8, 17, 26 இந்த தேதியில் பிறந்தவர்களாக இருந்தால், நீங்கள் இப்படித்தான் இருப்பீர்கள்

birth-date-rasi-palan

8, 17, 26 இந்த தேதிகளில் பிறந்த நீங்கள் உங்கள் வாழ்க்கையில் எப்படி இருப்பீர்கள் என்பதை பற்றி தெரிந்து கொள்ளுங்கள். நீங்கள் பிறந்த தேதியின் கூட்டு எண் 8 ஆக இருந்தால் உங்களுக்கு உரிய கிரகம் சனி பகவான். உங்களின் குணம், தொழில், நண்பர்கள், உடலமைப்பு, இல்லற வாழ்க்கை இவைகளெல்லாம் எப்படி இருக்கும் என்பதை இந்த பதிவில் காண்போம்.

Numerology numbers

குணம்
கூட்டு எண் எட்டில் பிறந்த நீங்கள் நேர் வழியில் தான் செல்வீர்கள். எந்த ஒரு முன்னேற்றத்தை அடைய வேண்டும் என்றாலும், அதற்காக குறுக்கு வழியை தேர்ந்தெடுக்க மாட்டீர்கள். உங்கள் முன்னேற்றமானது நிதானமாகத்தான் இருக்கும். அவசரமாக எந்த செயலிலும் ஈடுபட மாட்டீர்கள். பொறுமையின் பிறப்பிடமாக திகழ்வீர்கள். உங்களின் சந்தோஷத்தை மற்றவர்களிடம் பகிரும் நீங்கள் உங்களுக்குள் இருக்கும் கஷ்டங்களை உங்கள் மனதில் தான் வைத்துக் கொள்வீர்கள். மற்றவர்களிடம் கூற மாட்டீர்கள். உங்களால் முடிந்த அளவிற்கான உதவியை இயலாதவர்களுக்கு செய்வீர்கள். எப்போதும் ஏதோ ஒரு சிந்தனையுடன் வாடிய முகத்தோடு தான் காணப்படுவீர்கள். பல சிந்தனைகள் உங்கள் மனதில் இருந்தாலும் உங்கள் பேச்சு தெளிவாக தான் இருக்கும். மற்றவர்களை எளிதில் எடைபோடும் குணமுடைய நீங்கள் கூர்மையான அறிவாற்றல் பெற்றிருப்பீர்கள். அநாவசியமாக உங்களது பொழுதை கழிக்காமல், உங்கள் கடமையில் சரியாக இருப்பீர்கள். மற்றவர்கள் உங்களைப் பற்றி பேசும் வீண் பேச்சுகளை நீங்கள் காது கொடுத்து கேட்க மாட்டீர்கள்.  நீங்கள் ஈடுபடும் காரியத்தில் உங்களுக்கான பலன்கள் இரட்டிப்பாக கிடைக்க வேண்டும் என்று நினைப்பீர்கள். உங்களின் பேச்சானது அடுத்தவர்களை மகிழ்ச்சிப்படுத்தும் வகையில் இருக்கும்.

தொழில்
உங்களின் வேலையை நீங்கள் சுலபமாக முடித்து விடுவீர்கள். கடினமான வேலையாக இருந்தாலும் கூட அது உங்கள் கைக்கு வந்த பிறகு சுலபமான வேலையாக மாறிவிடும். இரும்பு சம்பந்தப்பட்ட தொழில் உங்களுக்கு அதிக லாபம் தரும். அறிவு சார்ந்த வேலைகளான வக்கீல் தொழில், நீதிபதி தொழில், ஆராய்ச்சிக்கூடம் இது போன்ற தொழில்களில் உள்ளவர்களாக இருப்பீர்கள். சிலருக்கு அடிமையாக இருக்கும்  தொழில்கள் அமைந்திருந்தாலும் அதையும் தாண்டி படிப்படியாக வெற்றி அடைவீர்கள்.

astro wheel 1

நண்பர்கள்
திறமையான பேச்சும், அடுத்தவர்களை மகிழ்விக்கும் உங்களது நகைச்சுவை பேசினாலும் மற்றவர்களை கவர்ந்து இருப்பீர்கள். ஆனால் உங்களுக்கு கோபம் எப்பொழுது வரும் என்று யாருக்கும் தெரியாது. கூட்டு எண் 4, 5, 6, 7 இந்த எண்ணில் பிறந்தவர்கள் உங்களிடம் நட்புறவாக இருப்பார்கள். கூட்டு எண் 1, 2, 9 இந்த தேதிகளில் பிறந்தவர்கள் உங்களிடம் நட்புறவு வைத்துக் கொள்வது கடினம்.

- Advertisement -

உடலமைப்பு
கூட்டு எண் எட்டில் பிறந்தவர்கள் நடுத்தர உயரத்தைக் கொண்டவர்களாக இருப்பீர்கள். நீங்கள் பிறந்த தேதிக்கு சனியின் ஆதிக்கம் இருப்பதால் கருப்பான தோற்றம் கொண்டவர்களாக இருப்பீர்கள். சிறிய வயது உடையவர்களாக இருந்தாலும் முதிர்ச்சியான தோற்றத்தை உடன் காணப்படுவீர்கள். உங்களுக்கு வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் வரும். தோல் சம்பந்தமான பிரச்சனைகளும் இருக்கும்.

astrology

இல்லற வாழ்க்கை
நீங்கள் உங்கள் குடும்பத்தின் மீது அதிக அக்கறை உடையவர்களாக இருப்பீர்கள். உங்கள் காதல் கல்யாணத்தில் முடிவது என்பது சிறிது கடினமான விஷயம் தான். உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எதிர்கொள்ளும் கஷ்டங்களை சுலபமாக கடந்து வருவீர்கள். உங்களின் வாழ்க்கைத் துணை சிக்கனத்தை கடைபிடிப்பார்கள். உங்கள் உறவினர்களிடம் அனுசரித்து செல்லும் குணத்தை நீங்கள் பெற்றிருப்பீர்கள். குடும்பத்தில் ஏதாவது ஒரு பிரச்சினை உங்களால் வந்து விட்டால் அதிலிருந்து நழுவி சென்று விடுவீர்கள்.

அதிர்ஷ்ட தேதி -8, 17, 26
அதிர்ஷ்ட நிறம்-கருப்பு
அதிர்ஷ்ட திசை-தெற்கு
அதிர்ஷ்ட கிழமை-சனி
அதிர்ஷ்ட கல்-நீலம்
அதிர்ஷ்ட தெய்வம்-ஐயப்பன்

இதையும் படிக்கலாமே:
7, 16, 25 இந்த தேதியில் பிறந்தவர்களாக இருந்தால், நீங்கள் இப்படித்தான் இருப்பீர்கள்

இது போன்ற ஜோதிடம் சார்ந்த பல தகவல்களை அறிந்துகொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Birth date horoscope in Tamil. Pirantha thethi palan. Pirantha thethi jathagam. Pirantha thethi rasi palangal in Tamil.