போகியான இன்று கூற வேண்டிய மந்திரம்

boghi-manthiram

பழையன கழிதலும் புதியன புகுதலுமே போகி பண்டிகையை கொண்டாடுவதன் நோக்கம் ஆகும். பழையன கழிதல் என்றால் பழைய பொருட்களை தீயிட்டு எரிப்பது மட்டுமே பொருள் ஆகாது. அதோடு நமது உடலும் உள்ளமும் தூய்மை அடைய வேண்டும். நம் உள்ளத்தில் உள்ள தீய எண்ணங்கள் அனைத்தும் போகி தீயில் இட்டு பொசுக்க வேண்டும் என்பதே இதன் பொருள். அந்த வகையில் நமது உள்ளமானது தூய்மை பெற கூற வேண்டிய மந்திரம் இதோ.

pogi

மந்திரம்:
ஓம் நமோ பகவதே |
மஹாபல பராக்ரமாய|
மனோபிலஷிதாம் |
மன ஸ்தம்ப குரு குரு ஸ்வாஹா ||

இந்த மந்திரத்தை 27 முறை ஜெபிப்பதன் மூலம் காமம் குரோதம் போன்ற தீய எண்ணங்கள் நம் மனதில் இருந்து நீங்கும். அதோடு தினம் தியானம் செய்வதன் மூலம் மனமானது செம்மை பெரும்.

மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா
மனமது செம்மையானால் வாயுவை உயர்த்த வேண்டா
மனமது செம்மையானால் வாசியை நிறுத்த வேண்டா
மனமது செம்மையானால் மந்திரம் செம்மை யாமே

இதையும் படிக்கலாமே:
தினம் தினம் ஜபிக்கவேண்டிய சக்திவாய்ந்த ஐயப்பன் காயத்ரி மந்திரம்

என்று அகத்தியர் கூறியுள்ளார். ஆகா நாம் நம்முடைய மனதை செம்மையாக வைத்துக்கொண்டால் நாம் இறைவனை தேடி செல்ல வேண்டிய அவசியம் இல்லை. மாறாக நம்முள் இருக்கும் ஆத்ம சக்தியே நம்மை இறைவனிடம் கொண்டு செல்லும்.