கழுத்தில் இருக்கும் அடர் கருப்பு நிறம் நீங்க இதை விட சுலபமான குறிப்பு வேறு எதுவும் இருக்க முடியாது? ரெமிடியை பயன்படுத்திய முதல் நாளே நல்ல வித்தியாசம் தெரியும்.

neck

கழுத்தில் இருக்கும் கருப்பு நிறத்தை நீக்குவதற்கு தேவையான குறிப்பை தெரிந்துகொள்வதற்கு முன்பு, இந்த கழுத்தில் இருக்கும் கருப்பு நிறம் ஏன் வருகிறது என்பதை முதலில் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். உங்களுடைய சருமத்திற்கு ஒத்துவராத கவரிங் நகைகளை அணியும் பழக்கத்தை விட்டுவிட வேண்டும். அப்படியே கவரிங் நகையை அணிந்து கொள்ள வேண்டும் என்ற அவசியம் இருந்தாலும் சிறிது நேரம் அந்த நகையை அணிந்து கொண்டு விட்டு கழட்டி வைத்துவிட வேண்டும். எப்போதுமே கவரிங் நகைகளை அணிந்து கொண்டிருந்தாலும் சிலருக்கு இந்த பிரச்சனை வருவதற்கு வாய்ப்பு உள்ளது. விலை மலிவான எல்லா க்ரீம்களையும் வாங்கி முகத்திலும் கழுத்திலும் போட்டுக் கொள்ளாதீர்கள்.

dark-neck

அடுத்தபடியாக கொஞ்சம் எடை அதிகமாக இருப்பவர்களுக்கும் சிலருக்கு கழுத்து பகுதியில் இப்படிப்பட்ட பிரச்சனை இருக்கும். சில பேர் முகத்தை சுத்தம் செய்து முகத்திற்கு அக்கறை கொடுத்து பார்த்துக்கொள்வது போல கழுத்தை கவனிக்காமல் விட்டுவிடுவார்கள். இப்படி இருக்கும் பட்சத்திலும் கழுத்தின் நிறம் மாறுபடும். சரி, உங்களுடைய கழுத்தில் அடர் கருப்பு நிறம் இருந்தால் அதை நீக்க உங்கள் வீட்டில் இருக்கக் கூடிய பொருட்களை வைத்து என்ன செய்யலாம். இப்போது பார்த்துவிடுவோம்.

முதலில் ஒரு சிறிய பௌலை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் 1 ஸ்பூன் அளவு இன்ஸ்டன்ட் காபி பவுடர் போட்டுக் கொள்ள வேண்டும். எந்த பிராண்ட் ஆக இருந்தாலும் சரி, 1 ஸ்பூன் அளவு சர்கரை சேர்த்துக் கொள்ளுங்கள். 1 ஸ்பூன் அளவு எலுமிச்சைபழ சாரை பிழிந்து இதை நன்றாக கலந்து உங்களுடைய கழுத்தில் உள்ள கருப்பு நிறத்தில் 5 நிமிடங்கள் வரை மெதுவாக மசாஜ் செய்து தர வேண்டும்.

coffee

இந்த கலவையானது 10 நிமிடங்கள் வரை அப்படியே ஊரலாம். அதன் பின்பு உங்களது கையில் கொஞ்சமாக தண்ணீரை தொட்டு, கழுத்து பகுதியை நன்றாக மீண்டும் ஒரு முறை மசாஜ் செய்து, குளிர்ந்த தண்ணீரில் கழுவி விடுங்கள். அடுத்தபடியாக கொஞ்சமாக கடலைமாவு எடுத்துக்கொண்டு, அதில் கொஞ்சம் தயிரை ஊற்றி நன்றாக கலந்து கழுத்தில் பேக் போட்டு 20 நிமிடங்கள் கழித்து, ஈரத்துணியில் அந்த பேக்கை துடைத்து எடுக்கும்போது உங்களுக்கு கழுத்தில் இருக்கும் கருப்பு நிறம் குறைந்து, நல்ல வித்தியாசம் தெரியும்.

- Advertisement -

வாரத்திற்கு இரண்டு நாட்கள் இந்த மாதிரி செய்து வந்தீர்கள் என்றால், நிச்சயமாக கழுத்து பகுதியில் இருக்கும் கருப்பு நிறம் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும். சில பேருக்கு கழுத்துக்குப் பின் பக்கம், முதுகு பகுதி கூட மிகவும் கருப்பாக இருக்கும் அந்த இடத்திலும், இந்த குறிப்பை ட்ரை பண்ணி பாருங்க நிச்சயமாக நல்ல பலன் தெரியும்.

face4

இந்த பேக்கை முகத்திற்கும் போடலாம். ஆனால் உங்களுடைய முக சருமம் மிகவும் சென்சிடிவ் ஸ்கின் ஆக இருந்தால், முகத்திற்கு பயன்படுத்துவதை தவிர்த்துக் கொள்ளவும். ஏனென்றால் கழுத்துப் பகுதியில் இருக்கும் தோல் கொஞ்சம் தடிமனாக இருக்கும். முகத்தில் இருக்கும் தோல் கொஞ்சம் சாஃப்டாக இருக்கும் பட்சத்தில் முகத்தில் தேவையற்ற கீறல் விழுவதற்கு வாய்ப்பு உள்ளது.

neck1

முகத்தில் சர்க்கரையை போட்டாலும் அழுத்தம் கொடுத்து ஸ்க்ரப் செய்யக் கூடாது. லேசாக தான் ஸ்கரப் செய்ய வேண்டும் என்பதையும் நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். சிலபேருக்கு என்னதான் செய்தாலும், இந்த அடர் கருப்பு நிறம் போக வில்லை என்றால், நீங்கள் மருத்துவரை அணுகி ட்ரீட்மெண்ட் எடுத்துக் கொள்வதே நல்லது. உங்களுக்கு இந்த குறிப்பு பிடித்திருந்தால் நீங்களும் உங்களுடைய வீட்டில் முயற்சி செய்து பார்க்கலாம்.

இதையும் படிக்கலாமே
தலைமுடி உதிர்வை உடனடியாக, சட்டுனு ஒரே நாளில், நிறுத்தக்கூடிய ஆற்றல், இந்த 1 இலைக்கு உண்டு. இந்த இலையை முறைப்படி எப்படி பயன்படுத்துவது நீங்களும் தெரிஞ்சு வெச்சுக்கோங்க!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.