Ven Pongal : ரேஷன் அரிசியில் நாவில் கரையும் வெண் பொங்கல் இப்படி செய்யலாம்

pacharisi-pongal_tamil
- Advertisement -

நாவில் கரையும் வெண்பொங்கல் வைக்க கடையில் தான் பச்சரிசி வாங்க வேண்டும் என்று இல்லை. ரேஷன் கடையில் கொடுக்கும் பச்சரிசியிலே ரொம்ப சுவையாக இப்படி செய்யும் பொழுது பொங்கல் அருமையாக வரும். நீங்களும் பத்து நிமிஷத்தில் ரேஷன் அரிசியில் நாவில் கரையக்கூடிய மணக்க மணக்க பொங்கல் ரெசிபி இதே மாதிரி ட்ரை பண்ணி பாருங்க, இனி அடிக்கடி பொங்கல் செய்ய ஆரம்பிச்சுடுவீங்க! இந்த வெண் பொங்கல் எப்படி செய்வது பார்ப்போமா?

தேவையான பொருட்கள்

ரேஷன் பச்சரிசி – முக்கால் டம்ளர், சிறு பருப்பு – கால் டம்ளர், நெய் – நான்கு டேபிள் ஸ்பூன், மிளகு – ஒரு ஸ்பூன், சீரகம் – ஒரு ஸ்பூன், துருவிய இஞ்சி – ஒரு டீஸ்பூன், முந்திரிப் பருப்பு – 10, கருவேப்பிலை – ஒரு கொத்து, பச்சை மிளகாய் – ஒன்று, பெருங்காயத்தூள் – ரெண்டு சிட்டிகை, உப்பு – தேவையான அளவு, தண்ணீர் – மூன்று டம்ளர்.

- Advertisement -

செய்முறை

வெண்பொங்கல் செய்வதற்கு முதலில் ரேஷன் பச்சரிசியை கல், குருணை எல்லாம் நீக்கி நன்கு சுத்தம் செய்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். முக்கால் டம்ளர் அரிசிக்கு கால் டம்ளர் அளவிற்கு சிறு பருப்பு சேர்த்து நன்கு களைந்து அலசி தண்ணீர் ஊற்றி அரை மணி நேரம் ஊற விட்டு விடுங்கள். அரிசி ஊறுவதற்குள் தேவையான மற்ற எல்லா பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

இப்போது குக்கரை அடுப்பில் வைத்து பற்ற வைத்துக் கொள்ளுங்கள். குக்கரில் 2 டேபிள் ஸ்பூன் அளவிற்கு நெய் விட்டுக் கொள்ளுங்கள். நெய் நன்கு காய்ந்ததும் ஒன்றிரண்டாக இடித்து வைத்துள்ள சீரகம் மற்றும் மிளகு ஆகியவற்றை சேர்த்து லேசாக வறுத்துக் கொள்ளுங்கள். இதனுடன் துருவிய இஞ்சி, பொடித்து வைத்துள்ள முந்திரி பருப்புகளையும் சேர்த்து வதக்குங்கள்.

- Advertisement -

ஒரு சிறு பச்சை மிளகாய் பிளேவருக்காக சிறு சிறு துண்டுகளாக நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். இதனுடன் ஒரு கொத்து கருவேப்பிலை சேர்த்து வறுத்துக் கொள்ளுங்கள். அனைத்தும் நன்கு வறுப்பட்டு வந்ததும் ரெண்டு சிட்டிகை பெருங்காயத்தூள் சேர்த்து மூன்று டம்ளர் அளவிற்கு தண்ணீர் விட்டு தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து கொதிக்க விடுங்கள்.

இதையும் படிக்கலாமே:
டேஸ்டியான நாவூரும் பிரட் அல்வா இனி பிரியாணி கூட மட்டுமல்ல நம்ம வீட்டிலேயே 10 நிமிஷத்தில் செய்து சாப்பிடலாமே!

தண்ணீர் நன்கு கொதித்ததும் ஊற வைத்துள்ள தண்ணீரை வடிகட்டி விட்டு, அரிசி மற்றும் பருப்பை மட்டும் சேர்த்துக் கொள்ளுங்கள். ஒருமுறை நன்கு கலந்து விடுங்கள். ஒரு கொதி வந்ததும் குக்கரை மூடி மூன்று விசில் விட்டு எடுத்துக் கொள்ளுங்கள். குழைய நன்கு வெந்து வந்திருக்கும். அதன் பிறகு ரெண்டு டேபிள் ஸ்பூன் அளவிற்கு மேலே நெய் விட்டு நன்கு கிண்டி விடுங்கள். அவ்வளவுதான், ரொம்பவே சூப்பரான டேஸ்டியான மணக்க மணக்க நாவில் கரையும் பொங்கல் ரேஷன் அரிசியில் செம்மையாக தயாராக இருக்கும். இதே மாதிரி நீங்களும் பொங்கல் ரெசிபி செஞ்சு ட்ரை பண்ணி பாருங்க, இனி அடிக்கடி உங்க வீட்டில் வெண் பொங்கல் தான்.

- Advertisement -