பிறந்ததிலிருந்தே கஷ்டமா? என் தலை எழுத்தே இப்படித்தானா? என் தலைவிதி மாறாதா என்று கேட்பவர்களுக்கு வழி இதோ

Amman-
- Advertisement -

இவ்வுலகில் வாழும் அனைத்து மனிதர்களுக்கும் அவர்கள் பிறக்கும்போதே அவர்களுக்கான தலைவிதி எழுதப்பட்டு விடும். நிறைய நபர்கள் பிறந்ததிலிருந்தே பிரச்சனைகள், இன்னல்களை மட்டுமே அனுபவித்து வருவார்கள். வாழ்க்கையில் எதுவுமே நன்றாக அமைந்து இருக்காது, அப்படியே அமைந்தாலும் அதனால் கஷ்டங்களை மட்டுமே அனுபவித்து இருப்பார்கள். தனி நபர்களுக்கு மட்டும் இல்லாமல் சில குடும்பங்களும் இவ்வாறான சூழ்நிலையிலேயே வாழ்ந்து வருகின்றன. இதற்கெல்லாம் முன்கூட்டியே எழுதப்பட்ட அவர்களின் தலைவிதியே காரணமாகும்.

mani

சிலபேர் விதியை மதியால் வெல்லலாம் என்பர். ஆனால் அம்மதிநுட்பமே நம் தலைவிதியின்படிதான் அவர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதே ஆன்மீக உண்மை. அவ்வாறு மதிநுட்பத்தால் மாற்றி அமைக்க முடியாத நம் தலைவிதியை சப்தகன்னியர்களுள் ஒருவரான பிரம்மி தேவியை வணங்குவதன் மூலம் மாற்றலாம்.

- Advertisement -

பிரம்மி தேவி:
பிரம்மி, மகேஸ்வரி, கௌமாரி, வராகி, வைஷ்ணவி, சாமுண்டீஷ்வரி, இந்திராணி ஆகிய சப்தகன்னியர்களுள் முதன்மையானவர் பிரம்மி தேவி ஆவார்.

பிரம்மியின் தோற்றம்:
அந்தகாசுரனை சிவபெருமான் வதம் செய்த போது, அவனுடைய உதிரத்தில் இருந்து பல அசுரர்கள் தோன்றினார்கள். அவர்களை வதம் செய்வதற்காக சிவன், திருமால், முருகன், பிரம்மன், இந்திரன் ஆகியோர் தங்களுடைய சரீரத்திலிருந்து கன்னியர்களை தோற்றுவித்தனர். அப்போது பிரம்மாவிலிருந்து இருந்து தோன்றியவர் தான் பிரம்மி ஆவார். இவர் அன்னப் பறவையை வாகனமாகக் கொண்டவர். ஸ்படிக மாலையை அணிகலனாக கொண்ட இவருக்கு நான்கு கரங்கள் உள்ளன.

- Advertisement -

பிரம்மி தேவிக்குரிய தாந்திரீக பரிகார முறை:
ஒரு தாம்பாலத் தட்டில் சிறிது மஞ்சள் கலந்த நீரை ஊற்றி, இரண்டு தீபங்களை கிழக்கு நோக்கி பார்த்தவாறு அந்த தட்டில் வைத்து, அந்த தட்டை பூஜை அறையில் உள்ள அம்பாள் திருவுறவ படத்திற்கு முன்னாள் வைக்க வேண்டும். பிறகு “ஓம் பிரம்மியே நமஹ” என்ற மந்திரத்தை 108 முறை ஜபிக்கவும். பரிகாரத்தின்போது நைவேத்தியமாக சிறிதளவு கற்கண்டை பயன்படுத்துவதன் மூலம் அதிக பலனை அடையலாம்.

deepam

இந்த பரிகாரத்தை தினமும் பிரம்ம முகூர்த்த நேரமான அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரைக்குள்ளாக செய்தால் மட்டுமே அதற்குண்டான பலனை பெற முடியும். இவ்வாறு தினமும் இந்த பரிகார முறையை செய்து வந்தால் நல்லபடியான மாற்றத்தை நம் வாழ்க்கையில் காணலாம்.

deepam

பிரம்மி தேவிக்கு மற்றுமொரு பரிகார முறை:
பிரம்மி தேவி மேற்கு திசைக்கு அதிபதியாவாள். யாராவது வீட்டின் வாசலை மேற்கு திசையை நோக்கி கட்டியிருந்தால், பிரம்ம முகூர்த்த நேரத்தில் வீட்டின் வாசலில் மேற்கு திசை நோக்கி தீபமேற்றி “ஓம் பிரம்மியே நமஹ” என்று ஜபித்துவர வீட்டிலுள்ள பிரச்சனைகள் தீரும்.

- Advertisement -