- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalபோகி கொளுத்தும் போது சொல்ல வேண்டிய மந்திரம்.

போகி கொளுத்தும் போது சொல்ல வேண்டிய மந்திரம்.

- Advertisement -

விடிந்தால் போகி பண்டிகை. அனைவரும் போகிப் பண்டிகை திருநாளை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறோம். திங்கட்கிழமை அதிகாலை வேலையில் 3 மணியிலிருந்து அனைவரது வீட்டிலும் இந்த போஹியை ஏற்றுவதற்கு தயாராகி விடுவார்கள். குளிரான இந்த காலகட்டத்தில், நெருப்பு மூட்டி கதகதப்பாக இந்த போகி பண்டிகை கொண்டாடவிருக்கின்றோம்.

இந்த சமயத்தில் நம் உடம்பை பிடித்த கெட்ட சக்தியும், நம்மைச் சுற்றி இருக்கக்கூடிய கெட்ட சக்தியும் நம்மை விட்டு விலக வேண்டும், பிறக்க போகும் தை மாதத்தில் இருந்து நமக்கு ஒரு நல்ல வழி பிறக்க வேண்டும் என்றால் என்ன பரிகாரம் செய்வது? போகி ஏற்றும் போது இந்த ஒரு பொருளை தலையை சுற்றி, இந்த மந்திரத்தை சொல்லி கையில் இருக்கும் பொருளை, நெருப்பில் போட்டால் உங்களை பிடித்த பீடை அனைத்தும் நீங்கும். தலையை சுற்ற வேண்டிய அந்த பொருள் என்ன, சொல்ல வேண்டிய அந்த மந்திரம் என்ன ஆன்மீகம் சார்ந்த பதிவினை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.

- Advertisement -

போகி பரிகாரம்

பரிகாரம் செய்ய நமக்கு தேவையான பொருள். ஒரே ஒரு எலுமிச்சம்பழம். வீட்டில் இருக்கும் அனைவரது கையிலும் ஒவ்வொரு எலுமிச்சம் பழத்தை கொடுக்கலாம். போகி உங்கள் வீட்டில் ஏற்றப்பட்ட பிறகு, அந்த போகி நெருப்பை சுற்றி நின்று கொள்ளுங்கள். கையில் ஒரு எலுமிச்சம் பழத்தை வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் தலையை 8 முறை சுற்றுங்கள். தலையை ஒவ்வொரு முறை சுற்றும் போதும் இந்த மந்திரத்தை ஒவ்வொரு முறை சொல்லவேண்டும்.

மொத்தம் எட்டு முறை இந்த மந்திர உச்சரிக்கப்பட்ட பிறகு, எட்டு முறை உங்கள் கையில் இருக்கும் எலுமிச்சம் பழத்தை தலையை சுற்றிய பிறகு, அந்த எலுமிச்சம் பழத்தை முன்னாடி எரிந்து கொண்டிருக்கும் போகி நெருப்பில் போட்டு விடுங்கள். எலுமிச்சம் பழத்தை தலையில் சுற்றும் போது சொல்ல வேண்டிய அகத்தியர் அருளிய ஒரு வரி மந்திரம் இதோ உங்களுக்காக.

- Advertisement -

அகத்தியர் மந்திரம்

“ஓம் ரீம் நசி நசி”

எலுமிச்சம் பழத்தை நெருப்பில் போட்டுவிட்டு அடுத்த பிறக்கப் போகும் தை மாதத்திலிருந்து உங்களுடைய வாழ்க்கை சிறப்பாக அமைய வேண்டும் என்று அக்கினி தேவனிடம் வேண்டுதல் வைத்துக் கொள்ளுங்கள். பிறகு வீட்டிற்குள் வந்து உறங்கச் செல்லக்கூடாது. நேரடியாக குளியல் அறைக்குச் சென்று குளித்து விட வேண்டும்.

இதையும் படிக்கலாமே: கெட்ட சக்தியை விரட்ட சக்தி வாய்ந்த நரசிம்மர் மந்திரம்

போகியை பார்த்துவிட்டு வந்து தலைக்கு குளிப்பது சிறப்பான பலனைத் தரும். தலைக்கு குளிக்கும் தண்ணீரில் 1 ஸ்பூன் கல் உப்பு, 2 சிட்டிகை மஞ்சள் பொடி போட்டு கலந்து அந்த நீரில் தலைக்கு குடியுங்கள். தோஷங்கள் நீங்கும். மேல் சொன்ன இந்த ஆன்மீகம் சார்ந்த பரிகாரங்கள் உங்களுக்கு பயனுள்ளபடி அமையும் என்ற தகவலுடன் இன்றைய பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்