- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்கத்தரிக்காய் பொரியலை இப்படி செய்து பாருங்கள் வேண்டாம் என்று சொல்பவர்களும் விருப்பமாக சாப்பிடுவார்கள்

கத்தரிக்காய் பொரியலை இப்படி செய்து பாருங்கள் வேண்டாம் என்று சொல்பவர்களும் விருப்பமாக சாப்பிடுவார்கள்

- Advertisement -

காய்கறி என்றாலே பலரும் மருந்து சாப்பிடுவது போன்று தான் சாப்பிடுவார்கள். இதனை விரும்பி சாப்பிடுவது கிடையாது. அதிலும் ஒரு சில காய்கறிகளை சுத்தமாக எடுத்துக் கொள்வதே கிடையாது. அவ்வாறு கத்தரிக்காய், பாகற்காய், முள்ளங்கி போன்ற காய்கறிகளை பலரும் வேண்டாம் என்று தான் நினைக்கிறார்கள். வீட்டில் இவற்றை வாங்கி சமைப்பதையே தவிர்த்து விடுகிறார்கள். ஆனால் இவ்வாறு காய்கறிகளை சாப்பிடாமல் ஒதுக்கி வைப்பது நமக்கு தான் கெடுதல் விளைவிக்கிறது. ஏனென்றால் காய்கறிகளில் மட்டும் தான் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்து இருக்கிறது. இவற்றை சிறிதளவாவது அன்றாடம் நமது உணவுடன் சேர்த்துக் கொள்ளவேண்டும். பலரும் விரும்பி சாப்பிடாத இந்த கத்தரிக்காயை ஒருமுறை இவ்வாறு செய்தால் போதும். வேண்டாம் என்று சொல்பவர்கள் கூட தட்டாமல் சாப்பிடுவார்கள். வாருங்கள் இதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
கத்தரிக்காய் – அரை கிலோ, பெரிய வெங்காயம் – 2, பச்சை மிளகாய் – 3, கடுகு – அரை ஸ்பூன், சோம்பு – அரை ஸ்பூன், கடலைப்பருப்பு – ஒரு ஸ்பூன், உளுத்தம் பருப்பு – அரை ஸ்பூன், மஞ்சள்தூள் – அரை ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து, தேங்காய் – கால் மூடி, சீரகம் – ஒரு ஸ்பூன், உப்பு – முக்கால் ஸ்பூன், எண்ணெய் – 3 ஸ்பூன்.

- Advertisement -

செய்முறை:
முதலில் கத்திரிக்காயை சுத்தமாக கழுவி பொடியாக நறுக்கி வைக்க வேண்டும். பிறகு இரண்டு பெரிய வெங்காயத்தையும் சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் கால் மூடி தேங்காயை பொடியாக நறுக்கிக் கொண்டு, அதனை மிக்ஸி ஜாரில் சேர்க்க வேண்டும்.

பிறகு அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது கடாயை வைத்து, 3 ஸ்பூன் எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் அதில் கடுகு, சோம்பு, உளுத்தம் பருப்பு மற்றும் கடலைப் பருப்பு சேர்த்து தாளிக்க வேண்டும். பிறகு அவற்றுடன் நறுக்கிய வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

பிறகு இவற்றுடன் பொடியாக வெட்டி வைத்துள்ள கத்தரிக்காய் துண்டுகளை சேர்த்து, அதனுடன் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு தட்டு போட்டு மூடி ஐந்திலிருந்து ஏழு நிமிடம் அப்படியே வேக வைக்க வேண்டும். இதற்கிடையே மிக்ஸி ஜாரில் வைத்துள்ள தேங்காயுடன், சீரகம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து சற்று கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு கடாய் மீதுள்ள தட்டை திறந்து, இவற்றுடன் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து, நன்றாக கலந்து விட வேண்டும். பிறகு இறுதியாக கொத்தமல்லி தழை தூவி ஒரு நிமிடம் கிளறி விட்டு உடனே அடுப்பிலிருந்து இறக்க வேண்டும். அவ்வளவு தான் சுவையான கத்தரிக்காய் பொரியல் தயாராகிவிட்டது. இதனை காரக்குழம்பு, ரசம், சாம்பார் போன்ற அனைத்து விதமான குழம்பு சாதத்துடனும் சேர்த்து சாப்பிட அவ்வளவு அருமையாக இருக்கும்.

சற்று முன்