3 பொருளை வைத்து, 3 நாள், 3 முறை இப்படி செய்தாலே போதும். உங்கள் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள், முகப் பருக்கள், தேவையில்லாத திட்டுக்கள் காணாமல் போய்விடும்.

blackheads-rosewater

உங்களுடைய முகத்தில் நிரந்தரமாக இருக்கும் கரும்புள்ளிகள், முகப்பருக்கள், தேவையில்லாத திட்டுக்கள் இவை மூன்றையும் சுலபமாக நீக்கிவிடலாம். இதற்கு நான்கு வழிமுறைகள் உள்ளன. இதில் உங்களுக்கு எது பிடித்திருக்கிறதோ, உங்கள் முகத்திற்கு எது சரியாக வரும் என்று நினைக்கிறீர்களோ, அதை நீங்கள் தொடர்ந்து மூன்று நாட்கள் செய்தாலே போதும். அதன் பின்பு வாரத்துக்கு இரண்டு நாள் இந்த முறையை பின்பற்றி வரலாம். நிரந்தரமாக உங்களது முகம் பள பளப்பாக மாறும் என்பதில் சந்தேகமே இல்லை.

ice-massage

முதல் குறிப்பு:
உருளைக் கிழங்கையும், தக்காளியையும் எடுத்துக்கொண்டு சிறு சிறு துண்டுகளாக வெட்டி மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து கொள்ள வேண்டும். அந்த விழுதில் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து, ஐஸ் ட்ரேயில் ஊற்றி ஃப்ரீசரில் வைத்து விட வேண்டும். ஐஸ் கட்டியாக மாறிய பின்பு, அதை எடுத்து உங்களது முகத்தில் 20 நிமிடங்கள் வரை வட்ட வடிவில் மசாஜ் செய்து கொடுத்தால் போதுமானது. இப்படி தொடர்ந்து மூன்று நாட்கள் செய்தாலே போதும் உங்கள் முகத்தில் இருக்கும் பிரச்சனை மறைவதை கண்கூடாக பார்க்கலாம்.

இரண்டாவது குறிப்பு:
வெந்தயத் தூள் ஒரு ஸ்பூன், பட்டை தூள் ஒரு ஸ்பூன், மஞ்சள் தூள் ஒரு ஸ்பூன், இந்த மூன்றையும் ஒன்றாக கலந்து கொண்டு எலுமிச்சைச்சாறு விட்டு பேஸ்ட் போல் தயார் செய்து கொள்ள வேண்டும். தண்ணீர் ஊற்றக்கூடாது. இந்த விழுதை முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து, நன்றாக காய்ந்தவுடன் சிறிதளவு தண்ணீரை தொட்டு, உங்கள் முகத்தை இந்த ஃபேஸ் பேக்கோடு 5 நிமிடம் வட்ட வடிவில் மசாஜ் செய்து சுத்தமான தண்ணீரில் கழுவி விடலாம்.

face-pack

மூன்றாவது குறிப்பு:
இரண்டு ஸ்பூன் கோதுமை மாவு, சிறிதளவு தக்காளி விழுது, தயிர் இவை மூன்றையும் ஒன்றாக சேர்த்து, கலந்து பேஸ்டாக தயார் செய்து, உங்களது முகத்தில் பேஸ் மாஸ்க் போட்டு 20 நிமிடங்கள் கழித்து, ஐந்து நிமிடம் மசாஜ் செய்துவிட்டு, கழுவி விட்டால் போதுமானது. முகம் பளப்பளப்பாக மாறிவிடும்.

- Advertisement -

நான்காவது குறிப்பு:
சந்தனம் 2ஸ்பூன், அரை ஸ்பூன் கிளிசரின், இவை இரண்டையும் கலக்க தேவையான ரோஸ் வாட்டர். இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து பேஸ்ட் போல் தயார் செய்து, உங்களது முகத்தில் 20 நிமிடங்கள் பேஸ் மாஸ்க் போட்டு விட வேண்டும். அதன் பின்பு 5 நிமிடம் மசாஜ் செய்து விட்டு, சுத்தமான தண்ணீரில் கழுவி விடுங்கள். முகம் பள பளப்பாக மாறும்.

turmeric-face

எந்த ஃபேஸ் மாஸ்க் போட்டு மசாஜ் செய்ய வேண்டுமென்றாலும், உங்களது கையில் சிறிதளவு தண்ணீரை தொட்டு உங்கள் முகத்தில் காய்ந்திருக்கும், ஃபேஸ் பேக்கை நனைத்து விட்டு, அதன் பின்புதான் மசாஜ் செய்ய வேண்டும். மேலே குறிப்பிட்டுள்ள குறிப்புகள் எல்லாம் இயற்கையான பொருட்களை வைத்து செய்யக்கூடிய முறைகள் தான். தொடர்ந்து செய்தால் நல்ல பலன் அடையலாம். ஆனால் ஒரே குறிப்பாக பின்பற்றவேண்டும். குறிப்புகளை மாற்றக் கூடாது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே
அவசரமாக வெளியே போக வேண்டும். முகம் பளபளப்பாக மாற வேண்டும். என்ன செய்வது? உங்க வீட்ல இருக்க இந்தப் பொருளை வெச்சு, ஒருமுறை இப்படி செஞ்சுதான் பாருங்களேன்!

இது போன்ற மேலும் பல ஆரோக்கியம் சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Blackheads removal naturally. Karumpulli maraiya tips in Tamil. Karumpulligal neenga. Beauty tips for blackheads.