விதிப்படி நீங்கள் சாகும்வரை மகிழ்ச்சியாக வாழ இதை அவசியம் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். இதை கண்டுபிடித்துவிட்டால் உங்களை வெல்ல எவராலும் முடியாது.

thithi
- Advertisement -

உங்களுக்கு உங்களின் ஜாதகத்தில் இருக்கும் ராசி, நட்சத்திரம் என்னவென்று கேட்டால் உடனே கூறி விடுவீர்கள். ராசி, நட்சத்திரம் அலல்து லக்னம் இவற்றை வைத்து தான் பெரும்பாலும் பொதுப்பலன்கள் பார்க்கப்படுகின்றன. ஆனால் நீங்கள் பிறந்த ராசி, நட்சத்திரத்தை காட்டிலும் பிறந்த திதி மிகவும் முக்கியமானது. இது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்? திதி இறந்தவர்களுக்காக தானே பார்க்கப்படும்! என்று நினைக்காதீர்கள். இறந்தவர்களுக்கு திதி எப்படி முக்கியமோ! அதே போல தான் நாம் பிறந்த திதியும், அதன் நித்யா தேவதைகளும் முக்கியமாக ஜோதிட சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.

இதை ஜோதிடர்கள் ரகசியமாகவே வைத்திருப்பார்கள். நீங்கள் பிறந்த திதியை தெரிந்து கொண்டால், அதற்குரிய வழிபாடுகள் மேற்கொண்டீர்கள் என்றால் உங்கள் விதிப்படி அமைய வேண்டிய மகிழ்ச்சியான வாழ்க்கையை உங்களால் வாழ முடியும். அதைப் பற்றிய தெளிவான தகவல்களை இப்பதிவில் காணலாம்.

- Advertisement -

உங்கள் பிறந்த திதியை வைத்து நீங்கள் துவங்கும் எந்த காரியமும் தோல்வி அடையாது. திதி தேவதையை முறையாக வணங்கினால் தொட்டதெல்லாம் துலங்கும். திதி தேவதை படத்தை வைத்து அதற்குரிய மந்திரங்களை உச்சரித்து வந்தால் உங்களின் வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியாக, நிம்மதியாக வாழ முடியும். விதிப்படி நீங்கள் அனுபவிக்க வேண்டிய கர்ம பலன்கள் எப்படி அனுபவித்துக் கொண்டிருக்கிறீர்களோ அதே போல, உங்களின் புண்ணிய பலன்களையும் நீங்கள் அனுபவிக்க இந்த தேவதைகள் அருள் புரிவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இதனால்தான் ஒவ்வொருவரும் தங்களின் பிறந்த திதியை தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியமான ஒன்று.

திதிகளில் மொத்தம் 15 திதிகள் உள்ளன. அமாவாசையில் ஆரம்பித்து பௌர்ணமி வரை 15 திதிகள் உண்டு. இதில் கவனிக்க வேண்டிய ஒரு விஷயமும் உண்டு. வளர்பிறை திதிக்கு சுக்லபட்சம், பூர்வபட்சம் என்ற பெயர்கள் உண்டு. அதேபோல் தேய்பிறை திதிக்கு கிருஷ்ண பட்சம், அமரபட்சம் என்ற பெயர்களும் உண்டு. இதனை குழப்பிக் கொள்ளாதீர்கள். 15 திதிகளில் அமாவாசை, பிரதமை/த்விதீயை, த்ருதீயை, சதுர்த்தி, பஞ்சமி, ஷஷ்டி, ஸப்தமி, அஷ்டமி, நவமி, தசமி, ஏகாதசி, த்வாதசி, த்ரயோதசி, சதுர்த்தசி, பௌர்ணமி ஆகியவை அடங்கும்.

- Advertisement -

வளர்பிறையில் வரும் திதிகளுக்கும், தேய்பிறையில் வரும் திதிகளுக்குமான தேவதைகள், மந்திரங்கள் வித்தியாசப்படும். ஒன்றுபோல் வருவதில்லை இதையும் நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். நீங்கள் பிறந்த ஜாதகத்தை வைத்து உங்களின் திதியை கண்டுபிடிக்க முடியும். ராசி, நட்சத்திரம், லக்னத்திற்கு கீழ் நீங்கள் பிறந்த திதி வளர்பிறை/சுக்லபட்சம் (திதி) அல்லது தேய்பிறை/கிருஷ்ணபட்சம் (திதி) என்று குறிப்பிடப்பட்டிருக்கும்.

இப்போது உங்கள் பிறந்த திதி என்னவென்று தெரிந்து விட்டது அல்லவா? நீங்கள் பிறந்த திதி வளர்பிறையில் வருமானால் அதற்குரிய நித்யா தேவதை என்னவென்று பார்க்க வேண்டும். இதனை இணையத்தில் தேடுவதை விட தகுந்த ஜோதிடர்களிடம் கேட்டு தெரிந்து கொள்வது நல்லது. அந்த தேவதையின் படத்தையும், அவர்களுக்குரிய ஸ்லோகத்தையும் நீங்கள் தினமும் வழிபட்டு வந்தால் உங்களின் கஷ்டங்கள் அனைத்தும் தீர்ந்து, விதி பயனை முழுமையாக அடைய முடியும். மேலும் உங்களை வெல்வதற்கு எவராலும் முடியாது. இந்த ஜோதிட ரகசியத்தை நீங்கள் மட்டும் தெரிந்து கொண்டால் போதுமா? உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே
உங்கள் சமையலறையில் இந்த 3 விஷயங்களை செய்தால் செல்வம் கொழிக்குமாம்! ஜோதிட சூட்சம குறிப்புகள்.

இது போன்ற ஜோதிடம் சார்ந்த பல தகவல்களை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have How to find birth tithi. Thithi devathai in Tamil. Thithi parpathu eppadi tamil. Birth tithi astrology. Birth tithi significance.

- Advertisement -