7, 16, 25 இந்த தேதியில் பிறந்தவர்களாக இருந்தால், நீங்கள் இப்படித்தான் இருப்பீர்கள்

birth-date-rasi-palan

7, 16, 25 இந்த தேதிகளில் பிறந்த நீங்கள் உங்கள் வாழ்க்கையில் எப்படி இருப்பீர்கள் என்பதை பற்றி தெரிந்து கொள்ளுங்கள். நீங்கள் பிறந்த தேதியின் கூட்டு எண் 7 ஆக இருந்தால் உங்களுக்கு உரிய கிரகம் கேது. இந்த தேதியில் பிறந்தவர்களுக்கு சந்திரனின் ஆதிக்கமும் இருக்கும் என்று கூறுகிறது ஜோதிடம். உங்களின் குணம், தொழில், நண்பர்கள், உடலமைப்பு, இல்லற வாழ்க்கை இவைகளெல்லாம் எப்படி இருக்கும் என்பதை இந்த பதிவில் காண்போம்.

Numerology numbers

குணம்
கூட்டு எண் 7 இல் பிறந்தவர்கள் மற்றவர்களிடம் இருந்து பிரிந்து தனித்துவம் பெற்றவர்களாக இருப்பீர்கள். மற்றவரின் வழியை நீங்கள் பின்பற்ற மாட்டீர்கள். உங்களுக்கான தனி வழியில் தான் நீங்கள் செல்வீர்கள். உங்களின் யோசனை, செயல்திறன், பிரச்சனையை அணுகுவது இவை அனைத்திலும் மற்றவர்களிடமிருந்து மாறுபட்ட நோக்குடன் தான் செயல்படுவீர்கள். உங்களது செயல்பாட்டினை அடுத்தவர்களால் புரிந்து கொள்ளவே முடியாது. நல்லதாக இருந்தாலும், கெட்டதாக இருந்தாலும், மற்றவர்களுக்காக உங்களை மாற்றிக் கொள்ள மாட்டீர்கள். மற்றவர்களிடம் சகஜமாகப் பேசும் குணமுடைய நீங்கள், சில சமயங்களில் எதுவும் பேசாமல் இருப்பது உங்கள் சுபாவம். உங்கள் வாழ்க்கையில் முன்னேறுவதற்கான சந்தர்ப்பங்கள் அதிகமாக வந்திருக்கும். உங்கள் பிடிவாத குணத்தினால் அதையெல்லாம் நீங்கள் தவறவிட்டு இருப்பீர்கள். இதன் மூலம் உங்கள் வாழ்க்கை சங்கடத்தில் தள்ளப்பட்டிருக்கும். வாழ்வில் முன்னேற வேண்டும் என்று நினைக்கும் நீங்கள் உங்கள் கோபத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். சுகமாக வாழ வேண்டும் என்று நினைக்கும் உங்கள் எண்ணத்தை நிறைவேற்ற வேண்டுமென்றால் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. அடுத்தவர்களுக்கு தானாகவே முன்வந்து உதவி செய்யும் நீங்கள் மற்றவர்களின் பாராட்டை பெறுவீர்கள்.

தொழில்
கூட்டு எண் 7 இல் பிறந்த நீங்கள் கேதுவை ராசிநாதனாக கொண்டுள்ளதால் சிந்திக்கும் திறன் அதிகமாக இருக்கும். இதனால் புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடிக்கும் தொழிலில் ஈடுபடுவீர்கள். ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர்களாக இருப்பதால், ஆன்மீகம், மதம் சம்பந்தமான தத்துவ பேச்சாளராக இருப்பதற்கு வாய்ப்பு உண்டு. கடல்சார் சம்பந்தப்பட்ட வியாபாரத்தில் முன்னேற்றம் அடையலாம். கப்பல், படகு தொழில் சம்பந்தமான மீன்பிடித்தொழில் போன்றவற்றை தேர்ந்தெடுப்பது நல்லது.

astro wheel 1

நண்பர்கள்
பிடிவாத குணமும் சற்று குழப்பமான மனநிலையை கொண்ட நீங்கள் அனைவரிடமும் நட்புறவு வைத்துக்கொள்வது என்பது கொஞ்சம் கடினம் தான். கூட்டு எண் 8, 5 இந்த எண்ணில் இந்த எண்ணில் பிறந்தவர்கள் உங்களை அனுசரித்து செல்வார்கள். கூட்டு எண் 1, 2, 9 இந்த எண்ணில் பிறந்தவர்களிடம் உங்களால் நட்பு வைத்துக் கொள்ள முடியாது.

- Advertisement -

உடலமைப்பு
நடுத்தரமான உயரத்தை உடையவர்களாக இருப்பீர்கள். இளமையான வயதில் ஒல்லியான தோற்றத்தையும், நடுத்தர வயதில் சற்று தடிப்பான தோற்றமும் உண்டாகும். மற்றவர்களை வசியம் செய்யும் கூர்மையான மூக்கை கொண்டவர்களாக இருப்பீர்கள். உங்களின் குரல் இனிமையாக இருக்கும். உங்களுக்கு தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பு உண்டு. உடல்நலனை காத்துக்கொள்ள தேவையற்ற பழக்க வழக்கங்களில் ஈடுபடாமல் இருப்பது நல்லது.

numbers

இல்லற வாழ்க்கை
உங்களின் இல்லற வாழ்க்கை உங்களுக்கு நிறைவாக அமைந்திருக்காது.  சந்தோஷமும், துக்கமும் சம அளவில் தான் வரும். ஆனால் உங்களின் அதீத கடவுள் பக்தி உங்களுக்கு ஏற்படும் கஷ்டத்தை படிப்படியாக குறைத்து விடும். நீங்கள் குடும்பத்தில் அதிக அக்கறையும், அதிகமான ஈடுபாடும் வைக்கவேண்டும். உங்கள் முன்கோபத்தால் வாழ்க்கைத் துணையுடன் பிரச்சனை வருவதற்கு வாய்ப்பு உள்ளது. அனுசரித்துப் போவதால் உங்கள் இல்லற வாழ்க்கை சந்தோஷமாக அமைய வாய்ப்புள்ளது.

அதிர்ஷ்ட தேதி -7, 16, 25
அதிர்ஷ்ட நிறம்-காவி நிறம்
அதிர்ஷ்ட திசை-வடமேற்கு
அதிர்ஷ்ட கிழமை-திங்கள்
அதிர்ஷ்ட கல்-வைடூரியம்
அதிர்ஷ்ட தெய்வம்-கணபதி

இதையும் படிக்கலாமே:
6, 15, 24 இந்த தேதியில் பிறந்தவர்களாக இருந்தால், நீங்கள் இப்படித்தான் இருப்பீர்கள்

இது போன்ற ஜோதிடம் சார்ந்த பல தகவல்களை அறிந்துகொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Birth date horoscope in Tamil. Pirantha thethi palan. Pirantha thethi jathagam. Pirantha thethi rasi palangal in Tamil.