உங்கள் வீட்டில் பிரியாணி, புலாவ், பிரிஞ்சி போன்ற உணவினை செய்யப் போகிறீர்களா? அப்போது இவற்றுடன் தொட்டுக்கொள்ள இந்த பிரியாணி கிரேவியையும் சேர்த்து செய்யுங்கள். சாப்பிடுவதற்கு அவ்வளவு அருமையாக இருக்கும்

gravy
- Advertisement -

சாப்பாடு, குழம்பு, ரசம், பொரியல் இவ்வாறு தனித்தனியாக செய்து சாப்பிடுவதை விட பிரியாணி, பிரிஞ்சி, புலாவ், பிரைட் ரைஸ் இவ்வாறு கலவை சாதம் செய்து சாப்பிடுவதென்பது பலருக்கும் பிடித்தமான ஒன்றாகும். இவ்வாறான உணவுகளை செய்யும்பொழுது இவற்றுடன் தொட்டுக்கொள்ள ஏதேனும் ஒரு சைடிஷ் இருந்தால் நன்றாக தான் இருக்கும். அவ்வாறு மிகவும் ஈஸியாக செய்யக்கூடிய சுவையான ஒரு கிரேவியை எவ்வாறு செய்வது என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

pulao1

தேவையான பொருட்கள்:
வேர்க்கடலை – 2 ஸ்பூன், வெள்ளை எள் – 2 ஸ்பூன், தேங்காய் – 2 சில், புளி – அரை எலுமிச்சம்பழம் அளவு, சின்ன வெங்காயம் – 6, பெரிய வெங்காயம் – ஒன்று, எண்ணெய் – 3 ஸ்பூன், தனி மிளகாய் தூள் – இரண்டு ஸ்பூன், தனியா தூள் – ஒரு ஸ்பூன், மஞ்சள் தூள் – அரை ஸ்பூன், உப்பு – ஒரு ஸ்பூன், கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து.

- Advertisement -

செய்முறை:
முதலில் பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் புளியை ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி 20 நிமிடம் ஊற வைத்து அதனை கரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

onion1

அதன்பின் ஒரு கடாயை அடுப்பின் மீது வைத்து வேர்க்கடலை, எள் இவை இரண்டையும் சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொண்டு, இவற்றுடன் 6 சின்ன வெங்காயத்தையும் சேர்த்து லேசாக வதக்கி, இவை நன்றாக ஆறியபின் மிக்ஸி ஜாரில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி பேஸ்ட் பதத்திற்க்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

பின்னர் அதே கடாயில் 3 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி நீளவாக்கில் அரிந்து வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக பொரித்து கொள்ள வேண்டும். பின்னர் அதே எண்ணெயில் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து நன்றாக வதக்கி விட வேண்டும்.

masala idli

பின்னர் இவற்றுடன் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், தனியாத்தூள் மற்றும் ஒரு ஸ்பூன் உப்பு சேர்த்து நன்றாக கலந்து விட்டு, மூடி போட்டு கொதிக்க விட வேண்டும் இந்த கலவை நன்றாக கொதித்ததும் மூடியைத் திறந்து கரைத்து வைத்துள்ள புளியை சேர்த்து கலந்து விட வேண்டும். பின்னர் மறுபடியும் மூடி போட்டு எண்ணெய் பிரிந்து வரும்வரை அடுப்பை சிம்மில் வைத்து கொதிக்க விட வேண்டும்.

gravy8

சிறிது நேரத்திற்கு பிறகு மூடியை திறந்து கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கினால் போதும். மணமணக்கும் சுவையான கிரேவி தயாராகிவிட்டது. இதனை பிரியாணி, புலாவ் இவற்றுடன் தொட்டுக்கொண்டும் சாப்பிடலாம். அல்லது சுடசுட சாதத்துடன் சேர்த்து பிசைந்தும் சாப்பிடலாம். இது மட்டுமல்லாமல் இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி இவற்றுடன் தொட்டுக் கொள்ள சைட்டிஷ்ஷாகவும் வைத்துக்கொள்ளலாம். இவ்வளவு எளிமையான சுவையான சைட்டிஷை நீங்களும் ஒருமுறை செய்து சுவைத்துப் பாருங்கள். இதன் சுவை நாக்கில் நீர் சொட்டும் அளவிற்கு அற்புதமாக இருக்கும்.

- Advertisement -