கத்திரிக்காயில் கடாய் ஃப்ரை கூட செய்யலாமா? டேஸ்ட்ல சிக்கன் வறுவல் தோத்து போகும். சும்மா ஒரு வாட்டி ட்ரை பண்ணி தான் பாருங்களேன்.

brinjal-fry1
- Advertisement -

கத்திரிக்காயை வைத்து முற்றிலும் புதுவிதமான ஒரு சைட் டிஷ் இது. இந்த வருவலை செய்து வைத்துக் கொண்டால், ரசம் சாதம், தயிர் சாதம் இவைகளை சூப்பராக சாப்பிடலாம். சிம்பிளாக ஒரு லஞ்ச் மெனு செய்யும் போது, இதை ட்ரை பண்ணி பாருங்க. வெரைட்டி ரைஸ்க்கு லஞ்ச் பாக்ஸில் கட்டிக் கொடுக்கவும் இந்த பிரை ரெசிபி சூப்பரா இருக்கும். இது கத்தரிக்காய் வறுவலா அல்லது கறி வறுவலா என்ற டவுட் வீட்டில் இருப்பவர்கள் அனைவருக்கும் வரும். அத்தனை வாசம் நிறைந்த ரெசிபி இது. வாங்க இதை எப்படி செய்வது என்று நாமும் தெரிந்து கொள்வோம்.

செய்முறை

இதற்கு முதலில் நான்கு பெரிய சைஸ் கத்தரிக்காய்களை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த கத்திரிக்காயை வட்ட வடிவில் கொஞ்சம் திக்காக கட் பண்ணி தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். இந்த கத்திரிக்காய் அப்படியே இருக்கட்டும்.

- Advertisement -

அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் பட்டை – 1 சின்ன துண்டு, கிராம்பு – 3, மிளகு – 1 ஸ்பூன், வர மல்லி – 2 டேபிள் ஸ்பூன், வர மிளகாய் – 7, பூண்டு பல் – 4, அன்னாசிப்பூ – 1, மராத்தி மொக்கு – 1, இந்த பொருட்களை எல்லாம் போட்டு 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும். பிறகு ஆறவைத்து இந்த பொருட்களை எல்லாம் மிக்ஸி ஜாரில் போட்டு கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி விழுதாக அரைத்துக் கொள்ளுங்கள்.

கொஞ்சம் திக் பேஸ்ட் ஆக அரைத்துக் கொள்ளுங்கள். அரைத்த இந்த விழுதை ஒரு தட்டில் கொட்டி அதில் கொஞ்சம் மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு, போட்டு கலக்கவும். இப்போது இந்த பேஸ்டை எடுத்து வெட்டி வைத்திருக்கும் கத்தரிக்காய் மேலே தடவ வேண்டும். நேரம் இருந்தால் மசாலா தடவிய கத்தரிக்காய் கொஞ்ச நேரம் ஊற வைக்கலாம். அப்படியே 10 நிமிடம் பிரிட்ஜில் வைத்தால் கூட கத்தரிக்காயில் இந்த மசாலா விழுதின் சுவை இறங்கும்.

- Advertisement -

பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து 4 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, மசாலாவில் நன்றாக ஊறி இருக்கும் கத்தரிக்காய்களை அடுக்கி இரண்டு பக்கமும் பொன்னிறமாக சிவக்க விட்டு கத்தரிக்காயை வேக வைத்து எடுத்தால் சூப்பரான கத்திரிக்காய் ஃப்ரை தயார். அடுப்பை சிம்மில் வைத்து வேக வையுங்கள். கத்திரிக்காய் அப்போதுதான் வெந்து மொறுமொறுப்பாக நமக்கு கிடைக்கும். இதனுடைய ருசி அவ்வளவு அருமையா இருக்குங்க மிஸ் பண்ணாம ஒரு வாட்டி ட்ரை பண்ணி பாருங்க.

இதையும் படிக்கலாமே: நல்ல எடுப்பான தோற்றத்துடன் ஆரோக்கியமாக வாழ ராஜாக்கள் பயன்படுத்திய கருப்பு கவுனி அரிசியை வாரம் இரு முறை இப்படி சாப்பிட்டால் 60 வயதிலும் 20 வயது போல இளமையாக இருப்பீர்கள்.

வட்ட வட்டமாக கத்தரிக்காய் நறுக்கி நிறைய நேரம் தண்ணீரில் போட்டு வைக்காதீங்க. உடனடியாக காயை நறுக்கியவுடன் இந்த மசாலாவை தடவி ஊறவைத்து விடுங்கள். அப்போதுதான் கத்திரிக்காயில் இருந்து தண்ணீர் விடாமல் சுவையாக இந்த ஃப்ரை தயாராகி கிடைக்கும். இதே போல வாழைக்காய், உருளைக்கிழங்கு, கருணைக்கிழங்கு போன்ற மற்ற காய்கறிகளை வருபதற்கு கூட இந்த மசாலாவை நாம் பயன்படுத்திக் கொள்ளலாம்.

- Advertisement -