ஒருவர் எந்த அளவிற்கு புத்துணர்ச்சியுடன் இருக்கிறார்களோ அந்த அளவிற்கு அவர்களும் உற்சாகமாக இருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. புத்துணர்ச்சிக்கும் உற்சாகத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. அதே போல் தான் யாராவது ஒருவர் சோர்வாக இருக்கும் பட்சத்தில் அவர்களுடைய நடவடிக்கையில் ஒருவித சோம்பேறித்தனம் என்பது உண்டாகும். நம்முடைய முகத்தின் பிரதிபலிப்பே நம்முடைய செயல்பாட்டின் பிரதிபலிப்பாகவும் திகழ்கிறது. அந்த வகையில் சோர்வாக இருக்கக்கூடிய நம்முடைய முகத்தை மென்மையான பளபளப்பான புத்துணர்ச்சியான முகமாக மாற்றுவதற்கு பயன்படுத்த வேண்டிய ஒரு ஃபேஸ் பேக்கை பற்றி தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.
பளபளப்பான முகத்தைப் பெற
நாம் என்னதான் சுறுசுறுப்பாக இருந்தாலும் நம்முடைய முகத்தில் ஒருவித சோர்வு தெரியும் பட்சத்தில் நம்மால் அந்த அளவிற்கு சுறுசுறுப்பாக செயல்பட முடியாது என்றே கூற வேண்டும். முகத்தில் சோர்வு ஏற்படுவதற்கு முக்கியமான காரணமாக பல விஷயங்கள் இருக்கின்றன. கண்களில் சோர்வு ஏற்பட்டாலும் முகத்தில் ஒருவித சோர்வு ஏற்படும். இதற்கு நாம் சரியாக உறங்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். அதையும் தவிர்த்து சருமத்தில் ஏதேனும் புத்துணர்ச்சி குறைவாக இருக்கும் பட்சத்தில் முக சோர்வு என்பது உண்டாகும். இதை நீக்குவதற்கு வீட்டிலேயே எளிமையான முறையில் சில வழிமுறைகளை பின்பற்றலாம்.
முதலில் நாம் புத்துணர்ச்சியுடன் திகழ வேண்டும் என்றால் ஒரு நாளைக்கு குறைந்தது 6 மணி நேரமாவது நிம்மதியான உறக்கத்தை மேற்கொள்ள வேண்டும். அதோடு இரவு நேரத்தில் அதிகப்படியாக கைபேசிகளையும் தொலைக்காட்சியையும் பார்ப்பதை தவிர்க்க வேண்டும். குறைந்தது ஒரு நாளைக்கு மூன்று லிட்டர் தண்ணீராவது குடிக்க வேண்டும். இந்த வழிமுறைகளை பின்பற்றினாலே நாம் புத்துணர்ச்சியுடன் திகழ முடியும். இதோடு சேர்த்து நம்முடைய முகத்திற்கு ஒரு ஃபேஸ் பேக்கை நாம் பயன்படுத்தினோம் என்றால் முகம் என்றும் மென்மையாகவும் பளபளப்பாகவும் புத்துணர்ச்சியாகவும் திகழும்.
இதற்கு நமக்கு அரிசி மாவு இருந்தால் போதும். இரண்டு ஸ்பூன் அளவிற்கு அரிசி மாவை ஒரு கிண்ணத்தில் போட்டுக் கொள்ளுங்கள். அதில் ஒரு ஸ்பூன் அளவிற்கு சுத்தமான தேனை ஊற்றுங்கள். பிறகு இதை ஃபேஸ் பேக் பதத்திற்கு மாற்றுவதற்கு காய்ச்சாத பாலை ஊற்றி கலந்து கொள்ளுங்கள். இப்பொழுது முகத்தை நன்றாக கழுவிவிட்டு இந்த ஃபேஸ் பேக்கை முகத்திலும் கழுத்திலும் நன்றாக தடவி 15 நிமிடம் வைத்திருந்தால் போதும். பிறகு மெதுவாக வட்ட வடிவில் மசாஜ் செய்து முகத்தை கழுவி விட வேண்டும். அவ்வளவுதான். எவ்வளவு சோர்வாக இருக்கக்கூடிய முகமும் மென்மையாகவும் பளபளப்பாகவும் புத்துணர்ச்சியாகவும் மாறிவிடும்.
இதையும் படிக்கலாமே:மாம்பழ ஃபேஸ் பேக்
முகத்தில் இருக்கக்கூடிய இறந்த செல்களை நீக்குவதோடு சோர்வையும் நீக்கி முகத்தை பொலிவாகவும் பிரகாசமாகவும் மென்மையாகவும் மாற்றுவதற்கு உதவக்கூடிய இந்த ஃபேஸ் பேக்கை ஒரு முறை பயன்படுத்தி பாருங்கள் நல்ல பலன் கிடைக்கும்.