பிரியாணி செய்யும் பொழுது நீங்கள் செய்யும் 10 தவறுகள் என்ன? இத மட்டும் தெரிஞ்சிக்கிட்டா நீங்க தான் பிரியாணி குயின்!

basmati-briyani

பிரியாணி என்றாலே அனைவருக்கும் விருப்பமான ஒரு உணவு வகையாக இருக்கின்றது. காய்கறி பிரியாணி முதல் கறி பிரியாணி வரை அனைத்து பிரியாணியும் எல்லோருடைய ஃபேவரிட் ஆக இருக்கும். இத்தகைய பிரியாணி ரெசிபி செய்வதற்கு பலரும் வயது வித்தியாசமின்றி மிகுந்த ஆர்வமும் காட்டுவார்கள். ஆனால் அதில் செய்யும் சில தவறுகளால் சரியாக செய்யாமல் சொதப்பி விடுவார்கள். அப்படி நீங்கள் பிரியாணி செய்யும் பொழுது செய்யும் தவறுகள் என்ன? இதைத் தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

basmati-rice

1. பொதுவாக பிரியாணி செய்யும் பொழுது பழைய அரிசியா? அல்லது புதிய அரிசியா? என்பதை பார்த்து வாங்க வேண்டும். பழைய அரிசியாக இருந்தால் ஒரு கப் அரிசிக்கு ஒரு கப் தண்ணீர் சேர்த்தாலே போதும். ஆனால் புதுவகையான அரிசியாக இருந்தால் ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்தால் தான் சரியாக இருக்கும். இது தான் பாசுமதி அரிசிக்கு உகந்த அளவாகும். அரை மணி நேரத்திற்கு மேல் பாஸ்மதி அரிசியை ஊற வைத்து விடக்கூடாது.

2. பிரியாணி செய்யும் பொழுது அடுப்பை அதிகமாக வைத்துக் கொண்டு வதக்கினால் நல்ல வாசம் தூக்கி கொடுக்கும். பிரியாணி நல்ல நிறமாக இருப்பதற்கு காஷ்மீரி மிளகாய்த்தூள் உபயோகிப்பது மிகவும் நல்லது. இதில் காரம் குறைவாக இருந்தாலும் கலர் தூக்கலாக இருக்கும்.

kashmiri-chilli-powder

3 பிரியாணி ருசியாக இருப்பதற்கு தேங்காய்ப்பால் அல்லது சாதாரண பால் சிறிதளவு சேர்த்துக் கொண்டால் அருமையாக இருக்கும். நீங்கள் சேர்க்கும் மசாலா சரியான அளவில் இல்லாவிட்டால் சாப்பாடு உதிரி உதிரியாக வருவதில் சிக்கல் ஏற்பட்டு விடும் எனவே மசாலாவை கவனித்து சேர்க்க வேண்டும்.

- Advertisement -

4. பிரியாணி செய்யும் பொழுது நெய் பயன்படுத்துவதை விட வெண்ணை பயன்படுத்தினால் கூடுதல் ருசியை கொடுக்கும்.

curd

5. பிரியாணிக்கு நீங்கள் தயிர் ஊற்றும் பொழுது கெட்டியாக ஊற்றுவது மிகவும் நல்லது. தண்ணீராக இருக்கும் தயிரை வடிகட்டி பின் சேர்த்துக் கொள்வது தான் மிகுந்த ருசியை கொடுக்கும்.

6. பிரியாணியில் சேர்க்கப்படும் மசாலாப் பொருட்களான பட்டை, லவங்கம், ஏலக்காய், கிராம்பு போன்றவைகள் அப்படியே சேர்க்காமல் மிக்ஸியில் அரைத்து பொடியாக்கி பின் வெங்காயம் வதக்கும் பொழுது சேர்த்தால் மிகவும் ருசியாக இருக்கும்.

annachi-poo-pattai

7. நீங்கள் தம் போட்டு செய்ய தோசைக்கல்லை பயன்படுத்தும் பொழுது அதனுடைய அளவு பாத்திரத்தின் அளவுக்கு இருக்க வேண்டும். அப்போது தான் சூடு வேகமாக சமமாக பரவும். தோசைக்கல்லை நன்கு சூடேற்றி விட்டு சிம்மில் வைத்து விட்டு பின் பாத்திரத்தை வைத்து 5 நிமிடம் அளவிற்கு விட்டு வைத்தால் போதும்! அதன் பின் அடுப்பை அணைத்தால் கூடுதல் 10 நிமிடம் வரை அந்த சூட்டிலேயே சாப்பாடு வெந்துவிடும்.

8. ஒரு கிலோ பாசுமதி அரிசிக்கு நீங்கள் பிரியாணி செய்ய இருக்கிறீர்கள் என்றால் உங்களுடைய உள்ளங்கையில் பிடிக்கும் அளவிற்கு கல் உப்பை எடுத்து சேர்த்தால் சரியாக இருக்கும்.

salt1

9. 1 கிலோ பிரியாணிக்கு 3 ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்க்கலாம். இவற்றை வதக்கும் போது நன்கு பச்சை வாசம் போக வதக்க வேண்டும். இல்லையென்றால் பிரியாணி ருசி குறையும்.

10. புதினா, மல்லித்தழை ஆகியவற்றை சேர்க்கும் போது அதிகமாகவும் சேர்த்துவிடக் கூடாது. தக்காளி சேர்த்த பின்னரே இவற்றை சேர்க்க வேண்டும். அப்போது தான் இதன் சுவை மற்றும் மணம் சாப்பாட்டில் தெரியும்.