ஆரோக்கியமான கொண்டை கடலை லட்டு

kondaikadalai laddu
- Advertisement -

நம் உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய பொருட்கள் பல இருக்கின்றன. அவற்றை நாம் முறையாக அறிந்து அதை உணவாக எடுத்துக் கொள்வதன் மூலம் நம் உடலை ஆரோக்கியமாக பார்த்துக் கொள்ள முடியும். அந்த வகையில் இறைச்சிக்கு இணையான சத்துக்களை கொண்ட பொருளாக கொண்டைக்கடலை திகழ்கிறது. இந்த கொண்டைக்கடலையை நாம் ஊறவைத்து சாப்பிடும் பொழுது அதன் பலன் மிகவும் அதிகமாக இருக்கும். அப்படி சாப்பிட பிடிக்காதவர்கள் கொண்டைக்கடலையை வைத்து வித்தியாசமான முறையில் பிடிக்காதவர்களுக்கு கொண்டைக்கடலையை வைத்து வித்தியாசமான முறையில் ஒரு லட்டு தயார் செய்து கொடுத்தால் போதும் மீண்டும் வேண்டுமென்று கேட்டு சாப்பிடும் அளவிற்கு விரும்பி சாப்பிடுவார்கள். இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் கொண்டைக்கடலையை வைத்து லட்டு எப்படி செய்வது என்று தான் பார்க்கப் போகிறோம்.

கொண்டைக்கடலையில் புரதம், விட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்துக்கள் அதிக அளவில் இருக்கின்றன. உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகளை தரக்கூடியதாக இது திகழ்கிறது. கொண்டைக்கடலையை நாம் உட்கொள்ளும் பொழுது ரத்த அழுத்தம் சீராகிறது. இதயம் ஆரோக்கியமாக செயல்படுகிறது. இரத்தத்தின் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. எலும்புகள் ஆரோக்கியமாக திகழவும், ஹீமோகுளோபின் உற்பத்தியை சீராக வைத்துக் கொள்ளவும் கொண்டைக்கடலை உதவுகிறது. மேலும் இது நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது. செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது.

- Advertisement -

தேவையான பொருட்கள்

  • கொண்டைக்கடலை – ஒரு கப்
  • பச்சரிசி – 1/2 கப்
  • ஏலக்காய் – 2
  • வெல்லம் – 1 1/2 கப்
  • வாழைப்பழம் -1
  • தேங்காய் துருவியது – 1/2 கப்
  • தண்ணீர் – ஒரு கப்
  • நெய் – 2 ஸ்பூன்
  • முந்திரி பருப்பு – தேவைக்கேற்ப

செய்முறை

முதலில் கொண்டை கடலையை தண்ணீர் ஊற்றி சுத்தமாக கழுவிக்கொள்ள வேண்டும். பிறகு ஒரு கடாயை அடுப்பில் வைத்து கொண்டைக்கடலையை போட்டு நன்றாக வாசனை வரும் வரை குறைந்த தீயில் வைத்து வறுக்க வேண்டும். பிறகு அதே கடாயில் அரிசியை சேர்த்து அதையும் நன்றாக சிவக்க பொறி அரிசி போல் வறுத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். இவை இரண்டும் நன்றாக ஆரிய பிறகு மிக்ஸி ஜாரில் போட்டு அதனுடன் ஏலக்காயையும் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

இப்பொழுது மறுபடியும் அடுப்பில் ஒரு கடாயை வைத்து துருவிய வெல்லத்தை அதில் சேர்த்து அதனுடன் ஒரு கப் தண்ணீரையும் ஊற்றி வெல்லம் கரையும் வரை அடுப்பில் வைத்து கிண்ட வேண்டும். வெல்லம் நன்றாக கரைந்த பிறகு வெல்லத்தை வடிகட்டி மறுபடியும் கடாயில் ஊற்றி அடுப்பில் வைக்க வேண்டும்.

- Advertisement -

இதில் பொடியாக நறுக்கிய வாழைப்பழத்தை சேர்த்து நன்றாக கொதிக்க விட வேண்டும். வாழைப்பழம் நன்றாக கொதித்த பிறகு துருவிய தேங்காயை அதில் சேர்த்து நன்றாக கொதிக்க விட வேண்டும். இவை அனைத்தும் நன்றாக கொதித்த பிறகு நாம் அரைத்து வைத்திருக்கும் கொண்டைக்கடலை மாவை சிறிது சிறிதாக சேர்த்து நன்றாக கிண்ட வேண்டும்.

அனைத்து மாவையும் சேர்த்த பிறகு இதில் நெய்யில் இரண்டு ஸ்பூன் நெய்யை ஊற்றி நன்றாக கிளற வேண்டும். மாவு இறுகும் வரை அடுப்பில் வைத்திருக்க வேண்டும். பிறகு அடுப்பில் இருந்து இறக்கி வைத்து வெதுவெதுப்பான சூடு வரும் வரை ஆரவைத்து விட வேண்டும்.

- Advertisement -

கைகளில் சிறிது நெய் அல்லது எண்ணெயை தடவிக் கொண்டு இந்த மாவை அப்படியே கைகளில் எடுத்து லட்டு போல் பிடித்து அலங்காரத்திற்காக மேலே ஒரு முந்திரி பருப்பையும் வைத்துவிட வேண்டும். அவ்வளவுதான் மிகவும் ஆரோக்கியமான சுவையான கொண்டைக்கடலை லட்டு தயாராகிவிட்டது.

இதையும் படிக்கலாமே: ஜவ்வரிசி கிச்சடி செய்முறை

குழந்தைகள் எந்த முறையில் விரும்பி சாப்பிடுவார்கள் என்பதை உணர்ந்து அவர்களுக்கு ஏற்றார் போல் ஆரோக்கியமான பொருட்களை செய்து தருவதன் மூலம் அவர்களின் ஆரோக்கியம் அதிகமாகும் நமக்கும் மனநிறைவு ஏற்படும்.

- Advertisement -