3, 12, 21, 30 இந்த தேதியில் பிறந்தவர்களாக இருந்தால், நீங்கள் இப்படித்தான் இருப்பீர்கள்

birth-date-rasi-palan

3, 12, 21, 30 இந்த தேதிகளில் பிறந்த நீங்கள் உங்கள் வாழ்க்கையில் எப்படி இருப்பீர்கள் என்பதை பற்றி தெரிந்து கொள்ளுங்கள். நீங்கள் பிறந்த தேதியின் கூட்டு எண் 3 ஆக இருந்தால் உங்களுக்கு உரிய கிரகம் குரு. உங்களின் குணம், தொழில், நண்பர்கள், உடலமைப்பு, இல்லற வாழ்க்கை இவைகளெல்லாம் எப்படி இருக்கும் என்பதை இந்த பதிவில் காண்போம்.

astro

குணம்

மூன்றாம் தேதியில் பிறந்த நீங்கள் குருவின் கிரகண ஆதிக்கத்தில் இருப்பதால் உங்களின் அறிவு திறனை பற்றி சொல்லவே தேவையில்லை. அந்த அளவிற்கு நீங்கள் திறமைசாலியாக இருப்பீர்கள். நீங்கள் கற்றதை அடுத்தவர்களுக்கு சொல்லித் தரக்கூடிய ஆற்றலையும் பெற்றிருப்பீர்கள். உங்களின் பேச்சாற்றலானது அடுத்தவர்கள் போற்றும் அளவில் இருக்கும். ஒரு பட்டிமன்றத்தில் பேசக்கூடிய திறமை கொண்டவர்கள் நீங்கள். எந்த இடத்தில் நின்று பேசினாலும் உங்கள் பேச்சில் தடுமாற்றம் வரவே வராது. எழுதுவதிலும் நல்ல திறமை வாய்ந்தவர்களாக இருப்பீர்கள். எந்த காரியத்தில் நீங்கள் தொடங்கினாலும் அந்த காரியத்தை முழு கவனத்துடன் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். ஆனால் நீங்கள் மற்றவர்களிடம் பேசும்போது வார்த்தைகள் கடினமாகத்தான் இருக்கும். முன் கோபம் கொண்ட நீங்கள் உங்கள் கோபம் குறைந்த உடன் நீங்கள் செய்த தவறினை உணர்வீர்கள். ஆனால் எதையும் உள்ளொன்று வைத்துக்கொண்டு புறமொன்று பேச மாட்டீர்கள். அடுத்தவர்களுக்கு உதவி செய்யக்கூடிய மனது உங்களிடம் இருக்கும். மற்றவர்களிடம் அடிமைத் தொழில் செய்வது உங்களுக்கு பிடிக்காது.

தொழில்

உங்களின் அறிவாற்றலுக்கு நீங்கள் எந்தத் தொழிலில் ஈடுபட்டாலும் அதனை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். அடுத்தவர்களுக்கு சொல்லித் தரக்கூடிய ஆசிரியர், தலைமை ஆசிரியர் இப்படிப்பட்ட வேலையில் நீங்கள் இருப்பீர்கள். வாய்ஜாலத்தில் கில்லாடியாக இருக்கும் வக்கீல் தொழில் செய்பவர்களாக இருப்பீர்கள். வியாபாரிகளாக இருந்தால் உங்கள் பேச்சாற்றலால் உங்கள் தொழிலை விரிவுபடுத்தி முன்னேற்றம் அடைந்து விடுவீர்கள்.

- Advertisement -

astrology

நண்பர்கள்

அடுத்தவர்களுக்கு உதவி செய்யும் குணம் கொண்ட நீங்கள், தன்னலம் அற்றவர்கள். இதனால் உங்களின் நண்பர்கள் உங்களுக்கு நன்றியோடு தான் இருப்பார்கள். உங்களுக்கு பிடிக்காதவர்களை நீங்கள் கண்டுகொள்ளவே மாட்டீர்கள். கூட்டு எண் 1, 2, 9 இந்த தேதிகளில் பிறந்தவர்கள் உங்களிடம் நட்பாக இருப்பார்கள். கூட்டு எண் 5, 6 இந்த தேதிகளில் பிறந்தவர் உங்களிடம் நட்பு வைத்துக்கொள்ள முடியாது.

உடலமைப்பு

உங்கள் குரலில் எப்பொழுதும் ஆளுமை தன்மை இருக்கும். நீங்கள் அதிகமாக சிந்திப்பவர்கள் அதிக திறமை உடையவர்கள். இதனால் உங்கள் தலைமுடி சீக்கிரமாகவே உதிர்ந்து விடும். நடுத்தரமான உயரத்தை கொண்டிருப்பீர்கள். பொதுவாகவே உங்களுக்கு சரும பிரச்சனைகள் இருந்து வரும். அறிவுத்திறனை வளர்த்துக்கொள்ள சிந்தித்துக் கொண்டே இருப்பதால் உங்களுக்கு தலைவலி வரும்.

astrology

இல்லற வாழ்க்கை

கூட்டு எண் மூன்றில் பிறந்தவர்கள், குடும்பத்தில் வரும் பிரச்சனைகளை எளிமையாக சமாளித்து விடுவர். நீங்கள் காதலிப்பவர்களாக இருந்தால் உங்கள் காதல் திருமணத்தில் முடியும். ஆனால் அனேகமானவருக்கு பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் தான் நடக்கும். உங்களுக்கு அமையும் வாழ்க்கை துணை தெய்வ பக்தியுடன் இருப்பார். நீங்கள் கணவனாக இருந்தாலும், மனைவியாக இருந்தாலும் விட்டுக் கொடுத்து செல்லும் மனப்பக்குவம் கொண்டிருப்பீர்கள்.

அதிர்ஷ்ட தேதி -3, 12, 21, 30
அதிர்ஷ்ட நிறம்-பொன்னிறம்
அதிர்ஷ்ட திசை-வடக்கு
அதிர்ஷ்ட கிழமை- வியாழன்
அதிர்ஷ்ட கல்-புஷ்பராகம்
அதிர்ஷ்ட தெய்வம்-தட்சிணாமூர்த்தி

இதையும் படிக்கலாமே
2, 11, 20, 29 இந்த தேதியில் பிறந்தவர்களாக இருந்தால், நீங்கள் இப்படித்தான் இருப்பீர்கள்

இது போன்ற ஜோதிடம் சார்ந்த பல தகவல்களை அறிந்துகொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Birth date horoscope in Tamil. Pirantha thethi palan. Pirantha thethi jathagam. Pirantha thethi rasi palangal in Tamil.