இந்த பிஸ்கட் பாக்கெட், சர்க்கரை, பால், இந்த 3 பொருள் இருக்கா உங்க வீட்ல? அப்படினா யோசிக்காம இப்பவே இந்த ஐஸ் கிரீமை செஞ்சு அசத்துங்க! டாக் டவுன் ஸ்பெஷல் சிம்பிள் ரெசிபி.

ice-cream
- Advertisement -

இந்த லாக் டவுன் சமயத்தில் வீட்டில் இருப்பவர்களுக்கு விதவிதமாக ஸ்நாக்ஸ் செய்து கொடுப்பது என்பது கொஞ்சம் கஷ்டமான விஷயம் தான். வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே செய்ய வேண்டும். அதுவும் சுவையாக இருக்க வேண்டும். எல்லோருக்கும் பிடித்தபடி இருக்க வேண்டும். உடல் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்காமலும் இருக்க வேண்டும். என்ன செய்வது. கொஞ்சம் கஷ்டமான விஷயம் தான் அல்லவா. உங்களுடைய வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே இந்த ஐஸ்கிரீமை சூப்பராக செய்திடலாமே. சிம்பிள் ஐஸ்கிரீம் ரெசிபியை தெரிஞ்சுக்க உங்களுக்கும் ஆசையா இருக்கா. வாங்க பார்க்கலாம்.

biscut

இந்த ஐஸ்கிரீமை இந்த பிஸ்கட்டில் தான் செய்ய வேண்டும் என்ற அவசியம் கிடையாது. மில்க் பிகிஸ், பார்லீ ஜி, மேரி பிஸ்கட், எந்த பிஸ்கட்டை பயன்படுத்தி வேண்டுமென்றாலும் இந்த ஐஸ் கிரீமை நீங்கள் செய்து கொள்ளலாம். சரி, இன்று நாம் பார்க்கப்போவது மில்க் பிக்கிசை வைத்து ஐஸ்கிரீம் செய்வது எப்படி.

- Advertisement -

இதற்கு தேவையான பொருட்களை முதலில் பார்த்துவிடுவோம். 10 ரூபாய் பாக்கெட் மில்க் பிக்கீஸ்  – 1 (10 பிஸ்கட்டுகள்), இன்ஸ்டன்ட் காபி தூள் – 2 ஸ்பூன், சர்க்கரை – 6 ஸ்பூன், பால் – 1/2 லிட்டர் அளவு. எந்த பிராண்ட் காப்பி தூளை வேண்டுமென்றாலும் எடுத்துக் கொள்ளலாம். திக்காக இருக்கும் எந்த பாலை வேண்டும் என்றாலும் தண்ணீர் சேர்க்காமல் இதற்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

ice-cream5

ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக்கொள்ளுங்கள். 10 மில்க் பிக்கீஸ் எடுத்து சிறிய துண்டுகளாக உடைத்து அந்த ஜாரில் போட்டு கொள்ளவேண்டும். அடுத்த படியாக சர்க்கரை, காபித்தூள் இந்த இரண்டு பொருட்களையும் மிக்ஸியில் சேர்த்து நைசாக அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். இது அப்படியே இருக்கட்டும்.

- Advertisement -

அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் பாலை ஊற்றி காய்ச்ச வேண்டும். பால் காய்ந்து நன்றாக பொங்கி வரும் போது, அடுப்பை சிம்மில் வைத்து விட்டு, மிக்சியில் அரைத்து வைத்திருக்கும் பவுடரை பாலில் கொட்டி நன்றாக கலக்க வேண்டும். கட்டி படாமல் கலக்கி விட்டு விடுங்கள். இரண்டிலிருந்து நான்கு நிமிடத்திற்குள் இது ஒரு கிரீமாக கொழகொழவென நமக்கு கிடைத்திருக்கும். (அப்படியே கட்டிப்பிடித்தாளும் கவலை இல்லை. இதை மிக்ஸியில் போட்டு அரைக்கத்தான் போகின்றோம்.)

ice-cream1

இதை அப்படியே நன்றாக ஆற வைத்துவிடுங்கள். அதன்பின்பு பாலும் பிஸ்கட் கலவையும் சேர்த்த இந்த விழுதை மிக்ஸி ஜாரில் போட்டு ஒரு முறை நன்றாக நைசாக அரைத்துக் கொள்ள வேண்டும். இந்த கலவையை ஒரு பிளாஸ்டிக் டிரேவில் ஊற்றி, மூடி போட்டு ப்ரீசரில் வைத்துவிடுங்கள். 5 மணி நேரம் அப்படியே இருக்கட்டும்.

- Advertisement -

ice-cream2

5 மணி நேரம் கழித்து ஃப்ரீசரில் இருந்து எடுத்தால், இந்த கலவை நமக்கும் ஐஸ்கிரீம் பதத்திற்கு கிடைத்திருக்கும். இருப்பினும் இதை நாம் அப்படியே பரிமாறக் கூடாது. ஒரு 15 நிமிடம் கழித்து, இந்த ஐஸ்க்ரீமை ஒரு கரண்டியால் எடுத்து, மீண்டும் மிக்சி ஜாரில் போட்டு அரைக்கவேண்டும். (ரொம்பவும் கட்டியாக இருக்கும் ஐஸ் கிரீமை போட்டு மிக்ஸியில் அரைக்கக் கூடாது. மிக்ஸி பழுதாகிவிடும் கொஞ்சம் பார்த்துக் கொள்ளுங்கள். கட்டி ஐஸ்கிரீம் கொஞ்சம் இலகிய பதம் வந்த உடன் அரைத்துக் கொள்ளவும்.)

ice-cream3

இரண்டாவது முறை மிக்ஸியில் அரைத்து, அந்த விழுதைத் பிளாஸ்டிக் டப்பாவில் ஊற்றி, மூடி போட்டு ஃப்ரீசரில் 8 மணி நேரம் வரை வையுங்கள். அதன் பின்பு சாப்பிடுவதற்கு ஐஸ்கிரீம் தயாராக உங்களுக்கு கிடைத்திருக்கும். ஒரு குழி கரண்டியை தண்ணீரில் நனைத்து இந்த ஐஸ் கிரீமை எடுத்து சிறிய பௌலில் போட்டு பரிமாறினால், சூப்பரான ஐஸ் கிரீம் ரெடி.

ice-cream4

தேவைப்பட்டால் இதன் மேல் பாதாம் பருப்புகளைத் தூவி கொள்ளலாம். சாக்கோ சிப்ஸ் தூவியும் பரிமாறலாம். அது உங்களுடைய இஷ்டம் தான். உங்களுக்கு இந்த குறிப்பு பிடிச்சிருக்கா. மிஸ் பண்ணாம இன்னைக்கே ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -