நீங்கள் பிறந்த தேதியின் கூட்டு எண் என்ன? எப்படி கூட்ட வேண்டும்? அதன் துல்லிய ஜோதிட பலன்கள் என்னன்னு தெரிஞ்சுக்க வேண்டாமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா?

numerology
- Advertisement -

நீங்கள் பிறந்த தேதியின் கூட்டு எண் என்ன? என்பதை முதலில் எண் கணித ஜோதிடப்படி கூட்டிக் கொள்ள வேண்டும். அதிலிருந்து கிடைக்கும் விடையை வைத்து நீங்கள் எப்படிப்பட்ட குணாதிசயத்துடன் இருப்பீர்கள்? என்பதை ஜோதிடம் துல்லியமாக கணித்து கூறி விடும். பிறந்த தேதியின் கூட்டு எண் எப்படி சுலபமாக கண்டுபிடிப்பது? உங்கள் பிறந்த தேதி கூட்டு எண் பலன்கள் என்னென்ன? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

ஒரு சிலர் பிறந்த தேதி எண் எப்படி கூட்ட வேண்டும் என்பதையே தலையை சுற்றி மூக்கை தொடும் படி கூறி விடுவது உண்டு. நீங்கள் பிறந்த தேதி, மாதம், வருடம் இவை அத்தனையிலும் இருக்கும் எண்களை தனித்தனியாக கூட்ட வேண்டும். அதன் மொத்த விடையை இறுதியாக கூட்டக் கிடைக்கும் விடை தான் பிறந்த தேதியின் கூட்டு எண் ஆகும். உதாரணத்திற்கு நீங்கள் பிறந்தது 22 டிசம்பர் 1989 என்று வைத்துக் கொள்வோம்.

- Advertisement -

பிறந்த தேதி: 22/12/1989
பிறந்த தேதியை கூட்டும் முறை: 2+2+1+2+1+9+8+9 = 34
3+4 = 7
ஒற்றை இலக்க எண் வரும் வரை கூட்ட வேண்டும்.
இப்போது உங்கள் பிறந்த தேதி கூட்டு எண்: 7

இப்போது கிடைத்துள்ள விடை தான் உங்கள் பிறந்த தேதியின் உண்மையான கூட்டு எண் ஆகும். இதனடிப்படையில் உங்களுடைய குணாதிசியங்கள் என்னென்ன? என்பதை ஜோதிடம் கூறுவதை இனி காண்போம். நீங்கள் பிறந்த தேதியின் கூட்டு எண்ணிக்கை ஒன்றிலிருந்து ஒன்பது வரையிலான பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

1
நீங்கள் பிறந்த தேதியின் கூட்டு எண்ணிக்கை 1 என கிடைத்தால் எதிலும் முன்னிலையில் இருக்க வேண்டும் என்கிற மனோபாவம் இருக்கும். எவ்வளவு தடைகள் வந்தாலும் உதறிவிட்டு வெற்றியை நோக்கிய பயணத்தில் எப்பொழுதும் கடிவாளம் போட்டது போல் சென்று கொண்டே இருப்பீர்கள். அறிவிலும், தோற்றத்திலும் சிறந்தவர்களாக இருப்பீர்கள். உங்களை சுற்றி எப்பொழுதும் ஆரவாரம் இருப்பதை நீங்கள் விரும்புவதில்லை, எப்பொழுதும் தனிமையை நோக்கி சென்று விடுவீர்கள்.

2
உங்கள் பிறந்த தேதியின் கூட்டு எண்ணிக்கை 2 என கிடைத்தால் எவரையும் வசீகரிக்கும் ஆற்றல் உங்களிடம் இருக்கும். வாய்ப் பேச்சில் வல்லவர்களாக திகழ்வார்கள். இவர்களிடம் பேசி யாராலும் ஜெயிக்க முடியாது. இவரைச் சுற்றிலும் எப்போதும் ஒரு நண்பர் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும். இவர்களை நம்பி எந்த ஒரு ரகசியத்தையும் கூறி விடக்கூடாது. தங்களுடைய ரகசியத்தையே காப்பாற்ற முடியாதவர்கள் இவர்கள். உள்ளே ஒன்று வைத்து வெளியே ஒன்று என்று பேச தெரியாதவர்கள்.

- Advertisement -

3
உங்கள் பிறந்த தேதியின் கூட்டு எண்ணிக்கை 3 என கிடைத்தால் அதிர்ஷ்டம் நிறைந்தவராக இருப்பார்கள். இவர்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் பல தடைகளை தாண்டி வெற்றி பெற்றுவிடும். தோல்விகளை கண்டு துவண்டு விடாமல் மீண்டும் மீண்டும் முயற்சி செய்யும் உத்வேகம் இவர்களிடம் நிறைந்து இருக்கும். வீண் வம்புக்கு செல்ல மாட்டார்கள் வந்த சண்டையை விட்டு விடவும் மாட்டார்கள். உடனிருப்பவர்களே இவர்களுக்கு நிறைய துரோகம் செய்ய வாய்ப்புகள் உண்டு.

