்டாகும். வருமானம் இரட்டிப்பாக அதிகரிக்கப் போவதை பலனாக இந்த கனவு தரும். பறவை முட்டை இடுவதையோ அல்லது பறவையுடன் முட்டை இருப்பதையோ கனவில் கண்டால் நீங்கள் புதிதாக ஆரம்பிக்க இருக்கும் தொழில் அல்லது வியாபாரம் விருத்தியடையும் என்பதை உணர்த்துகிறது. உங்கள் கனவில் பறவை தன் குஞ்சுக்கு இரையூட்டுவது போல வந்தால், உங்கள் இல்லத்தில் மழலை செல்வம் கிடைக்கப்போகிறது என்பதை உணர்த்துகிறது.

பொதுவாகவே பறவைகளை கனவில் காண நேர்ந்தால் நீங்கள் இருக்கும் சூழ்நிலை மாறுபட போவதாக குறிப்பால் உணர்த்துவதாக அர்த்தம். தூக்கணாங்குருவி கனவில் வந்தால் நல்ல சகுனமாக பார்க்கப்படுகிறது. சுபகாரியங்கள் நடைபெற இருப்பதாக குறிக்கிறது. மாணவர்களின் கனவில் பறவைகளை கையில் வைத்திருப்பது போல வந்தால், தேர்வுகளில் நல்ல மதிப்பெண் பெறுவார்கள். காதலிப்பவர்களின் கனவில் பறவைகளுக்கு தானியம் இடுவது போல் வந்தால், உங்கள் காதல் நிச்சயம் வெற்றி அடையும். பறவைகள் இசைப்பது போல அவற்றின் ‘கீச்கீச்’ சத்தம் உங்கள் கனவில் கேட்டால், மனதிற்கு மகிழ்ச்சியான சம்பவங்கள் நடைபெறும்.

bird-in-hand

புறாக்கள் கூட்டமாக இருப்பதைப் போல கனவுகள் வந்தால், உறவினர்களுடன் பகை ஏற்படப் போவதை உணர்த்துகிறது என்று அர்த்தம். அதுவே பறந்துகொண்டிருக்கும் புறாவை நீங்கள் பிடிப்பது போல கனவு கண்டால் நட்பு வலுப்படும். நண்பர்கள் ஒன்று இணைவார்கள். இரண்டு புறாக்கள் ஒன்றாக பறந்து கொண்டிருப்பது போல் கனவு கண்டால் நண்பர்களுக்குள் பகை மூளும் அபாயம் உண்டு. வவ்வால்களை கனவில் கண்டால் நல்லது நடக்கும். வவ்வால் நம் வீட்டில் இருந்து வெளியேறுவது போல கனவு கண்டால் நம்முடைய வறுமையும் நீங்கி விடுமாம். இதுவே வீட்டிற்குள் வருவது போல கனவு கண்டால் வறுமையும் கெட்ட செய்தியும் வருமாம்.

- Advertisement -

உங்கள் கனவில் வேடன் ஒருவன் புறாவை பிடிப்பது போல வந்தால், அது அவ்வளவு நல்லது அல்ல. வெள்ளைப் புறாவை கனவில் கண்டால் இட மாற்றம், உத்தியோக மாற்றம் போன்றவை ஏற்படும். கருப்பு புறாவை கனவில் கண்டால் கெட்ட செய்தி ஒன்று வரவிருக்கிறது என்று அர்த்தம். உங்கள் கனவில் கழுகு வந்தால், உங்களை தோற்கடிக்க நினைப்பவர்கள் அல்லது பகைவர்களால் பிரச்சனை வரப்போகிறது என்று அர்த்தம். உங்களுக்கு எதிராக சதி திட்டம் தீட்டப்படுகிறது என்பதை உணர்த்துகிறது.

eagle

காகம் தலையில் தட்டுவது போல கனவில் வந்தாலும் நல்ல சகுனம் அல்ல. ஏதோ கெட்ட விஷயம் நடக்க இருப்பதை உணர்த்துகிறது. சனி பகவானுக்கு உரிய வாகனமாக காக்கை இருப்பதால் பொதுவாகவே காக்கை கனவில் வருவது நல்லதல்ல. அதிலும் அண்டங்காக்கை கனவில் கண்டால், நெருங்கியவர் யாரையாவது நீங்கள் இழக்க நேரிடும். ஆனால் காக்கை குளிப்பது போல கனவு கண்டால் சனி தோஷம் விலகி நன்மைகள் நடைபெறும்.

