உங்க வீட்ல பிரட் பேக்கட் இருக்கா? அது போதும் உடனே 10 நிமிஷத்துல இந்த கட்லெட் செஞ்சு பாருங்க. ஒரு நொடியில் தட்டு காலி.

cutlet
- Advertisement -

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் ஒரு ரெசிபி தான் கட்லெட். இந்த ஸ்நாக்ஸை கஷ்டப்பட்டு செய்ய வேண்டாம். ஒரு பிரட் பாக்கெட் இருந்தால் போதும். மிக மிக சுலபமாக மொறுமொறுவென இந்த ஸ்நாக்ஸ் ரெசிபியை தயார் செய்துவிடலாம். உங்க வீட்ல பிரட் இருந்தா யோசிக்காதீங்க. இன்னிக்கு ஈவினிங் டீ டைம்க்கு இந்த ரெசிபியை செஞ்சு பாருங்க. வாங்க அந்த ஈஸி ரெசிபிய தெரிஞ்சுக்கலாம்.

cutlet1

6 பிரெட் ஸ்லைஸை எடுத்துக்கொண்டால், 8 லிருந்து 10 கட்லட்டுகள் நமக்கு கிடைக்கும்.  6 பிரெட் ஸ்லைஸ் கொண்ட கட்லட் ரெசிபிக்கு எவ்வளவு பொருட்கள் தேவை என்பதை பற்றி இன்று நாம் பார்க்கப் போகின்றோம். உங்களுக்கு எத்தனை கட்லெட் தேவையோ அந்த அளவிற்கு, அளவுகளை குறைத்தோ அதிகப்படுத்தியோ போட்டுக்கொள்ளுங்கள்.

- Advertisement -

6 பெரிய அளவில் இருக்கும் பிரெட் துண்டுகளை தண்ணீரில் நனைத்து நன்றாக பிழிந்து தனியாக ஒரு பவுலில் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். ப்ரெட் உடைந்தாலும் பரவாயில்லை.

cutlet2

அடுத்தபடியாக பொடியாக நறுக்கிய மீடியம் சைஸ் வெங்காயம் – 1, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – 2, பொடியாக நறுக்கிய தக்காளி பழம் – 1 (தக்காளி பழத்தின் உள்ளே இருக்கும் விதைகளை நீக்கி விடவேண்டும்) பொடியாக நறுக்கிய குடை மிளகாய் – 1 கைப்பிடி அளவு, பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை சிறிதளவு, இந்த பொருட்களை எல்லாம் தண்ணீரில் நனைத்த பிரெட் துண்டுகளுடன் சேர்த்து உங்களுடைய விரல்களால் பிசைந்து கொடுக்க வேண்டும்.

- Advertisement -

அடுத்தபடியாக தயாராக இருக்கும் இந்த பிரட் கலவையுடன் சில்லி சாஸ் – 1 ஸ்பூன், டொமேட்டோ சாஸ் – 1 ஸ்பூன், சேர்த்து கூடவே அரிசிமாவு – 2 டேபிள்ஸ்பூன், கோதுமை மாவு – 3 டேபிள் ஸ்பூன் அளவு, தேவையான அளவு உப்பு சேர்த்து மீண்டும் ஒருமுறை மாவை உங்களுடைய விரல்களால் பிசைந்து, மசால் வடை மாவு போல தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்‌. (ஒருவேளை மாவு உங்களுக்கு ரொம்பவும் தளதளவென இருப்பதாக உணர்ந்தால், ஒரு ஸ்பூன் அரிசி மாவு அல்லது கோதுமை மாவு இன்னும் கொஞ்சம் கூட சேர்த்துக் கொள்ளலாம். உங்கள் வீட்டில் சாஸ் இல்லை என்றாலும் கவலைபட வேண்டாம் அதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.)

cutlet2

சப்பாத்தி மாவு போல் கட்லெட் கலவையை உள்ளங்கைகளை வைத்து அழுத்தம் கொடுத்துப் பிசையக்கூடாது. விரல்களால் சாஃப்ட் ஆக பிசைந்து இந்த மாவை தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக பிடித்து, தட்டி அப்படியே நிறைய எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்தாலும் சரி தான். அப்படி இல்லை என்றால் கட்லெட் செய்வது போல தோசைக்கல்லில், கொஞ்சமாக எண்ணெய் ஊற்றி ஷாலோ ஃபிரை செய்து எடுத்தாலும் சரிதான்.

cutlet_4

ஆனால் கட்லெட் இரண்டு பக்கமும் பொன்னிறமாக சிவந்து வர வேண்டும். அப்போதுதான் சாப்பிடுவதற்கு மொறுமொறுப்பாக இருக்கும். அடுப்பை மிதமான தீயில் வைத்து விட்டு கருக விடாமல் கட்லெட்டை சிவக்க வைத்து எடுத்து கொள்ளுங்கள். அவ்வளவு தான். சுடச்சுட இந்த ரெசிபிக்கு தொட்டுக்கொள்ள ஒரு டொமேடோ கெட்சப் இருந்தாலும் போதும். அப்படி இல்லை என்றால் ஒரு கிரீன் சட்னி வச்சுக்கோங்க. ஒரு நிமிஷத்துல குழந்தைகள் தட்டை காலி செய்து விடுவார்கள். இன்னைக்கு உங்க வீட்ல நிச்சயமா இந்த ஸ்னாக்ஸ் தானே.

- Advertisement -