- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்இப்படி ஒரு முறை எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செஞ்சு பாருங்க, இது சிக்கன் கிரேவியா இல்ல...

இப்படி ஒரு முறை எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செஞ்சு பாருங்க, இது சிக்கன் கிரேவியா இல்ல கத்திரிக்காய் கிரேவியா நீங்களே யோசிப்பீங்க டேஸ்ட் அப்படி இருக்கும்.

- Advertisement -

கத்திரிக்காயை பொறுத்த வரையில் எண்ணெயில் போட்டு வதக்கி குழம்பு வைத்தால் மீன் குழம்பு மிஞ்சும் வகையில் அதன் சுவை இருக்கும். கத்திரிக்காய் விரும்பி சாப்பிடுபவர்களுக்கு இந்த குழம்பின் ருசி நன்றாக தெரியும். ஆனால் இந்த சமையல் குறிப்பு பதிவில் சிக்கன் கிரேவி சுவையில் ஒரு சூப்பரான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி எப்படி செய்வது என்று தான் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

தேவையான பொருட்கள்

கத்திரிக்காய் – 250 கிராம், வெங்காயம் – 2, தக்காளி – 2, இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன், பச்சை மிளகாய் – 2, மிளகாய் தூள் -1 டீஸ்பூன், காஷ்மீரி மிளகாய்த்தூள் – 1டீஸ்பூன், தனியா தூள் – 2 டீஸ்பூன், கரம் மசாலா -1/2 ஸ்பூன், மஞ்சள் தூள் -1/4 டீஸ்பூன், உப்பு -1 டீஸ்பூன் பட்டை, லவங்கம், கிராம்பு, -2 (அனைத்திலும் இரண்டு ) புளி – சின்ன நெல்லிக்காய் அளவு, கருவேப்பிலை -1 கொத்து, எண்ணெய் -3 டேபிள் ஸ்பூன்.

- Advertisement -

செய்முறை விளக்கம்

முதலில் கத்திரிக்காய் காம்பு மட்டும் நீக்கி, மேற் புறமாக நறுக்கி தண்ணீரில் போட்டு கொள்ளுங்கள். அதன் பிறகு வெங்காயம், தக்காளி இரண்டையும் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். புளியை தண்ணீரில் ஊறவைத்து கரைத்து வடிகட்டி எடுத்து வைத்து கொள்ளுங்கள்.

இப்போது அடுப்பை பற்ற வைத்து அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அலசி வைத்த கத்திரிக்காய் தண்ணீர் இல்லாமல் துடைத்து விட்டு எண்ணெயில் போட்டு விடுங்கள். கத்திரிக்காய் 50% வரை வேக வேண்டும். அது வரையில் எண்ணெயில் இந்த கத்திரிக்காயை நன்றாக வதங்கி எடுத்து விடுங்கள்.

- Advertisement -

அதன் பிறகு அதே கடாயில் இன்னும் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி மசாலா பொருட்களை சேர்த்து பொறிந்த உடன், வெங்காயம் சேர்த்து நல்ல பொன்னிறமாக வதக்கிக் கொள்ளுங்கள். அத்துடன் இஞ்சி பூண்டு விழுதையும் சேர்த்து வதக்கிய பிறகு பச்சை மிளகாய், தக்காளி, கருவேப்பிலை, மஞ்சள் தூள் அனைத்தையும் ஒன்றாகவே சேர்த்து ஒரு முறை கலந்து விட்ட பிறகு நன்றாக வதங்க விடுங்கள்.

இவை எல்லாம் வதங்கிய பிறகு கரம் மசாலா, மிளகாய்த் தூள், உப்பு, தனியா தூள், என அனைத்தையும் சேர்த்து எண்ணையிலே ஒரு முறை நன்றாக வதக்கி விடுங்கள். அதன் பிறகு அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி இந்த கிரேவியை ஒரு முறை கொதிக்க விடுங்கள். பச்சை வாசனை முழுவதுமாக அடங்கியவுடன் வதக்கி வைத்த கத்திரிக்காய், கரைத்து வைத்த புளி கரைசல் இரண்டையும் சேர்த்து ஒரு முறை கலந்து தட்டு போட்டு மூடி விடுங்கள்.

- Advertisement -

இரண்டு நிமிடம் வரை இந்த கிரேவியில் கத்திரிக்காய் ஊறினால் போதும். அதில் உள்ள மசாலா எல்லாம் கத்திரிக்காயில் ஊறி கிரேவி நன்றாக சுருண்டு வந்து விடும். சுவையான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி தயார்.

இதையும் படிக்கலாமே: இட்லி, தோசைக்கு மாவு இல்லாத நேரத்தில் 5 நிமிஷத்துல நல்லா மொறு மொறுன்னு இந்த தோசை செஞ்சு, அதுக்கு சைடு டிஷ்ஷா இந்த மதுரை காரச் சட்னி வச்சு பாருங்க. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.

இந்த கத்திரிக்காய் கிரேவியை சுட சுட சாதத்துடன் வைத்து சாப்பிடும் போது சிக்கன் கிரேவியே தோற்றுப் போகும் அளவுக்கு சுவையாக இருக்கும். அது மட்டுமின்றி சப்பாத்தி, இட்லி, தோசை போன்றவற்றிக்கு கூட இது மிகவும் அருமையாக இருக்கும். நீங்களும் ஒரு முறை இந்த கத்திரிக்காய் கிரேவியை ட்ரை பண்ணி பாருங்க.

சற்று முன்