இட்லி தோசைக்கு சைடிஷ் ஆக சட்னி வகைகளை எடுத்துக் கொண்டால் எத்தனையோ வகைகள் சொல்லிக் கொண்டே போகலாம். அந்த வகையில் சட்னி என்றாலே அதை மிக்ஸியில் அரைப்பது தான். இந்த சமையல் குறிப்பு பதிவில் கொஞ்சம் வித்தியாசமாக குக்கரில் சட்னி தாளிப்பது எப்படி என்று தான் தெரிந்து கொள்ள போகிறோம். இந்த வித்தியாசமான சட்னி ரெசிபியை தெரிஞ்சு வச்சுக்கிட்டா அவசர நேரத்துல சட்டுனு சமையல முடிச்சிடலாம். வாங்க இப்போ அந்த சட்னி எப்படி செய்யறதுன்னு பார்க்கலாம்
தேவையான பொருட்கள்
வெங்காயம் – 2, தக்காளி – 3, கத்திரிக்காய் நறுக்கியது – 1 கப், பூண்டு பல் – 4, வெந்தயம் – 1/4 டீஸ்பூன், மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன், உப்பு -1/2 டீஸ்பூன், பெருங்காயம் -1/4 டீஸ்பூன், நல்லெண்ணெய் -2 டீஸ்பூன். காய்ந்த மிளகாய் – 5.
செய்முறை
இந்த சட்னி செய்ய முதலில் குக்கரில் ஒரு டம்ளர் அளவு தண்ணீர் ஊற்றிக் கொள்ளுங்கள். அடுத்ததாக வெங்காயத்தை தோலுரித்து பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். அதே போல் தக்காளியும் சேர்த்த பிறகு அரிந்து வைத்த ஒரு கப் கத்திரிக்காயும் சேர்த்து பூண்டு, மஞ்சள், வெந்தயம், உப்பு என அனைத்தையும் சேர்த்த பிறகு காய்ந்த மிளகாயை சின்ன சின்ன துண்டுகளாக கிள்ளி போடுங்கள்.
இப்போது அடுப்பில் குக்கரை வைத்து ஒரு விசில் வரும் வரை காத்திருந்து அதன் பிறகு அடுப்பை அனைத்து விடுங்கள். குக்கரில் இருந்து விசில் முழுவதுமாக இறங்கிய பிறகு முடியை திறந்து இந்த சட்னியை மத்து அல்லது மேஷர் வைத்து கடந்து விடுங்கள். இதை மைய கடைய கூடாது கொஞ்சம் கொரகொரப்பாக இருக்க வேண்டும்.
கடைசியாக இந்த சட்னியின் மேல் நல்லெண்ணெய் ஊற்றி ஒரு முறை கலந்து விட்டால் போதும் அருமையான சட்னி நிமிடத்தில் தயார். இது செய்வது மிக மிக சுலபம் ஆனால் டேஸ்ட் அட்டகாசமாக இருக்கும். இதை தாளிக்க வேண்டிய அவசியம் கூட இல்லை ஒரே விசிலில் அட்டகாசமான சட்னி ரெசிபி தயார் பண்ணலாம்.
இந்த சட்னி செய்முறை மட்டும் தெரிந்து வைத்துக் கொண்டால் போதும். அவசர நேரத்தில் சட்டு என்று இதை செய்து முடித்து விடலாம். இதை அனைவரும் விரும்பியும் சாப்பிடுவார்கள் அதை நேரத்தில் சுவையும் நன்றாக இருக்கும். மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க.