பல வருடங்களாக அழுக்கு படிந்த உங்கள் குளியலறையை 10 ரூபாயில், 10 நிமிடத்தில் சுத்தப்படுத்தி விடலாமே. பாத்ரூமை சுத்தப்படுத்த இப்படி ஒரு வழி இருப்பதை மறந்து போய்விட்டோமே.

- Advertisement -

சில நாட்களுக்கு முன்பு குளியலறையை கழிவறையை சுத்தம் செய்ய வேண்டும் என்றால் அதில் இந்த ப்ளீச்சிங் பவுடருக்கு தான் முதலிடம். அதன்பின்பு இப்போது நாகரிக வளர்ச்சிக்கு ஏற்றவாறு கழிவறையை சுத்தம் செய்ய, குளியலறையை சுத்தம் செய்ய எத்தனையோ பொருட்கள் வந்துவிட்டது. காலம் காலமாக நாம் பயன்படுத்தி வரக்கூடிய பிளீச்சிங் பவுடரை இன்று நாம் மறந்து விட்டோம். அந்த பிளீச்சிங் பவுடர் இருந்தாலே போதுமே, நம் வீட்டு குளியலறை சுத்தமாக இருக்கும். இந்தப் பவுடரை வாங்க நிறைய செலவு செய்ய கூட தேவையில்லை. பத்து ரூபாய்தான் இருக்கும். அதை வாங்கி இந்த முறையில் உங்களுடைய குளியலறையை சுத்தம் செய்து பாருங்கள். அப்படியே பாத் ரூமில் உள்ள அழுக்குகள் நீங்கி சுத்தமாக பளிச் பளிச்சென மாறும்.

bleaching

நிறைய கெமிக்கல் கலந்த ஆசீட்டுகளை பயன்படுத்தி குளியலறையை சுத்தம் செய்தால் சில பேருக்கு அதில் இருந்து வெளிவரக்கூடிய வாசத்தின் மூலம் அலர்ஜி கூட ஏற்படும். கை கால் எரிச்சல் உண்டாகும். ஆனால் ஒரு செருப்பு போட்டுக்கொண்டு, ப்ளீச்சிங் பவுடரை வைத்து இந்த முறையில் உங்களுடைய பாத் ரூமை சுத்தம் செய்தால் எந்த விதமான பக்க விளைவுகள் கூட ஏற்படாது. உங்களுக்கு இந்த வாசம் ஒத்து வராது என்றால் மூக்கை ஒரு துண்டை வைத்து கட்டிக் கொண்டு அதன் பின்பு இந்த டிப்ஸை ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -

உங்க வீட்டு அருகில் மளிகைக் கடைகளில் கேட்டாலே இந்த பிளீச்சிங் பவுடர் கிடைக்கும். அதை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். ஒரு சிறிய ஜக்கில், உங்கள் பாத்ரூமுக்கு தேவையான அளவு பிளீச்சிங் பவுடர், வினிகர், பேக்கிங் சோடா, இந்த மூன்று பொருட்களையும் சேர்த்து கலந்துவிட்டு அதில் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி கரைத்துக் கொள்ள வேண்டும். கையை போட்டு கரைக்க வேண்டாம் ஒரு குச்சி அல்லது பிளாஸ்டிக் ஸ்பூனை வைத்து இதை தயார் செய்து கொள்ளுங்கள்.

cleaning2

உதாரணத்திற்கு 4 டேபிள் ஸ்பூன் பிளீச்சிங் பவுடர் எடுத்துக் கொண்டால், வினிகர் 15ml, பேக்கிங் சோடா 1 டேபிள்ஸ்பூன், சேர்த்துக் கொள்ளுங்கள். ஒரு பெரிய டம்ளர் அளவு தண்ணீரை அதில் ஊற்றி கலந்து கொண்டால் சரியாக இருக்கும். இப்போது இந்த கலவையை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி கொள்ள வேண்டும். உங்களுடைய வீட்டில் ஸ்ப்ரே பாட்டில் இல்லை என்றாலும் பரவாயில்லை. வாட்டர் கேனில் இந்த கலவையை ஊற்றி விட்டு மூடியில் சின்ன சின்ன ஓட்டைகளைப் போட்டு ஸ்ப்ரே பாட்டிலை நீங்களே தயார் செய்து கொள்ளலாம்.

- Advertisement -

அதன் பின்பு உங்கள் வீட்டுக் குளியலறையில் டைல்ஸில் இருக்கக்கூடிய கரைகளில் இந்தக் லிக்விடை நன்றாக தெளித்து விட்டு விடுங்கள். அதாவது ஸ்ப்ரே செய்து விட்டு விட வேண்டும். 10 நிமிடம் போல இந்த பிளீச்சிங் பவுடர் தண்ணீர் அந்த டையல்ஸில் அப்படியே ஊறட்டும். 10 நிமிடம் கழித்து ஸ்டீல் நார் அல்லது துணி துவைக்க பயன்படுத்தும் பிரஷ் எதையாவது வைத்து அப்படியே தண்ணீர் ஊற்றாமல் டைல்ஸை லேசாக தேய்த்து கொடுத்தாலே போதும்.

bathroom

நீண்ட நாட்களாக படிந்திருந்த அழுக்குகள் கறைகள் அத்தனையும் சுலபமாக சுத்தம் செய்துவிடலாம். அழுக்குகளை எல்லாம் சுத்தமாக தேய்த்து விட்டு இறுதியாக நல்ல தண்ணீரை ஊற்றி அலசி விடுங்கள். டையில்ஸில் இருக்கும் அழுக்கு சுத்தமாக போய்விடும். ஆங்காங்கே இருக்கும் அழுக்குகளை இன்னொருமுறை, ஒரு வாரம் விட்டு கூட மறுபடியும் இதே முறையில் சுத்தம் செய்தார்கள் என்றால் உங்களுடைய பாத்ரூம் பளிச் பளிச்சென்று மாறிவிடும்.

cleaning

இதேபோல்தான் தரையில் உள்ள அழுக்கை சுத்தம் செய்ய வேண்டும். பாத்ரூம் தரையில் இருக்கும் டைல்ஸில் கரைகள் படிந்திருந்தால், இந்த லிக்விடை தரையில் ஸ்ப்ரே செய்து விட்டு, ஊற வைத்து, பிரஷால் தரையில் இருக்கும் அழுக்குகளை தேய்த்தாலே போதும் கரைகள் சுத்தமாகப் போய்விடும். பாத்ரூமில் இருக்கும் தரை நன்றாக உலர்ந்த பிறகு இந்த லிக்விடை போட்டு ஊறவைக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. உங்களுக்கு இந்த குறிப்பு பிடிச்சிருந்தா உங்க வீட்லயும் ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -