நாலு ஸ்லைஸ் பிரட் இருந்தால் போதும் காலை டிபனுக்கு என்ன செய்வது என்ற டென்ஷனை இல்லாமல் சுலபமான முறையில் இந்த பிரட் ஊத்தப்பம் தயார் செய்து விடலாம்.

bread uttapam
- Advertisement -

காலையில் எழுந்தும் என்ன டிபன் செய்வது என்பது தான் பெண்களுக்கு இருக்கும் மிகப் பெரிய டென்சனே. அதிலும் இந்த காலை உணவு உடலுக்கு ஆரோக்கியமானதாகவும் இருக்க வேண்டும். அதே நேரத்தில் சீக்கிரம் செய்து முடிப்பதாக இருக்க வேண்டும். இனி அந்த கவலை உங்களுக்கு வேண்டாம் இந்த சமையல் குறிப்பு பதிவில் ரொம்பவே சுலபமான பிரட் ஊத்தப்பம் எப்படி செய்வது என்பதை பற்றியும் தெரிந்து கொள்ள போகிறோம்.

தேவையான பொருட்கள்

பிரட் – 4 துண்டுகள், வெங்காயம் -1, தக்காளி -1, பச்சை மிளகாய் – 1,கேரட் – 1, மிளகாய் தூள் -1/2 ஸ்பூன், கோதுமை மாவு – 2 ஸ்பூன், ரவை – 2 ஸ்பூன், தயிர் – 2 ஸ்பூன், உப்பு – 1/4 டீஸ்பூன், எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்.

- Advertisement -

செய்முறை

இந்த பிரட் ஊத்தப்பம் செய்வதற்கு முதலில் 4 பிரட் துண்டுகளை எடுத்துக் கொள்ளுங்கள். அதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைத்துக் கொஞ்சம் கொரகொரப்பாக அரைத்து இதை ஒரு பவுலில் மாற்றி விடுங்கள். இத்துடன் கோதுமை மாவு, ரவை, (இதற்கு வறுத்த ரவை, வறுக்காத ரவை, எதுவாக இருந்தாலும் பரவாயில்லை) ஆகியவற்றை சேருங்கள்.

பிறகு அத்துடன் மிளகாய் தூள், வெங்காயம், தக்காளி, கேரட், பச்சை மிளகாய் இவை அனைத்தையும் பொடியாக நறுக்கி இந்த பிரட் பவுடரில் கலந்து அதிகம் புளிக்காத தயிர், உப்பு சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் சேர்த்துக் கலந்து விடுங்கள். இவையெல்லாம் கலந்த பிறகு ஐந்து நிமிடம் அப்படியே வைத்து விடுங்கள். இது மாவு தோசை மாவு பதத்திற்கு இருந்தால் போதும். பிரட் ஊத்தப்பம் செய்வதற்கு மாவு தயாராகி விட்டது.

- Advertisement -

இப்போது அடுப்பில் தோசை கல்லை வைத்து சூடானதும் ஊத்தப்பம் மாவை நன்றாக அடித்து எடுத்து தோசை போல ஊற்ற வேண்டியது தான். இது ஊத்தப்பம் என்பதால் சற்று தடிமனாகவே ஊற்றிக் கொள்ளுங்கள். அப்போது சாப்பிடும் போது பஞ்சு போல சாப்ட்டாக இருக்கும்.

தோசை கல்லில் ஊற்றிய பிறகு எண்ணெய் விட்டு இரண்டு புறமும் திருப்பி போட்டு விட்டு எடுத்து விடுங்கள். சுவையான பிரட் ஊத்தப்பம் சுலபத்தில் ரெடி. பத்தே நிமிடத்தில் சைடு டிஷ் இல்லாமல் ருசியாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க கூடிய காலை டிபன் தயாராகி விட்டது.

இதையும் படிக்கலாமே: 10 நிமிஷத்தில் ரேஷன் அரிசியில் மணக்க மணக்க நாவில் கரையும் வெண் பொங்கல் எப்படி வைக்கணும் தெரியுமா?

இதில் கேரட்டிற்கு பதில் பீட்ரூட், பீன்ஸ், இப்படி உங்களுக்கு தேவையான காய்கறிகள் எது வேண்டுமானாலும் சேர்த்துக் கொள்ளலாம். இதில் காய்கறிகள் சேர்த்து செய்வதால் குழந்தைகளின் உடலுக்கும் நல்லது. குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள் செய்து கொடுத்துப் பாருங்கள். நீங்களும் உங்க வீட்டில் இந்த பிரட் ஊத்தப்பத்தை ஒருமுறை ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -