பிரட் உப்புமா செய்முறை

bread upma
- Advertisement -

இட்லி, தோசைக்கு பதிலாக மிகவும் எளிமையான முறையில் காலையில் செய்யக்கூடிய உணவு ஏதாவது இருக்குமா? என்று யோசிக்கும் இல்லத்தரசிகள் பலர் இருக்கிறார்கள். அதே போல் மாலை நேரத்தில் டீ குடிக்கும் பொழுது உடன் சாப்பிடுவதற்கு ஏதாவது ஒரு டிபன் ஐட்டத்தை செய்யலாமா? என்றும் யோசிப்பார்கள். இப்படி எதை யோசித்தாலும் மிகவும் எளிதில் விரைவிலேயே அதிக சிரமம் இல்லாமல் செய்வதாக இருந்தால் நன்றாக இருக்கும் என்றும் யோசிப்பார்கள்.

இவ்வளவு யோசனைகளுக்கு நடுவில் இவர்கள் எதிர்பார்க்கும் அனைத்து விதமான தன்மைகளையும் கொண்ட ஒரு எளிமையான டிபன் அல்லது பிரேக்ஃபாஸ்ட் ரெசிபியாக தான் பிரட் உப்புமா திகழ்கிறது. இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் மிகவும் எளிமையான முறையில் பிரட் புக்மா எப்படி செய்வது என்று தான் பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

தேவையான பொருட்கள்

  • பிரட் – 6 துண்டுகள்
  • எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
  • கடுகு – 1 டீஸ்பூன்
  • கடலைப்பருப்பு – 1 டீஸ்பூன்
  • உளுந்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
  • முந்திரி – 5
  • கருவேப்பிலை – ஒரு கைப்பிடி அளவு
  • வெங்காயம் – 2
  • பச்சை மிளகாய் – 4
  • இஞ்சி – ஒரு இன்ச்
  • உப்பு – தேவையான அளவு
  • மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
  • சர்க்கரை – 1/2 டீஸ்பூன்
  • கொத்தமல்லி – ஒரு கைப்பிடி அளவு
  • எலுமிச்சை பழம் – 2

செய்முறை

பிரெட்டை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் கடாயை வைத்து கடாய் சூடானதும் அதில் எண்ணெயை ஊற்ற வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் அதில் கடுகு, உளுந்தம் பருப்பு, கடலைப்பருப்பு, முந்திரிப் பருப்பு இவற்றை சேர்த்து வறுக்க வேண்டும்.

பருப்பு நிறம் மாறியதும் அதில் கருவேப்பிலையை சேர்த்து, பொடியாக நறுக்கிய வெங்காயத்தையும் சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் நன்றாக சிவக்க வதங்கிய பிறகு பச்சை மிளகாய் எடுத்து மிக்ஸி ஜாரில் போட்டு ஒன்றிரண்டாக அரைத்து வெங்காயத்துடன் சேர்க்க வேண்டும். இஞ்சியை பொடியாக நறுக்கி அதையும் சேர்க்க வேண்டும்.

- Advertisement -

இப்பொழுது பச்சை மிளகாய் மற்றும் இஞ்சியின் பச்சை வாடை நீங்கும் வரை வதக்க வேண்டும். பிறகு சிறிதளவு மட்டும் உப்பு சேர்க்க வேண்டும். பிரட்டில் உப்பு இருக்கும் என்பதால் குறைந்த அளவே உப்பை சேர்க்க வேண்டும். பிறகு இதில் மஞ்சள் தூள், சர்க்கரை இரண்டையும் சேர்த்து ஒரு நிமிடம் வரை வதக்கி விட்டு நாம் நறுக்கி வைத்திருக்கும் பிரட் துண்டுகளை அதில் சேர்த்து வதக்க வேண்டும்.

பிறகு அதற்கு மேல் கொத்தமல்லி தலையை தூவி இரண்டு எலுமிச்சை பழங்களில் இருந்து சாறு எடுத்துக்கொண்டு அதில் ஊற்றி அதையும் நன்றாக கிளற வேண்டும். பிறகு இரண்டு கைப்பிடி அளவு தண்ணீரை பிரட்டில் தெளித்து நன்றாக ஒரு நிமிடம் வரை கிளறிவிட்டு அடுப்பில் இருந்து இறக்கி விடலாம். முட்டை சாப்பிடுபவர்கள் முட்டையை பொடிமாஸ் செய்து இந்த பிரெட் உடன் சேர்த்து சாப்பிட இன்னும் அதிக சுவையுடன் இருக்கும்.

இதையும் படிக்கலாமே: மாம்பூ சட்னி செய்முறை

தினமும் ஒரே வகையான டிபனை செய்து தருவதற்கு பதிலாக இப்படி பல வகைகளில் வேறு விதமான பொருட்களையும் டிபனாக செய்து தந்தால் குழந்தைகளும் பெரியவர்களும் சலிப்பின்றி விரும்பி சாப்பிடுவார்கள்.

- Advertisement -