தலைமுடி உதிர்வை உடனடியாக, சட்டுனு ஒரே நாளில், நிறுத்தக்கூடிய ஆற்றல், இந்த 1 இலைக்கு உண்டு. இந்த இலையை முறைப்படி எப்படி பயன்படுத்துவது நீங்களும் தெரிஞ்சு வெச்சுக்கோங்க!

hair-fall

நம்முடைய தலை முடி பிரச்சனைக்கு நிரந்தரமாக உடனடியாக ஒரு தீர்வை தர கூடிய சக்தி இந்த வெற்றிலைக்கு உண்டு. வெற்றிலையை முறைப்படி எந்த முறையில் பயன்படுத்தினால் உடனடி பலனை அடையமுடியும் என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். அதிகமாக முடி உதிர்ந்த இடத்தில் புதிய முடி வளர வேண்டும். முடி அடர்த்தியாக வளர வேண்டும். கருகருவென வளர வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த ரெமிடியை ட்ரை பண்ணி பார்க்கலாம். 100% எந்தவிதமான பக்கவிளைவுகளும் ஏற்படாது. வாங்க இந்த குறிப்பை இப்பவே பார்த்து விடலாம்.

vetrilai-kodi

இந்த எண்ணெயை தயார் செய்ய 8 லிருந்து 10 வெற்றிலை, 15 லிருந்து 20 செம்பருத்தி இலைகள், கறிவேப்பிலை 1 கைப்பிடி அளவு, 100 ml அளவு எந்த கலப்படமும் இல்லாத தேங்காய் எண்ணெய். முதலில் இந்த மூன்று வகையான இலைகளையும் கத்தரிக்கோலை கொண்டோ அல்லது உங்கள் கையாலேயே சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.

அடுப்பில் ஒரு இரும்பு கடாயை வைத்து, அதில் தயாராக இருக்கும் தேங்காய் எண்ணெய்யை ஊற்றி, மிதமான தீயில் சூடுபடுத்தி, வெற்றிலை, செம்பருத்தி பூவின் இலை, கருவேப்பிலை இந்த மூன்று இலைகளையும் சேர்த்து மிதமான தீயில் நன்றாக கொதிக்கவிட வேண்டும். அதாவது இலைகள் நன்றாக கொதித்து, கருப்பு நிறம் வரும் அளவிற்கும், எண்ணெய் அடர் பச்சை நிறத்தில் வருமளவிற்கு கொதிக்கவிடுங்கள்.

herbal powder for hair

பிறகு அடுப்பை அணைத்துவிட்டு, இந்த எண்ணெயை அடுப்பிலிருந்து கீழே இறக்கி வைத்து, நன்றாக ஆற வைத்து விட்டு, ஒரு வடிகட்டி மூலம், வடிகட்டி கண்ணாடி பாட்டிலில் சேகரித்து வைத்துக் கொண்டால் நான்கிலிருந்து ஐந்து மாதங்கள் வரை கெடாமல் இருக்கும். இந்த எண்ணெயை வாரத்தில் மூன்று நாட்கள் தலையில் நன்றாக மசாஜ் செய்து தலைக்கு குளிக்க வேண்டும். நன்றாக வேர்க்கால்களில் படும்படி மசாஜ் செய்ய வேண்டும்.

- Advertisement -

இந்த எண்ணெயை தலைக்கு தேய்ப்பதால், அதன் மூலம் முடிக்கு தேவையான வைட்டமின் சி, அமினோ ஆசிட், புரோட்டீன், பீட்டா கரோட்டின் சத்துக்கள் அதிகப்படியாக கிடைக்கப்பெற்று முடியின் வேர் பகுதி வலுவாகி, முடி உதிர்வு கட்டுப்படுத்தப்படுகின்றது. நிச்சயமாக இந்த எண்ணெயை தலைமுடிக்கு தீர்ப்பதோடு சேர்த்து, நீங்கள் நிறைய தண்ணீரை பருகி வரவேண்டும். உடலுக்கு சத்து தரும் காய்கறிகளையும் கீரை வகைகளையும் சாப்பிட்டு வரவேண்டும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

coconut-oil

இரவு இந்த எண்ணெயை தலையில் அப்ளை செய்து விட்டு, இரவு முழுவதும் அப்படியே விட்டு மறுநாள் காலையில் தலைக்கு குளித்து விடுங்கள். இதை பயன்படுத்திய இரண்டு மூன்று நாட்களிலேயே நிச்சயமாக நல்ல வித்தியாசத்தை உங்களால் உணர முடியும். தலைமுடியின் உதிர்வு உடனடியாக கட்டுப்படுத்தப்படும். நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க. உங்களுக்கு நல்ல ரிசல்ட் கொடுத்தால் இதையே ஃபாலோ பண்ணிக்கலாம்.

இதையும் படிக்கலாமே
உங்கள் வீட்டு ரோஜா செடி, முல்லை, மல்லி செடி ஒரு மொட்டு கூட விடவில்லையா? இத 1 ஸ்பூன் வையுங்க கொத்துக் கொத்தாய் பூக்கள் பூக்கும்!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.