இதய நோய் மற்றும் புற்றுநோய் வராமல் தடுக்க உதவக்கூடிய கத்திரிக்காயை வைத்து இப்படி ஒரு முறை கத்திரிக்காய் சட்னி செய்து பாருங்கள். கத்திரிக்காய் சாப்பிடாதவர்கள் கூட இந்த சட்னியை ருசித்து சாப்பிடுவார்கள்.

kathirikai chutney
- Advertisement -

கத்திரிக்காயை நாம் அனைத்து குழம்பு வகைகளிலும் சேர்த்து சமைப்போம். ஆனால் பல பேர் இந்த கத்திரிக்காய் தங்களுடைய உணவில் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள். அதை சாப்பிடும் பொழுது தனியாக ஒதுக்கி வைத்து விடுவார்கள். அலர்ஜி தன்மை உள்ளவர்கள் சாப்பிடாமல் இருப்பது நல்லது என்றாலும், மற்றவர்கள் இதை கண்டிப்பான முறையில் தங்களுடைய உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அப்படி விருப்பம் இல்லாதவர்கள் கூட விரும்பி ருசித்து சாப்பிடும் வகையில் கத்திரிக்காயை வைத்து எப்படி சட்னி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்கப் போகிறோம்.

கத்திரிக்காயில் வைட்டமின் சி, ஈ போன்ற சத்துக்கள் இருக்கின்றன. மேலும் இரும்புச்சத்து, பாஸ்பரஸ் போன்றவையும் இருக்கிறது. கத்திரிக்காயை நாம் சாப்பிடுவதால் சளி, இருமல் போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்க முடியும். மேலும் உடல் பருமனை குறைப்பதற்கு கத்திரிக்காய் மிகவும் உதவி செய்கிறது. இதய நோய், புற்றுநோய் போன்றவை வராமல் தடுக்கவும் உதவுகிறது. சர்க்கரை நோய் மற்றும் ரத்த அழுத்தம் இருப்பவர்கள் கத்திரிக்காயை உணவில் சேர்த்துக் கொண்டால் அதன் அளவை கட்டுக்குள் வைத்துக்கொள்ள முடியும். மேலும் கத்திரிக்காயை நாம் உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் செரிமான கோளாறுகள் நீங்கி மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படாது. குறிப்பு அலர்ஜி தன்மை இருப்பவர்களும், உடலில் காயங்கள் ஏற்பட்டவர்களும், ஆபரேஷன் செய்தவர்களும் இந்த கத்திரிக்காவை தங்கள் உணவில் சேர்த்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.

- Advertisement -

செய்முறை 

அடுப்பில் கடாயை வைக்க வேண்டும். கடாய் நன்றாக சூடானதும் அதில் 2 ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்த பிறகு அதில் ஒரு துண்டு கட்டி பெருங்காயத்தை போட வேண்டும். பிறகு அதனுடன் ஒரு ஸ்பூன் அளவிற்கு கடலை பருப்பும், ஒரு ஸ்பூன் அளவிற்கு உளுந்தம் பருப்பும் சேர்த்து நன்றாக வறுக்க வேண்டும். இவை அனைத்தும் நன்றாக புரிந்த பிறகு அதை எடுத்து தனியாக ஒரு தட்டில் வைத்து விட வேண்டும்.

பிறகு அதே கடாயில் 3 பச்சை மிளகாய் மற்றும் 3 வர மிளகாய் சேர்க்க வேண்டும். 6 பல் பூண்டை சேர்க்க வேண்டும். பெரிய வெங்காயம் ஒன்றை நறுக்கி சேர்த்துக் கொள்ள வேண்டும். வெங்காயம் வதங்கிய பிறகு அதில் நறுக்கி வைத்திருக்கும் ஒரு தக்காளியை சேர்த்துக் கொள்ள வேண்டும். தக்காளி வதங்க ஆரம்பிக்கும் பொழுது ஒரு சிறிய நெல்லிக்காய் அளவிற்கு புளியை அதில் சேர்த்து, மூன்று கத்திரிக்காய்களை நறுக்கி அதில் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். கத்திரிக்காய், வெங்காயம், தக்காளி மூன்றும் நன்றாக வதங்கிய பிறகு அதில் துருவிய தேங்காய் 5 ஸ்பூன் அளவிற்கு சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். அனைத்தும் நன்றாக வதங்கியதும் அதை அடுப்பில் இருந்து இறக்கிவிட்டு ஆற வைக்க வேண்டும்.

- Advertisement -

இப்பொழுது ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் வறுத்து வைத்திருக்கும் கடலைப்பருப்பு, உளுந்தம் பருப்பை போட்டு ஒரு முறை ஆட்டிவிட்டு, பிறகு வதக்கி வைத்திருக்கும் வெங்காயம் தக்காளி கத்திரிக்காவை சேர்த்து தேவையான அளவு உப்பையும் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும். இந்த சட்னியை தாளிப்பதற்கு தாளிக்கும் கரண்டியில் ஒரு ஸ்பூன் அளவிற்கு நல்லெண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் அதில் கடுகு, உளுந்து, கருவேப்பிலை மற்றும் ஒரு வரமிளகாயை கிள்ளி போட்டு நன்றாக பொரிந்ததும் சட்னியில் சேர்த்து விட வேண்டும். அவ்வளவுதான் சுலபமான கத்திரிக்காய் சட்னி தயாராகிவிட்டது.

இதையும் படிக்கலாமே: கல்யாண வீட்டு காரக்குழம்பே தோத்து போற அளவுக்கு அட்டகாசமான சுவையில் குடைமிளகாய் காரக்குழம்பை இப்படி செஞ்சு பாருங்க. இனி காரக்குழம்புன்னாலே அது குடைமிளகாய் காரக்குழம்பு தான்.

கத்திரிக்காய் என்று தெரியாமலேயே இந்த சட்னியை அனைவரும் இட்லி, தோசை சப்பாத்தி என்று அனைத்திற்கும் வைத்து சாப்பிடுவார்கள்.

- Advertisement -