தினம் தினம் வெற்றி பெற்றுக்கொண்டே இருக்க, தோல்விகளை தூரம் தள்ளி வைக்க, பிரம்ம முகூர்த்த நேரத்தில் எப்படி வேண்டுதல் வைப்பது?

brammamuhoortham

தோல்வி இல்லாத வாழ்க்கையை நிச்சயமாக மனிதனால் வாழ முடியாது. ஆனால் நமக்கு ஒரு விஷயம் கிடைக்கவே கிடைக்காது என்று விதியில் இருந்தாலும், நமக்கு தோல்வியை ஏற்படுத்தக்கூடிய தருணங்கள் நம் வாழ்க்கையில் வந்தாலும், அந்த விதியை அந்தத் தோல்வியை, எப்படி வெற்றியாக மாற்றுவது என்பதற்கான வழியை நம்முடைய முன்னோர்கள் சொல்லிவைத்து சென்றுள்ளார்கள். உங்களுடைய வாழ்க்கையில் வரக்கூடிய தோல்விகளை, வெற்றியாக மாற்ற வேண்டும் என்று நீங்கள் நினைப்பவர்களாக நீங்கள்! ‘விதியை வெல்ல, மதியால் முடியும் என்ற நம்பிக்கை உங்களுக்கு இருந்தால்’ இந்த பதிவை படித்து பயன்பெறலாம்.

bramma

பிரம்ம முகூர்த்தத்துக்கு எதற்காக இத்தனை முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது? பிரம்ம முகூர்த்தத்தில் எப்படியான வேண்டுதலை வைத்துக் கொண்டால், நம்முடைய வாழ்க்கையில் முன்னேற்றம் அதி விரைவாக இருக்கும்? என்பதைப் பற்றிய சில ஆன்மீக தகவல்களை பற்றி தெரிந்து கொள்ள போகிறோம்.

பொதுவாகவே முப்பத்து முக்கோடி தேவர்கள் பூமிக்கு வரக் கூடிய நேரத்தை தான் இந்த பிரம்ம முகூர்த்த நேரம் என்று சொல்லுவார்கள். அதிகாலை 3.00 மணியிலிருந்து 5.30 மணிக்குள், அந்த பிரம்மதேவனும் இந்த பூமியை பார்ப்பதாக சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. பிரம்மனுடைய பார்வை இந்த பூமியில் படும் போது, பூமியில் மனிதர்கள் வைக்கக்கூடிய வேண்டுதலை, உடனடியாக நிறைவேற்றி வைப்பாராம். அதனால்தான் பிரம்மமுகூர்த்தத்தில் வேண்டுதல் வைத்தால் அது உடனே பலிக்கும் என்று சொல்கிறார்கள்.

vishnu-bramma

தினம்தோறும் உங்களால் பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து இறைவழிபாடு செய்ய முடியவில்லை என்றாலும் பரவாயில்லை. உங்களுக்கு வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைய கூடிய சில நாட்கள் கட்டாயமாக வரும். அந்த நாள் மட்டும் அதிகாலை 4:00 மணி அளவில் கண் விழித்தால் கூட போதும்.

- Advertisement -

எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு பூஜை அறையில் அமர்ந்து, அன்றைய நாள் நீங்கள் என்ன செய்யவேண்டும்? எந்தெந்த வேலைகளை எந்தெந்த நேரத்தில் எப்படி முடிக்க வேண்டும்? உங்களது வேலைகளுக்கு நேரத்தை எப்படி ஒதுக்க வேண்டும், என்ற உங்களது வேலைக்கான அட்டவணையை போட்டால் கூட, நீங்கள் போடும் அந்த பிளான் கட்டாயம் அப்படியே நடக்கும்.

meditation

உதாரணத்திற்கு ஒரு காண்ட்ராக்ட் நல்லபடியாக உங்களுக்கே வரவேண்டும் என்றால், நீங்கள் கையெழுத்துப் போட போகும் அன்றைய தினம் மட்டும் பிரம்ம முகூர்த்த நேரத்திலேயே எழுந்து இறைவனின் முன்பாக ‘ஒப்பந்தம் உங்கள் பக்கம் கையெழுத்தாக, நீங்கள் என்னென்ன வேலைகளை செய்ய வேண்டும், என்று ஒரு ப்ளான் போட வேண்டும். குறிப்பிட்டுச் சொல்லப் போனால் எந்த பேனாவில் கையெழுத்து போட போகிறீர்களோ அந்த பேனாவை இறைவனின் முன்பு வைத்து ஒப்பந்தம் நல்லபடியாக உங்கள் பக்கம் முடிவாக வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள்.’ நிச்சயமா ஒப்பந்தம் உங்கள் பக்கம் கையெழுத்தாக, அந்த பிரம்மன் ஆசீர்வாதம் செய்தார்.

சிலபேருக்கு எத்தனை முறை இன்டர்வியூக்கு சென்றாலும் வேலை கிடைக்காது. இன்டர்வியூக்கு செல்லப்போகும் அந்த நாள் மட்டுமாவது பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து எப்படி நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும் என்று நினைத்துப் பாருங்கள். உங்களுக்கு வேலை கிடைத்து விட்டதாக நினைத்து இறைவனிடம் வேண்டுதல் வையுங்கள். நிச்சயம் அந்த வேலை உங்களுக்குத்தான்.

pray

சில பேருக்கு திருமணம் தள்ளிப் போய்க் கொண்டே இருக்கும். பெண் பார்க்க போகும் அந்த நாள் மட்டுமாவது பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து நீங்கள் பார்க்கப்போகும் வரன் நல்லபடியாக உங்களுக்கு அமைய வேண்டும். என்று நினைத்து, இறைவனிடம் வேண்டிக் கொள்ளுங்கள். நிச்சயமாக அந்த வரன் உங்களுக்குத்தான்.

sucess

இப்படியாக எந்த வேளையில் தாமதம் இருந்தாலும், தாமதமான வேலையை செய்யத் தொடங்கும் அன்றைய தினம் மட்டுமாவது, பிரம்ம முகூர்த்த நேரத்தில் நீங்கள் எழுந்து உங்களுடைய வேண்டுதலை இறைவனின் செவிகளில் சொன்னால், உங்கள் பக்கம் தோல்வி வருவதற்கு வாய்ப்பே இல்லை. பிரம்ம முகூர்த்த நேரத்தில் வேண்டிக்கொண்டு அந்த வேலையை, அன்றைய நாளே செயல்படுத்திப் பாருங்கள். நம்பமுடியாத அதிசயம் நடக்கும். நம்பிக்கையுடன் முயற்சி செய்பவர்கள் வாழ்க்கையில் தோல்வி குறிக்கிடாது என்ற கருத்துடன் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.