2, 11, 20, 29 இந்த தேதியில் பிறந்தவர்களாக இருந்தால், நீங்கள் இப்படித்தான் இருப்பீர்கள்

birth-date-rasi-palan

2, 11, 20, 29 இந்த தேதிகளில் பிறந்த நீங்கள் உங்கள் வாழ்க்கையில் எப்படி இருப்பீர்கள் என்பதை பற்றி தெரிந்து கொள்ளுங்கள். நீங்கள் பிறந்த தேதியின் கூட்டு எண் 2 ஆக இருந்தால் உங்களுக்கு உரிய கிரகம் சந்திரன். உங்களின் குணம், தொழில், நண்பர்கள், உடலமைப்பு, இல்லற வாழ்க்கை இவைகளெல்லாம் எப்படி இருக்கும் என்பதை இந்த பதிவில் காண்போம்.

astrology

குணம்

இரண்டாம் எண்ணில் பிறந்த நீங்கள் சந்திரனை கிரகணமாக கொண்டுள்ளதால் உங்களின் செயல்திறன் ஏற்ற இறக்கத்தோடு தான் காணப்படும். சந்திரனின் வளர்பிறை, தேய்பிறை போல உங்களின் வாழ்க்கையும் ஏற்றத்தாழ்வுகளுடன் அமையும். ஆனால் நீங்கள் சுறுசுறுப்பில் குறைந்தவர்கள் அல்ல. எதையும் சிந்தித்து செயல்படுவீர்கள். உங்களுக்கு வாழ்வில் எதிர்ப்புகள் இருந்தாலும் அதனை எதிர்த்து முன்னேறி செல்வீர்கள். ஞாபகசக்தி உடையவர்களாக இருப்பீர்கள். கற்பனை சக்தி அதிகமாக இருக்கும். நகைச்சுவை பேச்சாளராக இருப்பீர்கள். கடவுள் பக்தி நிறைந்தவர்களாகவும் இருப்பீர்கள். கடந்த காலங்களை நினைவு படுத்தி கொண்டு உங்களுக்கு நீங்களே கவலைப்பட்டுக் கொள்வீர்கள். உங்களின் எண்ணங்களை நேரடியாக மற்றவர்களிடம் கூற மாட்டீர்கள். இலைமறைக் காயாக உங்களின் பேச்சு இருக்கும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் தோல்வியில் போய் முடிந்தால் அதனை மீண்டும் முயற்சித்து வெற்றி பெறுவீர். உங்களிடம் வாக்கு கொடுத்துவிட்டு அதை மறந்தவர்கள் உங்களிடமிருந்து தப்பிக்க முடியாது. உங்களின் மன தைரியம் சிலசமயம் மேலோங்கும், சில சமயங்களில் கோழைத்தனமும் காணப்படும்.

தொழில்

கற்பனைத் திறன் கொண்ட நீங்கள் கதை எழுதுபவர்களாகவும், ஓவியம் வரைய கூடியவர்களாகவும், வசனம், பாடல்கள் போன்றவற்றை எழுதுபவர்களாகவும் இருக்கலாம். சந்திரனின் ஆதிக்கம் உள்ளதால் பால் வியாபாரம், குளிர்பான வியாபாரம், ஐஸ்கிரீம் வியாபாரம், நீர் சம்பந்தப்பட்ட பொருட்கள் உங்களுக்கு தொழிலாக அமையும். கடல் கடந்து சென்று வேலை செய்யும் யோகமும் உங்களுக்கு அமையும். அரசாங்க உத்தியோகம் செய்பவர்களாகவும் இருப்பர்.

- Advertisement -

astrology

நண்பர்கள்

எளிதில் குழப்பக் கூடிய நீங்கள் யாரிடமும் அதிகமாக நட்புறவு வைத்துக் கொள்ள மாட்டீர்கள். அப்படி பழகி விட்டால் அவர்களை விட்டு பிரிய மாட்டீர்கள். நண்பர்களிடம் உண்மையாக பழகுவீர்கள். உங்களுக்கு கூட்டு எண் 1, 5ல் பிறந்தவர்கள் நண்பர்களாக இருக்க முடியும். கூட்டு எண்4, 7 தேதி பிறந்தவர்கள் இடம் உங்களால் நட்பு வைத்துக்கொள்ள முடியாது.

உடலமைப்பு

சந்திரனை கிரகணமாக கொண்ட நீங்கள் நிச்சயம் அடுத்தவர்களை கவரக்கூடிய அழகினை உடையவர்களாக தான் இருப்பீர்கள். நல்ல உயரம், கூர்மையான மூக்கு, அழகான முகம் இவைகளை நீங்கள் பெற்றிருப்பீர்கள். உங்கள் குரலானது இனிமையாக இருக்கும். நீங்கள் குளிர் சாதன பொருட்களை மிகவும் விரும்பி அருந்துவதால் உங்களுக்கு சளி, காய்ச்சல், தலைவலி போன்ற பிரச்சினைகள் அடிக்கடி உண்டாகும். கூட்டு எண் இரண்டில் பிறந்தவர்கள் மது அருந்தக் கூடாது அது உங்கள் உயிருக்கே ஆபத்தாக அமையும்.

இல்லற வாழ்க்கை

astrology wheel

நீங்கள் குடும்பத்தை பொறுப்பாக கவனித்து கொள்வீர்கள். உங்களின் வார்த்தைகள் கடுமையாக இருப்பதால் குடும்பத்தில் உள்ளவர்களிடம் அடிக்கடி சண்டை ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆடம்பரமான வாழ்க்கையை நீங்கள் விரும்புவீர்கள். உங்கள் குடும்பத்தில் ஏற்படக்கூடிய பிரச்சனைக்கு இதுவே காரணம். உங்கள் பிடிவாத குணத்தை தவிர்ப்பது நல்லது. அனைவரையும் அனுசரித்துச் சென்றால் குடும்பத்தில் நிம்மதி கிடைக்கும்.

அதிர்ஷ்ட தேதி -1, 10, 19, 28
அதிர்ஷ்ட நிறம்-வெள்ளை
அதிர்ஷ்ட திசை-தென் கிழக்கு
அதிர்ஷ்ட கிழமை-திங்கள், வியாழன்
அதிர்ஷ்ட கல்-முத்து, சந்திர காந்தக்கல்
அதிர்ஷ்ட தெய்வம்- வெங்கடாசலபதி துர்க்கை.

இதையும் படிக்கலாமே
1, 10, 19, 28 இந்த தேதியில் பிறந்தவர்களாக இருந்தால், நீங்கள் இப்படித்தான் இருப்பீர்கள்

இது போன்ற ஜோதிடம் சார்ந்த பல தகவல்களை அறிந்துகொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Birth date horoscope in Tamil. Pirantha thethi palan. Pirantha thethi jathagam. Pirantha thethi rasi palangal in Tamil.