கடையில் காசு கொடுத்து இனி கரம்மசாலா எதற்கு வாங்கணும்? நம் வீட்டிலேயே மணக்க மணக்க பிரியாணி மசாலாவை அரைக்கலாமே?

biriyani-masala
- Advertisement -

பெரும்பாலும் பிரியாணி செய்யும்போது அந்த பிரியாணி மணக்க மணக்க வாசம் வீசுவதற்காக கடையிலிருந்து கரம் மசாலா தூளை வாங்கி தான் பிரியாணி செய்யும்போது பயன்படுத்துவோம். ஆனால் கரம்மசாலா வாசத்தை விட தூக்கலாக ஒரு பிரியாணி மசாலாவை நம் வீட்டிலேயே, நம் கையாலேயே அரைக்கலாம். ஹோட்டலில் பிரியாணி செஞ்சா பிரியாணியில் இருந்து எப்படி வாசம் வரும், அதே போல் தான் இனி நம் வீட்டில் பிரியாணி செய்தாலும் வாசம் வீசும். இந்த பிரியாணி மசாலாவை சேர்த்து பிரியாணி செய்யும் போது. நேரத்தைக் கடத்தாமல் பிரியாணி மசாலா செய்ய எந்தெந்த பொருட்களை எந்தெந்த அளவுகளில் சேர்த்து எப்படி வருக்க வேண்டும். தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

biriyani-masala1

முதலில் இந்த பிரியாணி மசாலா அரைப்பதற்கு தேவையான பொருட்களை பார்த்துவிடுவோம். வரமல்லி – 100 கிராம், சோம்பு – 50 கிராம், பட்டை – 30 கிராம், கிராம்பு -10 கிராம், பிரியாணி இலை – 5 கிராம், கல்பாசி – 10 கிராம், அன்னாசி பூ – 10 கிராம், ஜாதிபத்திரி – 10 கிராம், ஏலக்காய் – 10 கிராம், மராட்டி மொக்கு – 10 கிராம், கசகசா – 10 கிராம், ஜாதிக்காய் – 1, எல்லாப் பொருட்களையும் சரியான அளவுகளில் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.

- Advertisement -

அடுப்பில் ஒரு கடாயை வைத்து சோம்பு, கசகசா இந்த 2 பொருட்களையும் சேர்த்து நன்றாக வாசம் வரும் வரை வறுத்துக் கொள்ள வேண்டும். அதன் பின்பு தனியாக வர மல்லியை போட்டு வறுக்க வேண்டும். கருகி போய்விடக்கூடாது. வர மல்லியை கையில் எடுத்தால் கை பொறுக்கமுடியாத சூடு வரும் வரை வறுத்துக் கொள்ளுங்கள்.

biriyani-masala2

அதன்பின்பு ஜாதிக்காய் கொஞ்சம் பெரியதாக இருக்கும். அதை ஒன்றும் இரண்டுமாக உடைத்துக் கொள்ளுங்கள். மீதம் இருக்கக்கூடிய மற்ற எல்லா மசாலா பொருட்களையும் ஒன்றாக கடாயில் போட்டு அடுப்பை மிதமான தீயில் வைத்து விட்டு, 5 நிமிடங்கள் வறுத்துக் கொள்ள வேண்டும். அவ்வளவு தான். இந்த எல்லாப் பொருட்களையும் ஒன்றாக சேர்த்து நன்றாக ஆற வைத்துவிடுங்கள்.

- Advertisement -

இந்த மசாலா பொருட்களை கொஞ்சம் கொஞ்சமாக மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்துக் கொள்ளவேண்டும். மைய மொழுமொழுவென அரைத்து விடக்கூடாது. தண்ணீர் எதுவும் படாமல் 90 சதவிகிதம் இந்த மசாலா பொருட்களை அரைத்து எடுத்து, அரைத்த சூடு ஆறும் வரை நன்றாக ஆற வைத்து விட்டு, ஒரு கண்டெய்னரில் ஸ்டோர் செய்து வைத்துக்கொண்டால் போதும். 6 மாதம் வரை இந்த பிரியாணி மசாலா கெட்டுப்போகாது.

biriyani_2

இந்த மசாலாவை மில்லில் கொடுத்து அரைக்க வேண்டாம். ரைஸ் மில்லில் கொடுத்து மசாலாவை அரைத்தீர்கள் என்றால் ரொம்பவும் நைசாக அரைத்துக் கொடுத்து விடுவார்கள். அப்போது அந்த மசாலா பொடியில் இருந்து மனம் வீசுவது குறைந்துவிடும். கொறகொறப்பாக மசாலா பொடி இருந்தால் தான் வாசம் தூக்கலாக இருக்கும்.

salna2

சைவ பிரியாணி, அசைவ பிரியாணி, தக்காளி சாதம், புலாவ், குருமா, சால்னா எது செய்தாலும் உங்களுக்கு தேவையான அளவு இந்த மசாலா பொடியை சேர்த்து பாருங்கள். நீங்கள் சமைக்கும்போது அப்படியே மசாலா மணம் வீசும். இந்த பிரியாணி மசாலாவை பிரியாணியில் போட்டால், அதில் கரம் மசாலா மீண்டும் போடக்கூடாது. உங்களுக்கு இந்த குறிப்பு பிடிச்சிருந்தா உங்க வீட்லயும் இந்த மசாலா பொடி ரெசிபியை ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -