எப்படியாவது 48 நாட்கள் தொடர்ந்து இந்த ஒரு தீபத்தை மட்டும் உங்களுடைய வீட்டில் ஏற்றி விட்டால் போதும். ஆயுசுக்கும் வரக்கூடிய பண கஷ்டத்தில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்.

cash-agal-vilakku

நம்முடைய பணத்தேவையை பூர்த்தி செய்து கொள்ள எத்தனையோ பரிகார வழிபாட்டு முறைகள் நமக்கு தெரியும். இருப்பினும் கொஞ்சம் சிரமப் பட்டாவது 48 நாட்கள் உங்களுடைய வீட்டில் இந்த ஒரு தீபத்தை எற்றி விட்டாலே போதும். நீங்கள் எந்த வேண்டுதலை வைத்து தீபம் ஏற்றுகிறீர்களோ அந்த வேண்டுதல் நிச்சயமாக பலிக்கும். நம்மில் பல பேருக்கு தெரிந்த பிரம்ம முகூர்த்த நேரத்தில் ஏற்றக்கூடிய தீபம் தான் அது. ஆனால் பிரம்மமுகூர்த்தத்தில் ஏற்றக்கூடிய தீபத்தை மகாலட்சுமியையும் விஷ்ணு பகவானை மனதில் நினைத்துக்கொண்டு கொஞ்சம் வித்தியாசத்துடன் ஏற்ற போகின்றோம்.

vilakku2

அது எந்த தீபம். நம்முடைய வீட்டில் அதை எப்படி ஏற்றுவது என்ற தெளிவான விளக்கத்தை தான் இந்தப் பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். பதிவுக்கு செல்வோம் வாருங்கள். பொதுவாகவே நெல்லிக்கனி மகாலட்சுமிக்கும் விஷ்ணு பகவானுக்கும் உகந்தது என்ற விஷயம் நாம் எல்லோரும் அறிந்ததே. இந்த நெல்லிக்கனியில் வெள்ளிக்கிழமை தீபம் ஏற்றி மகாலட்சுமியை வழிபாடு செய்வது நமக்கு வீட்டில் செல்வ கடாட்சத்தை கொடுக்கும்.

அதே நெல்லிக்கனி தீபத்தை உங்களுடைய வீட்டில் பிரம்ம முகூர்த்தத்தில் ஏற்றுவது வீட்டிற்கு அத்தனை சுபிட்சத்தை தேடித்தரும் என்று சொல்லப்பட்டுள்ளது. வீட்டில் இருக்கக்கூடிய எவ்வளவு பெரிய கஷ்டம், கடன் சுமையாக இருந்தாலும் சரி, அதை 48 நாட்களில் ஒரு முடிவுக்கு கொண்டுவர முடியும். ஆனால் 48 நாட்களில் ஒரு நாள் கூட விடாமல், இரண்டு நெல்லிக்காய் தீபங்களை உங்களுடைய பூஜை அறையில் ஏற்றி வர வேண்டும்.

nellikai-dheepam

பிரம்ம முகூர்த்த நேரம் என்றதுமே பயம் வேண்டாம். காலை 6 மணிக்கு முன்பாக இந்த தீபத்தை உங்களுடைய வீட்டில் ஏற்றினால் போதும். பிரம்ம முகூர்த்த நேரம் என்பது அதிகாலை 3.30 மணியிலிருந்து 6.00 மணி வரை உள்ளது. காலையில் எழுந்து குளித்துவிட்டு பூஜை அறையில் மகாலட்சுமி படத்திற்கு பூக்களால் அலங்காரம் செய்து, இரண்டு நெல்லிக்காய்களை எடுத்து காம்பு பக்கத்தில் சிறியதாக ஓட்டை போட்டு விட்டு, அதன் உள்ளே கொஞ்சமாக  நெய் விட்டு, பஞ்சுத் திரி போட்டுத் தீபம் ஏற்றி விட வேண்டும். இந்த தீபம் வெறும் ஐந்து நிமிடங்கள் மட்டும் தான் எரியும். இருப்பினும் பரவாயில்லை.

- Advertisement -

அந்த ஐந்து நிமிடம் முழுவதும் நீங்கள் பூஜை அறையில் அமர்ந்து மகாலட்சுமியை விஷ்ணு பகவானை வேண்டி மனதார பணக்கஷ்டம் தீர பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். 48 நாட்கள் தொடர்ந்து இந்த தீபத்தை பிரம்ம முகூர்த்த நேரத்தில் உங்களுடைய வீட்டில் ஏற்றினால் நிச்சயமாக உங்களுக்கு பணம் சம்பந்தப்பட்ட வரவு ஏதாவது ஒரு வகையில் இருந்து கொண்டே இருக்கும். வீட்டில் இருக்கும் வறுமை நீங்கும். நெல்லிக்காய் தீபம் ஏற்ற முடியவில்லை என்று சொல்பவர்கள் சிறிய இரண்டு மண் அகல் விளக்குகளில் நெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு மகாலட்சுமிக்கு தீபம் ஏற்றி வழிபாடு செய்தால் மிக மிக நல்ல பலனைக் கொடுக்கும்.

nellikai

ஆனால் நெல்லிக்காய் தீபத்திற்கு முன்னுரிமை கொடுங்கள். முடிந்தவரை எப்பாடுபட்டாவது 48 நாட்கள் தொடர்ந்து அதாவது, வீட்டில் பெண்கள் தீபமேற்ற முடியாத சூழ்நிலை ஏற்பட்டாலும் கூட, அந்தப் பெண்ணினுடைய கணவர், அப்படி இல்லை என்றால் அவர்களுடைய குழந்தைகள், உறவினர்கள் இப்படி யாராவது ஒருவர் அந்த தீபத்தை ஏற்றி வரலாம். 48 நாட்களில் ஒரு நாள் கூட விடாமல் இதை தவம் போல் மேற்கொண்டால் நிச்சயம் நல்ல பலன்களை பெறமுடியும்.

vishnu-lakshmi

48 நாட்கள் தொடர்ந்து நெல்லிக்காய் களில் தீபத்தை ஏற்றி அந்த நெல்லிக்காய்களை வீணாகக் குப்பையில் தூக்கி போடக்கூடாது. தினமும் புதிய இரண்டு நெல்லிக்காய்களில் தான் தீபமேற்ற வேண்டும். நெல்லிக்காயில் உள்ள கொட்டையை நீக்கி விட்டு பசுமாட்டிற்கு போடலாம். அப்படி இல்லை என்றால் பறவைகளுக்கு மொட்டைமாடியில் இறையாக போட்டுவிடுங்கள். அப்படி இல்லை என்றால் இந்த நெல்லிக்காய்களை நன்றாக உலர வைத்து பொடி செய்து தினம்தோறும் ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து நாமும் குடிக்கலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.