சட்டுனு 5 நிமிஷத்துல அவிச்ச முட்டை ஃப்ரை இப்படி பண்ணுங்க. அவித்த முட்டை பிடிக்காதவர்கள் கூட விரும்பி சாப்பிடுவீங்க

- Advertisement -

எல்லோருக்குமே அவித்த முட்டை பிடிக்கும் என்று கூறி விட முடியாது. சிலர் முட்டையை எப்படி செய்து கொடுத்தாலும் ரசித்து ருசித்து சாப்பிடுவார்கள். ஆனால் அவிச்ச முட்டை என்றால் ஒதுக்கி வைத்து விடுவார்கள். அதே போல அவித்த முட்டை பிடித்தவர்கள் கூட, எல்லா நேரங்களிலும் அதை விரும்பி சாப்பிடுவது கிடையாது. எனவே அவிச்ச முட்டை விரும்பி சாப்பிடணும்னா, 5 நிமிஷத்துல இப்படி ஃப்ரை பண்ணி பாருங்க. இந்த அவிச்ச முட்டை ஃப்ரை சுலபமாக எப்படி செய்யலாம்? என்பதை தான் இந்த சமையல் குறிப்பு பதிவில் இனி தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

அவித்த முட்டை ஃப்ரை செய்ய தேவையான பொருட்கள்:
அவித்த முட்டை – நான்கு, சமையல் எண்ணெய் – ஒன்றரை டேபிள் ஸ்பூன், மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன், கரம் மசாலா – அரை டீஸ்பூன், மிளகுத்தூள் – கால் டீஸ்பூன், சீரகத்தூள் – கால் டீஸ்பூன், சின்ன வெங்காயம் – 10, நறுக்கிய மல்லித்தழை – அரை கைப்பிடி.

- Advertisement -

அவித்த முட்டை ஃப்ரை செய்முறை விளக்கம்:
அவித்த முட்டை ஃப்ரை செய்வதற்கு முதலில் நாலு அவிச்சு வைத்த முட்டைகளை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அதிலிருந்து உள்ளே இருக்கும் மஞ்சள் கருவை மட்டும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். மீதி இருக்கும் வெள்ளை கருவை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். பின் தேவையான மற்ற எல்லா பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

இந்த டிஷ் செய்வதற்கு சின்ன வெங்காயம் தேவை. அப்படி இல்லை என்றால் அதனை ஸ்கிப் செய்து விடலாம் நேரம் மிச்சமாகும். பின்னர் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வையுங்கள். தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றி காய விடுங்கள்.எண்ணெய் நன்கு காய்ந்ததும் மசாலா பொருட்கள் அனைத்தும் சேர்க்க வேண்டும். நான்கு முட்டைக்கு மேற்கூறிய அளவுகள் சரியாக இருக்கும். அதற்கு அதிகமாகவோ, குறைவாகவோ சேர்ப்பவர்கள் அதற்கு தகுந்தாற் போல மசாலாவை கூட்டி குறைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

முறையே மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலாத்தூள், சீரகத்தூள், மிளகுத்தூள் ஆகியவற்றை சேர்த்து அடுப்பை குறைவான தீயில் வைத்து நன்கு வதக்கி விடுங்கள். மசாலா வாசம் போக வேண்டும், இரண்டு நிமிடம் நன்கு மசாலா வாசம் போக வதக்கி விட்டதும், சின்ன வெங்காயத்தை தோல் உரித்து பொடி பொடியாக நறுக்கி சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும். பிறகு நீங்கள் வெட்டி வைத்துள்ள முட்டையையும், முட்டையின் மஞ்சள் கருவையும் முழுதாக அப்படியே சேர்த்து நன்கு பிரட்டி விட வேண்டும்.

இதையும் படிக்கலாமே:
இப்படி ஒரு முறை எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செஞ்சு பாருங்க, இது சிக்கன் கிரேவியா இல்ல கத்திரிக்காய் கிரேவியா நீங்களே யோசிப்பீங்க டேஸ்ட் அப்படி இருக்கும்.

அவித்த முட்டையில் ஏற்கனவே உப்பு சேர்த்து அவித்து இருந்தால் இதில் உப்பு சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை. அப்படி இல்லாதவர்கள் இதற்கு தேவையான அளவிற்கு உப்பு தூவி பிரட்டி விடுங்கள். பின்பு கடைசியாக அரை கைப்பிடி அளவிற்கு பொடி பொடியாக நறுக்கிய மல்லி தழையை தூவி அப்படியே ஒரு பிரட்டு பிரட்டி, சாதத்துடன் சாப்பிட்டு பாருங்க, ஆஹா… என்று சொல்லிக் கொண்டே சாப்பிடலாம். ரொம்பவே டேஸ்ட்டியாக இருக்கக்கூடிய இந்த அவித்த முட்டை ஃப்ரை இப்படி மட்டும் செஞ்சு சாப்பிட்டால், இனி அவிச்ச முட்டை பிடிக்காதுன்னு சொல்லவே மாட்டாங்க, இதே மாதிரி செஞ்சு தர கேப்பாங்க.

- Advertisement -