உடல் எவ்வளவு பலவீனமாக இருந்தாலும், 3 நாட்களில் எலும்புகள் உறுதியாக மாறி விடும். இடுப்பு வலி, முதுகு வலி, காணாமல் போய்விடும். இதை மட்டும் 1 டம்ளர் குடிச்சுப் பாருங்க!

karupu-ulundu
- Advertisement -

நம்முடைய உடலுக்கு அதிகப்படியான சத்தை சேர்ப்பது உளுந்து. அதிலும் தோல் உரிக்காத உளுந்துக்கு பலமடங்கு சக்தி அதிகம் உள்ளது. அந்த உளுந்தை முளைக்கட்டி சாப்பிட்டால் இன்னும் அதனுடைய சக்தி பல மடங்காக பெருகும். இந்த முறைப்படி தொடர்ந்து 3 நாட்கள் கஞ்சி காய்ச்சி குடித்து பாருங்க! அசுரபலம் உங்களுடைய உடம்புக்கு வந்து விடும். அதாவது, அடித்துப்போட்டது போல உடல் வலி இருக்கும். முதுகு வலி, தண்டுவடம், கைகால், மூட்டுவலி, குறிப்பாக பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் வரக்கூடிய நடு முதுகு வலி, இடுப்பு வலி, எல்லாம் பஞ்சாகப் பறந்து போய்விடும். அப்படிப்பட்ட அற்புதமான சக்தியுள்ள ஒரு உளுந்தங்கஞ்சியை தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

karuppu ulunthu

முதலில் தோல் உரிக்காத உளுந்தை 100 கிராம் அளவு வாங்கி, அதைத் தண்ணீரில் போட்டு மூன்று முறை கழுவி விடவேண்டும். அதன் பின்பு நல்ல தண்ணீரை ஊற்றி ஆறிலிருந்து ஏழு மணி நேரம் அந்த உளுந்தை ஊற விட்டு விடுங்கள். 7 மணி நேரம் கழித்து, அதில் இருக்கும் தண்ணீரை நன்றாக வடிகட்டி விட்டு, ஒரு வெள்ளை காட்டன் துணியில் போட்டு மூட்டை கட்டி, அந்த மூட்டையை, ஒரு சில்வர் குண்டானில் வைத்து மூடி போட்டு, மூடி விடுங்கள். வெறும் 6 மணி நேரத்தில் இந்த உளுந்து முளை விட ஆரம்பித்து இருக்கும்.

- Advertisement -

இந்த முளைக்கட்டிய உளுந்தை கிரைண்டர் அல்லது மிக்ஸியில் போட்டு நன்றாக தண்ணீர் ஊற்றி மொழுமொழுவென்று அரைத்துக் கொள்ள வேண்டும். அரைத்த இந்த உளுந்தை அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் ஊற்றி விட வேண்டும். நீங்கள் போட்ட உளுந்துக்கு ஐந்து மடங்கு தண்ணீர் ஊற்றவேண்டும். உளுந்து கட்டியாக இருந்தால், களி போல மாறிவிடும். கஞ்சி போல வராது. அரைத்த உளுந்தில் முதலிலேயே நன்றாக தண்ணீரை ஊற்றி கரைத்து, அடுப்பில் வைத்திருக்கும் பாத்திரத்தில் ஊற்றி கஞ்சியை கைவிடாமல் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். அடுப்பை மிதமான தீயில் இருக்கட்டும்.

karupu-ulundu1

அடுத்தபடியாக மற்றொரு அடுப்பில் 150 கிராம் அளவு வெல்லத்தைத் நசுக்கி போட்டு, 50 கிராம் அளவு தண்ணீர்விட்டு, நன்றாக கரைத்துக் கொள்ள வேண்டும். வெல்வத்தை பாகு காய்ச்ச வேண்டாம். வெல்லம் தண்ணீரில் நன்றாக கரைந்தால் போதும். இதை வடிகட்டி அப்படியே எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.

- Advertisement -

மற்றொரு அடுப்பில் உளுந்தை கைவிடாமல் கிளறிக் கொண்டே இருங்கள். உளுந்தின் பச்சை வாடை முழுமையாக நீங்கி, உளுந்து கஞ்சி பதத்திற்கு வரவேண்டும். மொத்தமாக 30 நிமிடங்கள் வரை எடுக்கும். உளுந்த கஞ்சியில் பச்சை வாடை முழுமையாக நீங்கிய பின்பு, கரைத்து வைத்திருக்கும் வெல்லத்தை உளுந்தங்கஞ்சியோடு சேர்த்து, 5 நிமிடங்கள் மிதமான தீயில் கொதிக்க விடுங்கள். வெல்லத்தின் பச்சை வாடை போக வேண்டும் அவ்வளவுதான். இப்போது உளுந்தங்கஞ்சி தயாராக உள்ளது.

karupu-ulundu2

இறுதியாக ஒரு சிறிய தாளிப்பு கரண்டியில் 2 ஸ்பூன் நெய் விட்டு, பொடியாக நறுக்கிய முந்திரி, பாதாம் உலர் திராட்சை, இவர்களை சேர்த்து வதக்கி இறுதியாக ஒரு கைப்பிடி அளவு தேங்காய் துருவலை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி, தயாராக இருக்கும் உளுந்தங்கஞ்சியில் போட்டுவிடுங்கள்.

- Advertisement -

kanji

இறுதியாக ஒரு சிட்டிகை ஏலக்காய் பொடியைத் தூவி உளுந்தங்கஞ்சி பகல் நேரத்தில்தான் கட்டாயம் கொடுக்க வேண்டும். இது ஜீரணமாவதற்கு கொஞ்சம் நேரம் எடுக்கும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. வாரத்தில் 3 நாட்கள் இந்த கஞ்சியை குடித்து வந்தாலும் கூட, உங்களது உடம்பு இரும்பு போல வலிமை ஆகிவிடும் என்பதில் சந்தேகமே கிடையாது. முயற்சி செய்து பாருங்கள். குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு, வயது வந்த பெண் குழந்தைகளுக்கு இதை கொடுப்பது மிகவும் நல்லது.

இதையும் படிக்கலாமே
முகத்தில் இருக்கும் கரும் திட்டுகளை, வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே, சுலபமாக, சில நாட்களிலேயே எப்படி நீக்குவது? சூப்பரான 5 டிப்ஸ் உங்களுக்காக!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -