போகி அன்று உங்கள் வீட்டில் இருக்கும் தேவையற்ற பொருட்களை எரிப்பது போல, கண்ணுக்குத் தெரியாத துர்தேவதைகளை எரிக்க இந்த தீபத்தை ஏற்றுங்கள்.

- Advertisement -

தைப்பொங்கல் வரப்போகின்றது. பொங்கல் தினத்தை கொண்டாடுவதற்கு முன்பாக, நம்முடைய வீட்டில் இருக்கும் தேவையற்ற பொருட்களை எல்லாம் சேர்த்து, வெளியே போட்டு எரித்து, பழையதை எல்லாம் கழித்து, புதியதை வரவேற்க போகிப் பொங்கல் கொண்டாடுவதாக ஐதீகம். அந்த நெருப்போடு, கடந்த வருடம் நாம் சந்தித்த கசப்பான அனுபவங்களையும், நம்மிடம் இருக்கும் கெட்ட எண்ணங்களையும், பொறாமை குணத்தையும், கர்வத்தையும் போட்டு எரிக்க வேண்டும் என்பதையும் இந்த இடத்தில் நாம் நினைவுகூற வேண்டும். கடந்த வருடம் கசப்பான சம்பவங்களை நாம் வழக்கத்திற்கு மாறாக, அதிகமாகவே சந்தித்து விட்டோம்.

pongal

‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்பது நாம் எல்லோருடைய எதிர்பார்ப்பு. இந்த எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்ய வேண்டும் என்றால், நம் வீட்டில் கண்ணுக்குத் தெரிந்த அழுக்குகளை சுத்தம் செய்வதோடு சேர்த்து, கண்ணுக்குத் தெரியாத துர்தேவதைகளையும் நம் வீட்டை விட்டு வெளியே அனுப்ப வேண்டும். அதற்கு ஆன்மீக ரீதியாக நம்முடைய வீட்டை எப்படி சுத்தம் செய்ய வேண்டும் என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

- Advertisement -

போகி அன்று சூரிய உதயத்திற்கு முன்பாகவே கண்விழித்து நம்முடைய வீட்டைச் சுத்தம் செய்திருக்க வேண்டும். எப்படி சுத்தம் செய்வது? தண்ணீர் ஊற்றி கழுவும் வசதி உங்களுடைய வீட்டில் இருந்தால், போகி அன்று மட்டுமாவது மாப் போடும் பழக்கத்தை விட்டு, மூலை முடுக்குகளில் இருந்து தண்ணீரை ஊற்றி தரையை கழுவி விடுங்கள். தண்ணீர் போக வழி இல்லை என்றால் வேறு வழி கிடையாது. மாப் தான் போட்டு ஆகவேண்டும்.

bogi

நீங்கள் வீட்டை சுத்தம் செய்யக்கூடிய தண்ணீரில் கட்டாயம் கல்லுப்பு, மஞ்சள், வேப்பிலை இந்த மூன்று பொருட்களையும் சேர்த்து உங்களுடைய வீட்டை சுத்தம் செய்யுங்கள். அதன் பின்பு ஒரு சிறிய கிண்ணத்தில் நல்ல தண்ணீரை ஊற்றி, அதில் கொஞ்சம் பச்சை கற்பூரத்தை போட்டு, மஞ்சள் தூளை கலந்து முடிந்தால் கோமியத்தை கொஞ்சம் சேர்த்து மாஇலைகளால் தொட்டு வீட்டின் மூலை முடுக்குகளில் எல்லாம் இந்த தண்ணீரை தெளித்து விடுங்கள்.

- Advertisement -

இதற்கெல்லாம் முன்பாக உங்களுடைய வீட்டில் வடகிழக்கு மூலையை சுத்தமாக வைத்திருக்கிறார்களா என்று பாருங்கள். தேவையற்ற பொருட்களை அந்த இடத்தில் சேகரித்து வைக்காதீர்கள். வீட்டிற்கு இதன் மூலமும் துரதிஷ்டம் வருவதற்கு வாய்ப்பு உள்ளது.

வீடு சுத்தமாகி விட்டது. காலையில் சூரிய உதயத்திற்கு முன்பாகவே இந்த வேலைகளை எல்லாம் முடித்து விட்டு, பூஜை அறையை சுத்தம் செய்துவிட்டு, பூஜை அறையில் சுவாமி படங்களுக்கு பூக்களால் அலங்காரம் செய்து, எப்போதும் போல இறை வழிபாட்டை மேற்கொள்ளலாம்.

- Advertisement -

poojai

உங்களுடைய வீட்டில் கண்ணுக்குத் தெரிந்த அசுத்தங்களை இப்போது சுத்தம் செய்து விட்டீர்கள். கண்ணுக்குத் தெரியாத அசுத்தத்தை சுத்தம் செய்ய இந்த ஒரு தீபத்தை உங்களுடைய வீட்டில் ஏற்றவேண்டும். ஒரு சிறிய மண் அகல் விளக்கு எடுத்துக் கொள்ளுங்கள். அதில் கொஞ்சம் கடுகு எண்ணெயை ஊற்றி, திரி போட்டு தீபம் ஏற்றி வையுங்கள். முடிந்தவர்கள் காலை நேரத்திலேயே இந்த தீபத்தை ஏற்றலாம். முடியாதவர்கள் மாலை 6 மணிக்கும் இந்த தீபத்தை ஏற்றலாம்.

hanuman

தீபத்தை ஏற்றும்போது அனுமனையும், துர்க்கை அம்மனையும் மனதார வேண்டிக்கொண்டு, உங்கள் வீட்டில் இருக்கும் துர்தேவதைகள் இந்த தீபச் சுடரின் ஒளியால் வெளியேற்றப்பட வேண்டும் என்ற வேண்டுதலை வைத்து, இந்த தீபத்தை உங்கள் வீட்டு பூஜை அறையிலேயே ஏற்றி வைக்கலாம். ஒரு தீபம் ஏற்றினால் கூட போதும்.

deepam

கண்ணுக்கு தெரியாத துர்தேவதைகள் கடுகு எண்ணெயின் மூலம் ஒளிரக்கூடிய தீப ஒளியில் எரிந்து பொசுங்கி பஸ்பமாகி விடும். அடுத்த நாள் வரக்கூடிய தைப்பொங்கலை உங்களுடைய வீட்டில் நிறைவோடு கொண்டாட, போகிப் பண்டிகை அன்று மேற்சொன்ன விஷயங்களை பின்பற்றி பாருங்கள். உங்களுக்கு நடக்கவேண்டிய நல்லது தை மாதத்தில், உங்களைத் தேடி வரும் என்ற நம்பிக்கையோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
2021 போகி பண்டிகை அன்று எரியும் நெருப்பில் தவறியும் இதை போட்டு விடாதீர்கள்! போகியில் கட்டாயம் போட வேண்டிய பொருட்கள் என்னென்ன? நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -