- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்கத்தரிக்காய் வைத்து பொரியல், குழம்பு இவற்றை தான் அதிகமாக செய்திருக்கிறோம். ஒருமுறை இவ்வாறு கூட்டு செய்து...

கத்தரிக்காய் வைத்து பொரியல், குழம்பு இவற்றை தான் அதிகமாக செய்திருக்கிறோம். ஒருமுறை இவ்வாறு கூட்டு செய்து பாருங்கள், மிகவும் அற்புதமான சுவையில் இருக்கும்

- Advertisement -

அனைவரது வீட்டிலும் அதிகமாக வாங்கக்கூடிய காய்கறிகளில் இந்த கத்திரிக்காயும் ஒன்று தான். ஏனென்றால் கத்தரிக்காயை சாம்பார், குருமா, காரக்குழம்பு போன்ற அனைத்திலும் பயன்படுத்திக் கொள்ளலாம். அவ்வாறு கத்தரிக்காய் பொரியல், கத்தரிக்காய் முருங்கைக்காய் பொரியல், கத்தரிக்காய் உருளைக்கிழங்கு பொரியல் என பல காய்கறிகளுடன் இதனை சேர்த்து சமைக்க முடியும். அவ்வாறு கத்தரிக்காய் சேர்த்து செய்யும் அனைத்து உணவுகளும் மிகவும் சுவையாக இருக்கும். கத்தரிக்காயில் இப்படி பல உணவுகள் செய்தாலும் ஒரு முறை இப்படி கூட்டு செய்து பாருங்கள். இதன் தனிப்பட்ட சுவை அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். இதனை சுட சுட சாதத்துடன் பிசைந்து சாப்பிட அவ்வளவு அருமையாக இருக்கும். வாருங்கள் இந்த சுவையான கத்தரிக்காய் கூட்டை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
கத்தரிக்காய் – கால் கிலோ, சின்ன வெங்காயம் – 100 கிராம், தக்காளி – 2, தேங்காய் – அரைமூடி, பூண்டு – 2 பல், தனியா தூள் – ஒரு ஸ்பூன், மிளகாய் தூள் – அரை ஸ்பூன், புளி – நெல்லிக்காய் அளவு, உப்பு – முக்கால் ஸ்பூன், மஞ்சள் தூள் – அரை ஸ்பூன், பெருங்காயத்தூள் – கால் ஸ்பூன், வெந்தயத்தூள் – கால் ஸ்பூன், நல்லெண்ணெயை – 3 ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து, கடுகு – அரை ஸ்பூன், உளுத்தம் பருப்பு – அரை ஸ்பூன், கடலைப்பருப்பு – அரை ஸ்பூன்.

- Advertisement -

செய்முறை:
முதலில் அரை மூடி தேங்காயை அரை அங்குல அளவிற்கு சிறு சிறு துண்டுகளாக வெட்டி வைக்க வேண்டும். பின்னர் இவற்றிலிருந்து இரண்டு ஸ்பூன் அளவு தேங்காயை எடுத்து, மிக்ஸியில் சேர்த்து, நன்றாக அரைத்து, தேங்காய் பால் எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து, மீதமிருக்கும் தேங்காயை லேசாக வறுத்து வைக்க வேண்டும்.

பின்னர் புளியை ஊறவைத்து புளிக்கரைசல் எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு வெங்காயம் மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவேண்டும். பின்னர் கத்தரிக்காயை நீளவாக்கில் நறுக்கி, தண்ணீரில் போட்டு வைக்க வேண்டும். பிறகு அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு கடாயை வைத்து, கடாய் நன்றாக சூடானதும் அதில் மூன்று ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்ற வேண்டும்.

- Advertisement -

எண்ணெய் நன்றாக காய்ந்ததும் அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும். பின்னர் இவற்றுடன் நறுக்கி வைத்துள்ள வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கிக் கொள்ள வேண்டும். அதன் பிறகு இவற்றுடன் மஞ்சள்தூள், வெந்தயத்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து கலந்து விடவேண்டும்.

பின்னர் தக்காளியையும் சேர்த்து நன்றாக வதக்கி விட்டு, அதன் பிறகு நறுக்கி வைத்துள்ள கத்தரிக்காய் மற்றும் வதக்கி வைத்துள்ள தேங்காய் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பிறகு இவற்றுடன் தனியாத்தூள், மிளகுத்தூள், உப்பு சேர்த்து கலந்து விட்டு, தேவையான அளவு புளி தண்ணீர் ஊற்றி கொதிக்க விட வேண்டும். பின்னர் இறுதியாக எடுத்து வைத்துள்ள தேங்காய் பாலை சேர்த்து, சிறிதளவு கொத்தமல்லி தழையை தூவி விட்டு நன்றாக கொதிக்க விட வேண்டும்.

சற்று முன்