4
உங்கள் பிறந்த தேதியின் கூட்டு எண்ணிக்கை 4 என கிடைத்தால் நீங்கள் துணிச்சலுக்கு குறைந்து போனதில்லை. முன் வைத்த காலை பின் வைக்க தெரியாதவர்கள் இவர்கள். எந்த ஒரு செயலையும் ஆரம்பிக்கும் முன் ஆயிரம் முறை யோசித்தாலும் செய்த பின் ஒரு நிமிடம் கூட யோசிக்க மாட்டார்கள். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவதில் வல்லவர்கள். நேர்மையும், உண்மையில் இவர்களிடம் அதிகம் காணக் கிடைக்கும்.

5
உங்கள் பிறந்த தேதியின் கூட்டு எண்ணிக்கை 5 என கிடைத்தால் அயராது உழைக்கும் உழைப்பாளிகளாக இருப்பார்கள். இவர்கள் சொல்லும் நிறைய விஷயங்கள் பிற்காலத்தில் உண்மையில் பலிக்கும். எவரையும் எளிதில் கணித்து விடும் இவர்கள் எதிலும் ஜெயிக்க போராடுபவர்கள். அடுத்தவர்களுக்கு அடிமையாக இருப்பதை காட்டிலும் தன் கையே தனக்கு உதவி என்று தன்னம்பிக்கையுடன் இருக்கக் கூடியவர்கள். ரத்த பாசமும், பந்தபாசமும் இவர்களிடம் அதிகம் உண்டு.

6
உங்கள் பிறந்த தேதியின் கூட்டு எண்ணிக்கை 6 என கிடைத்தால் தோற்றத்தில் கவர்ச்சிகரமாக காட்சி அளிப்பார்கள். காந்தக் கண்களை உடையவர்களாக இருப்பார்கள். சாதுரியமான பேச்சாற்றல், எவரிடமும் சவுகரியமாக பழகும் குணாதிசயம் இவர்களை மேலும் உயர்வாக காட்டும். பத்து நிமிடம் அவர்களிடம் பேசினாலே அனைவரும் விரும்பி விடுவார்கள். பகைவர்களுக்கு கூட கருணை காட்டும் உள்ளம் படைத்த இவர்களுக்கு துரோகிகளை கண்டால் மட்டும் சுத்தமாக பிடிக்காது.

7
உங்கள் பிறந்த தேதியின் கூட்டு எண்ணிக்கை 7 என கிடைத்தால் எப்போதும் நேர்மையுடன் அதிகம் காணப்படுவீர்கள். உங்களைப் போலவே அனைவரும் இருக்க வேண்டுமென்று நினைப்பீர்கள். ஆனால் அது அப்படி நடக்காமல் போகும் பொழுது துவண்டு போய் விடுவீர்கள். அன்பும், அக்கறையும் அதிகம் காணப்படும் இவர்களிடம் நட்பு கொண்டவர்களுக்கு எப்பொழுதும் அதிர்ஷ்டம் தான். ஒருமுறை பழகிவிட்டால் கடைசி வரை அவர்களுக்காக எதையும் செய்பவர்களாக இருப்பார்கள். மிகவும் வித்தியாசமான இவர்கள் எதிலும், என்றும் தனித்துவமானவர்கள்.

8
உங்கள் பிறந்த தேதியின் கூட்டு எண்ணிக்கை 8 என கிடைத்தால் குடும்ப பாசம் அதிகம் உள்ளவர்களாக இருப்பார்கள். சகோதர, சகோதரிகளிடம் அதிகம் பாசம் இருக்கும் ஆனால் அதனை வெளியில் காட்டிக் கொள்ள மாட்டார்கள். நம்பியவர்களுக்கு துரோகம் செய்யக் கூடாது என்று நினைப்பவர்கள். சட்டென எவரையும் எளிதில் நம்பி விடும் இவர்கள் வெகுளித் தனமாகவும் சில நேரங்களில் நடந்து கொள்வார்கள். சிறு அன்புக்கு கூட ஏங்குபவர்களாக இருப்பார்கள்.

9
உங்கள் பிறந்த தேதியின் கூட்டு எண்ணிக்கை 9 என கிடைத்தால் அமைதியான சுபாவம் கொண்டவர்களாக இருப்பார்கள். ஆனால் வாக்குவாதம் என்று வரும் பொழுது தங்கள் தரப்பு கருத்துக்களை புட்டு புட்டு வைப்பார்கள். சமூகத்தின் மீதான அக்கறை அதிகமாக இவர்களிடம் இருக்கும். காதல், நாட்டுப்பற்று, விசுவாசம் என்று அனைத்திலும் உண்மையாக இருப்பார்கள். ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசம் பார்க்காமல் எல்லோரிடமும் இயல்பாக, சரிசமமாக பழகக் கூடியவர்கள். யாரிடம் எவ்வளவு பேச வேண்டும் என்ற அளவுகோல் வைத்து இருப்பார்கள். தேவையில்லாத பேச்சுகளை பேசுவதில்லை.

- Advertisement -