உங்கள் கனவில் குயில் வந்தால், உங்கள் மனதுக்கு பிடித்த வாழ்க்கை அமையும் என்பதை குறிப்பால் உணர்த்துகிறது என்று கொள்ளலாம். குயில்கள் சண்டை போடுவதை போல் கனவு கண்டால் அல்லது கருங்குயில் கனவில் கண்டால் நல்லதல்ல என்கிறது கனவு பலன்கள். உங்கள் கனவில் கொக்கு வந்தால் விவசாயத்தில் விளைச்சல் அதிகரிக்கும் என்று அர்த்தமாம். முற்காலத்தில் விவசாயிகள் கனவில் பறவைகள் அதிகம் வருமாம். இதன்மூலம் பலன்களை யூகித்தறிவார்கள்.
kuyil

உங்கள் கனவில் கோழியும் அதன் குஞ்சுகளும் கொத்திக் கொத்தி இறை உண்பதுபோல வந்தால், உங்களின் பாதியில் நிறுத்தப்பட்ட கட்டிடத்தின் சீர்செய்யும் பணி நடைபெறும் என்று அர்த்தம். சேவல் கூவினாலோ, கோழியையும், சேவலையும் ஒன்றாக கனவில் காண நேர்ந்தாலோ நல்ல விஷயங்கள் நடைபெறும். அன்னப்பறவை கனவில் வந்தால் கடவுள் ஆசி பரிபூரணமாக கிட்டும். குவா குவா வாத்து கனவில் வந்தால், நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் நிச்சயம் கிட்டும்.

உங்கள் கனவில் கிளி வந்தால் தொழில் வியாபாரம் போன்றவை விருத்தி அடையும். அதே கிளி தானியங்கள் உட்கொள்வது போல கனவில் வந்தால் உங்கள் வீட்டில் பொருட்சேதம் உண்டாகும். கிளி இறப்பது போல கனவு காணக்கூடாது அது போல கனவு வந்தால் கடன் பிரச்சனை மேலோங்கும். தொழில் வளர்ச்சி அடைவதை உணர்த்த கௌதாரி கனவில் வரும். மயில் பறப்பது போலவும், தோகையை விரித்து ஆடுவது போலவும் கனவில் வந்தால் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும்.

peacock

ஆந்தைக் கூட்டத்தை கனவில் கனவு கண்டால் நற்செய்தி ஏற்படும். அதுவே ஒரே ஒரு ஆந்தையை கனவில் கண்டால் கெட்ட செய்தி வரும். ஜோடி குருவியை கனவில் காண நேர்ந்தால் நல்ல செய்தியும், குருவிக் கூட்டை கலைப்பது போன்று கனவு வந்தால் கெட்ட செய்தியும் ஏற்படும். கனவில் காணக்கூடாத பறவையாக கழுகும், பருந்தும் உள்ளது. இவைகள் கனவில் வருவது அபசகுனம் தான். பிணம் தின்னும் கழுகை கனவில் கண்டால் பேராபத்து வரும். உடல் குறைபாடுகளும், அறுவை சிகிச்சையும் செய்ய நேரலாம். எனவே எச்சரிக்கை தேவை.

இதையும் படிக்கலாமே
உயிரோடு இருப்பவர்கள் இறந்தது போல் கனவு வந்தால், இதெல்லாம் நடக்குமா? கனவு பலன் தெரிந்து கொள்ளுங்கள்.

இது போன்று மேலும் உங்களுக்குரிய ஜோதிட சாஸ்திர பலன்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Birds kanavu palangal in Tamil. Birds kanavu palan. Paravaigal kanavu palan. Paravaigal kanavu palangal. Paravaigal kanavil vanthal.